நித்தியானந்தாவுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் டுவிட்டரில் வெச்சு செஞ்ச நடிகை.!

  சாமியார் நித்தியானந்தா பல்வேறு சர்ச்சைகளில் தொடர்ச்சியாக சிக்கி கொண்டு வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன் சாமியார் நித்தியானதான் ஹேஸ்டேக்கிலும் டிரெண்டிங் ஆகியிருந்தார்.

  தற்போது, மீண்டும் ஒரு சர்சையில் சிக்கியுள்ளார் சாமியார் நித்தியானந்தா. இந்நிலையில் சாமியார் நித்தியானந்தாவுக்கு நோபல் பரிசு தான் தர வேண்டும் என்று பிரபல நடிகை ஒருவர் நடிகை கிண்டலடித்துள்ளார்.

  நித்தியானந்தாவுக்கு நோபல் பரிசு -டுவிட்டரில் வெச்சு செஞ்ச நடிகை.!

  நித்தியானந்தா தான் இந்த உலகத்தை படைத்த கடவுள் என்று கூறிக் கொண்டாலும் அனைவரும் ஏற்று வந்தனர். ஆனால் அவர் அணியும் வேடங்களை பார்த்தால், யாருடா இந்த கேமாளி என்று பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட பல்வேறு சமூக வதை தளங்களில் கிண்டலடித்து வருவது தான் வாடிக்கையாகி விட்டது.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  ஐன்ஸ்டீன் விதி, விலங்குகளை பேசவைக்கும் சாப்ட்வேர்:

  கடந்த சில வாரங்களுக்கு முன் சாமியார் நித்தியானந்தா ஐன்ஸ்டீன் விதியும் தவறாக உள்ளது. மேலும், விலங்குகளை பேச வைக்கும் சாப்வேர் கண்டுபிடித்துள்ளதாக கூறி பெரும் பரபரப்பபை ஏற்படுத்தினார். இந்த நிகழ்ச்சியை பார்த்தவர்கள் சமூக ஊடகங்களில் கிண்டலடித்து கருத்துகளை பதிவிட்டு இருந்தனர். மேலும், சாமியார் இருந்த நித்தியானந்தா தற்போது அறிவியல் விஞ்ஞானியாகிவிட்டார் என்று கிண்டலடித்து இருந்தனர்.

  நித்தியானந்தா ஆல்பம்:

  இந்நிலையில் சாமியார் நித்தியானந்தா பரமசிவோகம் ஒன்னெஸ் கேப்சூல் 50 என்ற ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். இது சாமியார் நித்தியானந்தா ஆஸ்ரமத்தில் இருந்து அவரை கடவுள் போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.

  நித்தியானந்தா கடவுள் போன்று தோன்றுகின்றார். மேலும், ஆங்கிலத்தில் ஆல்படும் பாடப்பட்ட கூத்தும் அரங்கேறியுள்ளது.

  நடிகை கஸ்தூரி கிண்டல்:

  இந்நிலையில் நடிகை கஸ்தூரி இந்த வீடியோ காட்சியை பார்த்து டுவிட்டரில் கிண்டல் அடித்துள்ளார்.

  கோயிலுக்கு இருப்பது போன்று இருக்கும் இந்த ஆல்பத்தில் அவரது ஜடாமுடி மீசை பற்றி எல்லாம் பாடப்பட்டுள்ளது. பரமஹம்ச நித்தியானந்தா என்று தொடங்கும் இந்த பாடல் இலக்கிய தரத்துடன் வருகின்றது.

  இதை பார்த்தும் நடிகை கஸ்தூரி நித்தியானந்தாவுக்கு நோபல் பரிசு தான் கொடுக்க வேண்டும் என்று கிண்டலாக டுவிட் பதிவு செய்துள்ளார்.

