அமீர்கானை தொடர்ந்து ஆண்களுக்கும் வந்த வி டூ மென் ஹேஷ்டேக்.!

|

தற்போது பெண்கள் அனைத்துறைகளிலும் வேகமாக முன்னேறி வருகின்றனர். ஆண் ஆதிக்கம் நிறைந்த காணப்படும் இடங்களில் பெண்கள் பல வந்தமாக புகார் பாலியல் செய்வதகாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் டுவிட்டரில் மீ டூ என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் ஆண்கள் மீதும் புகார் கூறி வருகின்றனர்.

அமீர்கானை தொடர்ந்து  ஆண்களுக்கும் வந்த  வி டூ மென்  ஹேஷ்டேக்.!

தற்போது கோலிவுட் சினிமா மட்டும் அல்லாமல் பாலிவுட் சினிமாவையும் ஆட்டிபடைக்கின்றது. இதில் பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் பறந்த வண்ணம் உள்ளன. இந்த விஷயம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது பெண்களால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு என்று புதிதாக வி டூ மென் என்ற புதிய ஹேஷ்டேக் துவங்கப்பட்டுள்ளது. இதில் பெண்களால் பாதிக்கப்படும் ஆண்களும் கருத்துகளை தெரிவிக்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

டுவிட்டரில் மீடு ஹேஷ்டேக்:

ஆண்களால் வலுக்காட்டாயமாக பாலியல் வல்லுறவு மற்றும் சீண்டல்கள் குறித்து டுவிட்டரில் மீ டூ என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை தெரிவித்து வருகின்றனர். இதில் பெரும்பாலும் ஆண்களால் வேலை செய்யும் இடங்களில் பாலியல் தொந்தரவு உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டன.

கோலிவுட் சினிமா:

இந்நிலையில் கோலிவுட் சினிமாவில் அதிகளவில் பாலியல் குற்றச்சாட்டுகள் ஏற்கனவே கூறப்பட்டு இருந்தாலும், கவிஞர் வைரமுத்து மீது முதன் முதலில் பாடகி சின்மயி மீடு ஹேஷ்டேக்கில் தனக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார். மேலும் கவிஞர் ரைவமுத்து பல பெண்களும், இளம் பெண்களும் பாலியல் தொந்தரவு செய்ததாகவும் அவர் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வதைளங்களிலும் கருத்துகளை தெரிவித்து இருந்தார்.

இதனால் தமிழகம் மட்டும் அல்லாமல் உலகம் முழுக்கவும் இது பூகம்பம்போல் வெடித்து சிதறியது. ஒரு சிலர் இது பொய்யான குற்றச்சாட்டு என்றும் மற்றொரு சிலர் இது உண்மையான குற்றசாட்டு தான் என்றும் கூறிவருவதால், பரபரப்பாக பேசப்படுகின்றது. இதில் நடிகர் ராதாரவி உள்ளிட்டோர் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாலிவுட்டையும் விட்டு வைக்கவில்லை:

இந்நிலையில் பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன் படங்களில் நடித்த போது ஒரு நடிகை தனக்கும் அவர் பாலியல் தொந்தரவு செய்தார் என்று கூறியிருகின்றார். மேலும் சுபாஷ் கை என்னும் பாலிவுட் இயக்குனர் தனக்கு போதை பொருள் கொடுத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இசை அமைப்பாளர்களும் இந்த குற்றச்சாட்டில் ஆளாகி வருகின்றனர். இந்த விசியம் தற்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீண் குற்றச்சாட்டுகள்:

ஆண்களும் பெண்கள் தங்களுக்கு விரும்பியபடி உறவு கொண்ட பிறகு பணத்திற்காகவும் பிற தேவைகளுக்காகவும், வீண் விளம்பரத்திற்காகவும் ஆண்கள் மீது வேண்டும் என்றும் அவர்களின் மீது அவதூறு பரப்பும் நோக்கில் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது வருகின்றனர். இதனால் ஆண்களுக்கு சமூகத்தில் அவப்பெயரிலும், வெக்ககேடும் ஏற்படுகின்றது என்று ஒரு சாராரர் குற்றம் சாட்டியிருந்தனர்.

நடிகர் அமீர்கானுக்கு பாலியல் தொல்லை:

பாலியல் குற்றச்சாட்டுகள் தற்போது ஆண்களும் முன் வைக்க தொடங்கியுள்ளனர். தற்போது பெண்களும் ஆண்களுக்கு பாலியல் சீண்டல்களையும் கொடுத்து வருதாக புகார்களும் எழுந்துள்ளது. இந்நிலையில் நடிகர் அமீர்கான் தனக்கும் பாலியல் தொந்தரவு பல ஆண்டுகளுக்கு முன் கொடுக்கப்பட்டது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஆண்களுக்கு வந்த வி டூ மென்ஸ் ஹேஷ்டேக்:

ஐந்தாண்டுகளுக்கு முன், தொழிலதிபர் ஒருவர், நடிகை ஒருவரது சம்மதத்துடன், அந்தரங்க விஷயங்களில் ஈடுபட்டுள்ளார். தற்போது, 'அந்தரங்க விஷயங்களை வெளியிட போகிறேன்; மூன்று கோடி ரூபாய் கொடுத்தால் விட்டு விடுகிறேன்' என, அந்த நடிகை மிரட்டுவதாக, தொழிலபதிபர் கூறியுள்ளார். இதே போல, ஒரு நடிகரும், நடிகையின் மிரட்டலுக்கு ஆடிப்போயுள்ளார். அப்பாவி ஆண்களுக்கு பாதுகாப்பு தரும் வகையில், அவர்கள் தற்போது, வி டூ என்ற மென்ஸ் ஹேஷ்டேக்கில் பதிவிடவும் துவங்கியுள்ளனர்.

மீ டூ விஸ் வி டூ :

ஹேஷ்டேக்கில் மீ டூ போட்டியாக தற்போது வி டூ மென்ஸ் ஹேஷ்டேக் தற்போது புதிதாக உருவெடுத்து இருப்பதால் இரு தரப்பினரும் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு கருத்துகளை தெரிவிப்பார்கள் . மேலும், பாலியல் குற்றச்சாட்டு விஷயங்களும், மறுப்புகளும் பொது மக்கள் மத்தியில் அம்பலமாகும் என்பதில் சந்தேகமதில்லை.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
After #Me too it #We Too Journo starts hashtag movement for men

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more