சத்ய மேவ ஜெயதே: ஃபேஸ்புக்கிலும் பிரச்சாரம் செய்யும் அமீர் கான்!

By Super
|
சத்ய மேவ ஜெயதே: ஃபேஸ்புக்கிலும் பிரச்சாரம் செய்யும் அமீர் கான்!

மனிதர்களுடைய மலத்தை மனிதர்களே அப்புறப்படுத்தும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஃபேஸ்புக்கில் தனது பிரச்சாரத்தை துவக்கியுள்ளார் பாலிவுட் நடிகர் அமீர் கான்.

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க நீங்கள் விரும்புகிறீர்களா? என்ற அமீர் கானின் கேள்விக்கு இதுவரை 7,987 லைக்குகள் குவிந்துள்ளது.

சத்ய மேவ ஜெயதே என்ற நிகழ்ச்சியின் மூலம் பாலிவுட் நடிகரான அமீர் கான் தனது சமூக நோக்கு சிந்தனையை ஒவ்வொன்றாக மக்கள் முன் சமர்பித்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

சினிமாவை முன்நிலை படுத்தி எதையும் செய்யாமல், சமூக சிந்தனையை தூண்டும் கருத்துக்களுக்கு அமீர் கான் பச்சை கொடி ஏந்தி வருகிறார்.

சமூகத்தில் நடந்து வரும் பல பிரச்சனைகளை முன் வைத்து நடத்தப்பட்டு வருகிறது இவரது சத்ய மேவ ஜெயதே என்ற நிகழ்ச்சி.

பெண் சிசு வதை, குடிப்பழக்கம் என்று சமூகத்தில் பல பிரச்சனைகள் நடந்து வருகிறது. இது போன்ற பல பிரச்சனைகளை மக்கள் மத்தியில் வைக்கும் அமீர் கான் தற்பொழுது மனித மலத்தினை மனிதனே அப்புறப்படுத்தி வருகிறான்.

இப்படி மனிதனக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளுக்கு முற்று புள்ளி வைக்க வேண்டும் என்பது பற்றி நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

மனித மலத்தை மனிதர்களே அப்புறப்படுத்தி வரும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நீங்கள் விரும்புகிறீர்களா? என்று ஃபேஸ்புக் மூலம் அமீர் கான் கேள்வி கேட்டது ஒன்று தான் தாமதம், இதற்கு 7 ஆயிரம் லைக் கொடுத்தது

மட்டும் அல்லாமல் பல பேர் ஆதரவு குரல்களையும் எழுப்பி உள்ளார்கள். இதற்கு மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்ததாகவும் அமீர் கான் கூறியுள்ளார்.

அது மட்டும் அன்றி 'மக்கள் கருத்தே மகேசன் கருத்து' என்றும் பல காலமாக சொல்லபட்டு வருகிறது. ஆனால் இதற்கு பல இடங்களில் வழியே இல்லை.

ஏனெனில் பல பிரச்சனைகள் மக்களின் பார்வைக்கு கொண்டு வராமலேயே போய்விடுகிறது. ஆனால் இந்த இடர்பாட்டை போக்க இப்போது ஃபேஸ்புக் என்ற சமூக வலைத்தள நண்பனும் உள்ளான் என்பதை நினைவுபடுத்தும் வகையில், ஃபேஸ்புக் இது போன்ற புதிய தகவல்களை தூக்கி கொண்டு வருகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X