  சமூச வலைதளங்களில் வைரல்:

  இந்த பாடலும் நடிகை கஸ்தூரியின் கிண்டல் செய்தியும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மேலும் ஒருபக்கம் நித்தியானந்தாவின் பக்தர்கள் அவருக்கு ஆதரவாக ஜால்ரா போட்டாலும், நேர்மையான ஆன்மீக வாதிகள் மற்றும் பொது மக்கள் யாரு டா இந்த கோமாளி, முதலில் விஞ்ஞானி நித்தியானந்தா, இப்ப நோபல் பரிசு நித்தியானந்தாவா என்று டுவிட் மற்றும் மீஸ்களையும், ட்ரோல்களையும் பறக்க விட்டு வருகின்றனர்.

  ஐன்ஸ்டீன் விதியை தவறு என்று கூறிய சர்ச்சையை ஏற்படுத்திய சுவாமி நித்தியானந்தா தற்போது, விலங்குகளை பேச வைக்க தனி சாப்ட்வேர் கண்டுபிடித்துள்ளதாக கூறி மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில், நித்தியானந்தாவை கலாய்கும் விதமாக மீஸ் கிரியேட்டர்கள் உருவாக்கிய மீஸ்களும், ட்ரோல்களும் பேஸ்புக்கிலும், டுவிட்டரிலும், #சையின்ஸ்டிஸ்ட்_நித்தியானந்தா என்ற பெயரில் வைரலாகி வருகின்றது.

  நித்தியானந்தா:

  சுவாமி நித்தியானாந்தா முதலில் ஆன்மீக சொற்பொழிவாளர் மற்றும் தியான ஆசானாக அறியப்பட்டார். தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் தனது ஆரசிமத்தை துவங்கினார். இவரின் தேன் ஊரிய பேச்சுக்கு மயங்கிய பக்தர்கள் கூட்டம் கூட்டாக அதிகரிக்க தொடங்கினர். இதனால் இந்தியா முழுக்கவும் இவரது புகழ் உயர்ந்தது.

  செக்ஸ் புகார்:

  மேலும், வெளிநாடுகளிலும் இவருக்கு ஆசிரமங்களும் சொத்துக்களும் கோடி கணக்கில் சேர்ந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் சுவாமி நித்தியானந்தா தன்னிடம் வரும் பக்தர்களிடம் வலுக்காட்டயாக செக்ஸில் ஈடுபட்டதாக அமெரிக்காவை சேர்ந்த ஆர்த்தி ராவ் என்று பெண் புகார் கூறியிருந்தார்.

  சன்டிவி:

  இந்நிலையில் இவரது நடிகை ரஞ்சிதாவுடன் நித்தியானந்தாவும் ஒன்றாக இருந்த காட்சிகள் போன்று சன்டியில் ஒளிபரப்பாகியது. இது நித்தியானந்தாவின் புகழை வெகுவாக பாதித்தது. இந்த வழக்கு நீதிமன்றத்திற்கும் சென்றது. அதுவரை நித்தியானந்த எந்த ஆன்மீக சொற்பொழிவும் நடத்தாமல் இருந்தார். மேலும், பெங்களூர் பிடதி ஆசிரமம், திருவண்ணாமை ஆசிரமத்தில் தங்கியிருந்தவர்களும் வெளியேறினர்.

  ரஞ்சிதாவை பறக்க வைக்க முயற்சி:

  நடிகை ரஞ்சிதாவையும் ஒரு சில பத்கர்களையும் வைத்து அந்திரத்தில் பறக்க வைப்பதாக நித்தியானந்தா தெரிவித்திருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு பொது மக்கள், பக்தர்கள், நிருபர்கள் உள்ளிட்ட பலரும் சென்றனர். நித்தியானந்தா தனது குண்டலினி சக்தியை மேலே எழுப்பி பறக்க வைப்பதாக சொன்னார். நித்தியானந்தா சொன்னபடி யாரும் அந்தரத்தில் பறக்கவில்லை.

  நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்:

  அதைத்தொடர்ந்து நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி நித்தியானந்தா ஆன்மீக சொற்பொழிவு மற்றும் தியான முறை வகுப்புகளையும் நடத்தி வந்தார்.

