ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.!

|

உலகம் முழுவதும் ஆப்பிள் ஐபோனகள் அதிக வரவேற்பை பெற்றுள்ளது உள்ளது என்று தான் கூறவேண்டும். குறிப்பாக ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் அனைத்து சாதனங்களும் சிறந்த மென்பொருள் மற்றும் வன்பொருள் தொழில்நுட்பங்களுடன்

வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை யாழ்ப்பாணம்

இலங்கை யாழ்ப்பாணம்

இந்நிலையில் இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் வசித்து வரும் ஒரு இளைஞர் ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலைசெய்துகொண்ள்ளார். தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் பெயர் சசீபன், இவருக்கு வயது 24, இவருடைய தந்தை கடந்த பத்து வருடங்களாக கனடா நாட்டில் வேலை செய்து வந்துள்ளார்.

பலமுறை மிரட்டியுள்ளார்

பலமுறை மிரட்டியுள்ளார்

மேலும் சமீபத்தில் கனடாவில் இருந்து வீடு திரும்பிய தந்தையிடம் சசீபன் ஐபோன் வாங்கிவரும்படி கேட்டுள்ளார். ஆனால் அவர் வாங்கி வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றம் அடைந்த சசீபன் பெற்றோருடன் தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளார். பின்பு தற்கொலை செய்துகொள்வேன் என்று பலமுறை மிரட்டியுள்ளார்.

சூரியனை கடந்து சென்ற ஏலியன்: நாசா சேட்லைட்டில் சிக்கி அதிர வைத்தது.!

பெற்றோர் சமாதானம் ஆகாமல் இருந்துள்ளனர்

இரண்டு நாட்களுக்கு முன்பும் அதேபோல் புதிய ஐபோனை வாங்கி தரும்படி வீட்டில் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் பெற்றோர் சமாதானம் ஆகாமல் இருந்துள்ளனர். அன்று இரவு தனது பெற்றோரை வீட்டை விட்டு வெளியே துரத்தியுள்ளார்.

வெறுப்பு குறையும்

ஆனால் அவரது பெற்றோர்கள், தொடர்ந்து தற்கொலை மிரட்டல் விடுத்து வரும் மகனின் பார்வையில் இருந்து சற்று தள்ளி இருந்தால் வெறுப்பு குறையும் என நினைத்து, பக்கத்து வீட்டில் தங்கி இருந்துள்ளனர்.

தலையில் 5' இன்ச் 'டெவில்ஸ் கொம்பு'டன் வாழும் ஷாம்! இவர் மனிதன் தானா?

சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

ஆனால் அன்று இரவு 9மணி அளவில் மகனுக்கு உணவு பரிமாற சசீபனின் தாய் அவரது அறைக்கு சென்றுள்ளார், ஆனால் சசீபன் கழுத்தை அறுத்துக்கொண்டு மயங்கிய நிலையிலிருந்துள்ளார். இதை கண்டு அதிர்சியடைந்த அவரது தாய் மருத்துவமணைக்கு உடனே தூக்கிச் சென்றுள்ளார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஐபோனிற்காக பெற்றோரை தவிக்க விட்ட சென்ற மகனின் செயல் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
A young man who committed suicide by not buying an iPhone : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X