ரயில் பயணியின் ஒரு ட்வீட்: கடத்தப்பட்ட 26 சிறுமிகள் மீட்பு.!

பின்பு ரயில் நிலையத்துக்கு வந்த அதிகாரிகள் சாமானியர்களின் உடையில் ரயிலில் ஏறி குறிப்பிட்ட அந்த கோச்சில் உள்ள சிறுமிகளிடம் பேச்சு கொடுத்தனர்.

|

பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் இந்த சமூகவலைதளங்கள் மிகவும் உதவியாய் இருக்கிறது, குறிப்பாக விரைவில் தகவல்கள் மற்றும் செய்திகளை பார்ப்பதற்கு உதவியாய் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். அதன்படி உத்தரபிரதேசம் மாநிலம் முசாபர்நகரிலிருந்து பந்த்ரா செல்லும் விரைவு ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவர் அவர் இருக்கும் கோச்சில் சில சிறுமிகள் அழுது கொண்டிருப்பதை கவனித்துள்ளார்.

ரயில் பயணியின் ஒரு ட்வீட்: கடத்தப்பட்ட 26 சிறுமிகள் மீட்பு.!

பின்பு அந்த சிறுமிகள் பயந்து நடுங்கிகொண்டும், பசியால் வாடியபடி இருப்பதை கண்ட அவர், இது தொடர்பாக ட்வீட்டர் பக்கத்தில் முழு விவரத்துடன் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த ட்வீட்டர் பதிவை சில ரயில்வே அதிகாரிகள் பார்ததுள்ளனர்.

குழந்தைகள் தடுப்பு பிரவு:

குழந்தைகள் தடுப்பு பிரவு:

பின்னர் ரயில்வே அதிகாரிகள் இதுதொடர்பாக கோரக்பூர் பகுதியில் உள்ள ரயில்வே காவலர்களுக்கு தகவல் அனுப்பினர். மேலும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் குழந்தைகள் நல வாரிய அதிகாரிகளுக்கும் ரயில்வே உயரதிகாரிகள் தகவல் கொடுத்து வரவைத்தனர்.

 சாமானியர்களின் உடையில்:

சாமானியர்களின் உடையில்:

பின்பு ரயில் நிலையத்துக்கு வந்த அதிகாரிகள் சாமானியர்களின் உடையில் ரயிலில் ஏறி குறிப்பிட்ட அந்த கோச்சில் உள்ள சிறுமிகளிடம்
பேச்சு கொடுத்தனர். ஆனால் அந்த சிறுமிகள் அச்சத்துடன் பேசவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அங்கு இருந்த இரண்டு ஆண்களிடம்
விசாரித்தனர்.

சிறுமிகளை மீட்டனர்:

சிறுமிகளை மீட்டனர்:

அப்போது தெரியவந்தது என்னவென்றால் சிறுமிகள் அனைவரும் பீகாரில் இருக்கும் சம்பரன் பகுதியை சார்ந்தவர்கள் என்றும் இவர்களை இட்கா என்ற பகுதிக்கு அழைத்து செல்வதாகவும் அந்த ஆண்கள் தெரிவித்தனர், பின்னர் அவர்களை கைது செய்து சிறுமிகளை மீட்டனர். மீட்கப்பட்ட சிறுமிகள் அனைவரும்
10 முதல் 14 வயதிற்குள் உள்ளவர்கள் என்பதால் பாலியல் தொழிலுக்காக அவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்தனர் என்பது
குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த ரயில் பயணியின் ஒரு ட்வீட் மிகவும் உதவியாக இருந்துள்ளது.

டிவிட்டர்

டிவிட்டர்

சமீபகாலமாக பொய்யான செய்திகள் சமூக இணையதளங்களில் பரவி வருவது ஒரு சாதாரண விஷயமாக மாறி, சமுதாயத்தில் குழப்பத்தை
ஏற்படுத்தி வருகின்றன. பேஸ்புக், டிவிட்டர் மற்றும் பிற என்று ஒட்டுமொத்த சமூக இணையதளங்களும் இந்தப் பிரச்சனையைச் சந்தித்து வருகின்றன.

முக்கிய காரணம்

முக்கிய காரணம்

இதற்கான முக்கிய காரணம் என்னவென்றால், சமூக இணையதளங்களில் உலா வரும் விளம்பரங்கள் தான். இந்நிலையில் தற்போது டிவிட்டரில் ஒரு புதிய (ஏடிசி) ஆட்ஸ் டிரான்ஸ்பிரன்ஸி சென்டர் என்பதை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு கணக்கில் இருந்து அதன் தளத்தில் இயங்கி வரும் எல்லா விளம்பரங்களையும் பயனர்கள் பார்க்க முடியும்.

டிரான்ஸ்பிரன்ஸி

டிரான்ஸ்பிரன்ஸி

இந்த டிரான்ஸ்பிரன்ஸி கருவியை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் முதல் முதலாக அறிவித்தது. இதன்படி, இந்த சமூக இணையதளத்தில்
தற்போது அந்த அம்சத்தை எல்லா பயனர்களும் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரு கணக்கு மூலம் கடந்த 7 நாட்கள் வரை வெளியிடப்பட்ட எல்லா விளம்பர பிரச்சாரங்களையும் (விளம்பர டிவிட்கள்), பயனர் பெயர்களின் அடிப்படையில் தற்போது தேடி பார்க்க முடியும்.

அமெரிக்க அரசியல்

அமெரிக்க அரசியல்

ஒரு கணக்கின் விளம்பர டிவிட்களின் பட்டியலை மட்டும் பார்க்க முடியும் என்று கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை என்பது இதில் கவனிக்க
வேண்டிய ஒன்றாகும். அமெரிக்க அரசியல் விளம்பரத்தாரர்களின் செயல்பாடுகள், இந்நிறுவனத்தின் மூலம் முன்னிலைப்படுத்தப்படும். இது
தவிர, பில்லிங் தகவல்கள், விளம்பரத்திற்கான செலவு, ஒவ்வொரு டிவிட்டிலும் உள்ள கவர்ச்சிகரமான தகவல் மற்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை போன்ற கூடுதல் தகவல்களும் காட்டப்படுகிறது.

சிக்கலான விளம்பர கொள்கை

சிக்கலான விளம்பர கொள்கை

இது குறித்து ஒரு பிளாக் இடுகையில் டிவிட்டர் தரப்பில் மேலும் குறிப்பிடுகையில், "இந்த அட்ஸ் டிரான்ஸ்பிரன்ஸி சென்டரை சார்ந்து, எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட சிக்கலான விளம்பர கொள்கையை நாங்கள் அறிமுகம் செய்ய உள்ளோம். இதை சரியான வகையில் செயல்படுத்த நாங்கள் விடாமுயற்சியோடு செயல்படுகிறோம். இது குறித்த மேலும் பல மேம்பாடுகள் வர உள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
After A Passenger's Tweet, 26 Minor Girls Rescued From Train In UP: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X