  புதிய சர்ச்சை:

  ஐன்ஸ்டீன் கூறிய E = Mc2 விதியே தவறாக இருக்கின்றது என கூறி புதிய சர்சையை கிளம்பினார் நித்தியானந்தார். அதற்கு சமூக வளைத்தில் ஆட்டோகேப்பில் சாயின்டிஸ்ட் ஆகியுள்ளார்.

  விலங்குகளை பேச வைப்பதாக அறிவிப்பு:

  மேலும் விலங்குளை பேச வைக்க நித்தியானந்தா தனியாக சாப்வேர் உருவாக்கி இருப்பதாக அவரே வீடியோவில் தெரிவித்துள்ளார். அதை ஏற்கனவே சோதனை செய்து பார்த்துவிட்டாராம். இது மகிவும் நன்றாக வேலை செய்கின்றது. சில வருடங்களுக்கு பிறகு பேச வைக்க போகின்றேன் என்ற கூறியுள்ளார்.

  தமிழும், சமஸ்கிருதம்:

  குரங்குகளும், புலி, சிங்கம் உள்ளிட்ட சில விலங்குகளையும் தெளிவாக பேச வைக்க முடியும் என்று பேசியிருக்கின்றார். அவகளை தமிழிலும், ஆங்கிலத்தில் பேச வைப்பதாக நிதித்தியான வீடியோவில் தெளிவாக்கியுள்ளார். இதுகுறித்து அனைத்து ஊடங்களிலும் செய்தி வெளியாகின.

  #சையின்ஸ்டிஸ்ட்_நித்தியானந்தா :

  இந்நிலையில் பேஸ்புக்கில் #சையின்ஸ்டிஸ்ட்_நித்தியானந்தா என்ற பெயரில் தற்போது தற்போது மீம்ஸ்கள் பறக்கின்றன. இதில் நிந்தியானந்த விலங்குகளை பேச வைப்பதாக இருந்த வீடியோ மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன. இதில், ஏன்பங்கு முதல்ல ரஞ்சிதாவையே அந்தரத்துல பறக்க வைக்க முடியல. இந்த லட்சணத்துல விலங்குகளை வேற பேச வைக்க போறாம் என்று வெளியாகியுள்ளது.

  ரைவலாகும் வீடியோ மீம்ஸ்:

  இந்நிலையில், ரட்சகன் திரைப்படத்தில் வடிவேலு நாயை வைத்து மாட்டை பேச வைத்த மையக் கருத்தை எடுத்து, மீஸ்கிரியேட்டர்கள் நித்தியானந்தாவை கலாய்து எடுத்து வருகின்றனர். இது தற்போது வைரலாகி வருகின்றது. மேலும் இது காண்பேரையும் நசைச்சுவைக்க வைக்கின்றது.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  சாமியார் நித்தியானந்தா பல்வேறு சர்ச்சைகளில் தொடர்ச்சியாக சிக்கி கொண்டு வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன் சாமியார் நித்தியானதான் ஹேஸ்டேக்கிலும் டிரெண்டிங் ஆகியிருந்தார். தற்போது, மீண்டும் ஒரு சர்சையில் சிக்கியுள்ளார் சாமியார் நித்தியானந்தா. இந்நிலையில் சாமியார் நித்தியானந்தாவுக்கு நோபல் பரிசு தான் தர வேண்டும் என்று பிரபல நடிகை ஒருவர் நடிகை கிண்டலடித்துள்ளார். நித்தியானந்தா தான் இந்த உலகத்தை படைத்த கடவுள் என்று கூறிக் கொண்டாலும் அனைவரும் ஏற்று வந்தனர். ஆனால் அவர் அணியும் வேடங்களை பார்த்தால், யாருடா இந்த கேமாளி என்று பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட பல்வேறு சமூக வதை தளங்களில் கிண்டலடித்து வருவது தான் வாடிக்கையாகி விட்டது.
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more