பாகிஸ்தான் பிரபல தேநீர் கடையில் அபிநந்தனின் புகைப்படத்தை வைத்து வியாபரம்.!

பிப்ரவரி 28 அன்று பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான் "அமைதி நடவடிக்கையாக" அபிநந்தன் விடுவிக்கப்படுவார் என்று அறிவித்த பின்னர் மார்ச் 1 அன்று அவர் விடுதலை செய்யப்பட்டார்.

|

நாட்டின் வெற்றியோ அல்லது துயரமோ எதுவாக இருந்தாலும், வியாபாரம் செய்பவர்கள் எப்போதுமே தங்களின் சுயவிளம்பரத்திற்காக அல்லது லாபம் சம்பாதிப்பதற்காக அதை பயன்படுத்த முயற்சிப்பார்கள்.

பாகிஸ்தான் பிரபல தேநீர் கடையில்  அபிநந்தனின் புகைபடம்.!

இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவி வந்த போர் பதற்றங்களினால் நாடே உறைந்திருந்த போதும், தெருவோர வணிகர்கள் சிலர் போர்பதற்ற மனநிலையை தங்கள் பொருட்களை விற்க பயன்படுத்தியது , அதேசமயம் மற்றவர்கள் தங்களின் சுய விளம்பரத்திற்காக விங் கமாண்டர் அபிநந்தன் வர்மமான் நாடுதிரும்பியதை பயன்படுத்தியது போன்ற பல நிகழ்வுகளைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம்.

தேநீர் விற்பனையாளர்

தேநீர் விற்பனையாளர்

சமீபத்தில் பாகிஸ்தான் தேநீர் விற்பனையாளர் ஒருவர் அபிநந்தனின் புகைப்படத்தை தனது தேநீர் கடையின் சுவரொட்டியில் பயன்படுத்தியுள்ளார். ஆனால் உண்மையில் அவர் ஒரு நேர்மறையான செய்தியை அதில் வெளிப்படுத்தியுள்ளார்.

இதுபோன்ற தேநீர் எதிரிகளையும் நண்பர்களாக்கும்

"பாகிஸ்தானில் எங்கோ ஒரு தேநீர் கடையில், அபிநந்தனின் புகைப்படம் உள்ள சுவரொட்டி குறிப்பிடுவது யாதெனில் : 'இதுபோன்ற தேநீர் எதிரிகளையும் நண்பர்களாக்கும்' " என ட்விட்டர் பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் தேநீர் அருந்துவது போன்ற புகைபடம் அந்த பதாகையில் இடம்பெற்றுள்ளது.

 கடந்த பிப்ரவரி 27

கடந்த பிப்ரவரி 27

விங் கமாண்டர் அபிநந்தன் கடந்த பிப்ரவரி 27 அன்று ஜம்மு காஷ்மீர் பகுதியில், மிக் -21 பைசன் போர் விமானத்தில் பாகிஸ்தானின் ஜெட் விமானங்களை துரத்திசென்றபோது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

காவலில் வைக்கப்பட்டார்

காவலில் வைக்கப்பட்டார்

விமானத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேறி பாராசூட் மூலம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விழுந்த அவர் பாக்கிஸ்தானிய இராணுவத்தால் காவலில் வைக்கப்பட்டார். பிப்ரவரி 28 அன்று பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான் "அமைதி நடவடிக்கையாக" அபிநந்தன் விடுவிக்கப்படுவார் என்று அறிவித்த பின்னர் மார்ச் 1 அன்று அவர் விடுதலை செய்யப்பட்டார்.

 பி.எஸ். தானோவ்

பி.எஸ். தானோவ்

பாகிஸ்தானின் இராணுவ அதிகாரிகளால் உடல் ரீதியாக சித்திரவதை செய்யப்படவில்லை என்றாலும், அவர் மிகவும் மன வேதனைக்கு உட்படுத்தப்பட்டதாக இந்திய விமானப்படை உயர்மட்டஅதிகாரிகளிடம் விங் கமாண்டர் அபிநந்தன் தெரிவித்திருந்தார் என தகவல்கள் கூறுகின்றன.


அபிநந்தன் போதுமான உடற்தகுதி பெற்றபின் மீண்டும் விமானம் இயக்க அனுமதிக்கப்படுவார் என கடந்த மார்ச் 4 ம் தேதி தலைமை விமான மார்ஷல் பி.எஸ். தானோவ் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Aisi Chai Ki Dushman Ko Bhi Dost Banaye Pak Vendor Uses Wg Cdr Abhinandan s Photo To Sell Tea: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X