ஃபேஸ்புக்கில் அப்துல் கலாம் நெகிழ்ச்சி!

Posted By: Staff
ஃபேஸ்புக்கில் அப்துல் கலாம் நெகிழ்ச்சி!

குடியரசு தேர்தலில் போட்டியிட தனக்கு விருப்பம் இல்லை என்று நேற்று சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கிலும் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.

குடியரசு தேர்தலில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் போட்டியிடுவாரா? என்று அனைவரும் காத்து கொண்டிருக்கையில். இந்த குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட தனக்கு விருப்பம் இல்லை என்று நேற்று மறுத்து கூறியிருக்கிறார்.

பாஜக மூத்த தலைவர் அத்வானி, திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மற்றும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி ஆகியோரும் தொலைபேசியில் அப்துல் கலாமை தொடர்பு கொண்டு வலியுறுத்தினர்.

குடியரசு தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பளாரான பிரணாப் முகர்ஜியை எதிர்த்துப், அப்துல் கலாம் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று கூறிய அப்துல் கலாம், தான் தேர்தலில் பங்கு பெற வேண்டும் என்று விரும்பிய அனைவருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்.

மமதா பேனர்ஜி போன்ற தலைவர்கள் தன் மீது வைத்துள்ள மரியாதைக்கும், லட்சக்கணக்கான மக்கள் தன் மீது வைத்துள்ள அன்பிற்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருப்பதாகவும் முன்னாள் குடியரசு தலைவர் நெகிழ்ந்து கூறியிருக்கிறார்.

அதனால் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட முழு தகுதியும் உடைய முன்னால் குடியரசு தலைவர் அப்துல் கலாம், இந்த போட்டியை ஏற்று கொள்ளாமல் விலகுவதாக அறிவித்துள்ளதற்கு, ஏராளமானோர் தங்களது வருத்தத்தினை ட்விட்டரில்  பகிர்ந்து இருக்கின்றனர்.

முன்பெல்லாம் இது போன்ற செய்திகளை மக்கள் படிப்பதோடு சரி. இதில் மக்கள் தங்களது விருப்பங்களை தெரிவிக்க வழி ஏதும் இல்லாமலேயே இருந்தது. ஆனால் இப்போது மக்கள் தங்களது விருப்பத்தினையும் பதிக்க, ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற வலைத்தளங்கள் சிறந்த பக்கமாக இருக்கின்றது.

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின்  ஃபேஸ்புக் பக்கம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்