ஆன்லைன் வகுப்பில் மல்லாந்து படுத்து தூங்கிய மாணவன்! வைரல் ஆகும் புகைப்படம்!

|

கொரோனா தொற்றுநோய் நாம் வாழும் முறையை முற்றிலுமாக மாற்றியுள்ளது. வைரஸின் தொற்று தன்மை காரணமாக, சமூக விலகல் மற்றும் முகமூடிகள் ஒரு முழுமையான தேவையாகிவிட்டன. சமூக தொடர்பு என்பது இப்பொழுது மொபைல் மற்றும் லேப்டாப் திரை வழியில் மட்டும் நடக்கிறது. வீட்டிலிருந்து வேலை என்பது புதிய இயல்பாக மாறிவிட்டது. பள்ளி படிப்பு என்பது ஆன்லைன் படிப்பாக மாறிவிட்டது.

புதிய பேராசிரியர்களை மடிக்கணினி

அது மட்டுமல்லாமல், கல்லூரிகளும் பள்ளிகளும் சமீபத்திய முன்னேற்றங்களைக் கொண்டுள்ளது, ஆன்லைன் வகுப்புகள் பிரபலமடைந்து வருகின்றது. பல மாணவர்களுக்கு, அவர்களின் புதிய கல்வி ஆண்டு அவர்களின் புதிய பேராசிரியர்களை மடிக்கணினி திரைகளில் சந்திப்பதன் மூலம் தொடங்கியது. ஆன்லைன் வகுப்புகள் ஒரு கட்டத்திற்குப் பிறகு மாணவர்களுக்குத் தூக்கத்தைத் தூண்டுகிறது என்று பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

எல்லாம் பார்க்கும் பொழுது

ஆன்லைன் வகுப்புகளின் போது மாணவர்களில் சிலரின் நிலை இன்னும் மோசமாக இருப்பதைப் பல சமூக வலைத்தள பதிவுகளில் நாம் பார்த்திருக்கிறோம். சிலர் படுக்கையில் அமர்ந்து ஆன்லைன் வகுப்பைப் படிப்பது அல்லது நாற்காலியில் உட்கார்ந்த படியே தூங்குவது போன்ற புகைப்படங்கள் வலைத்தளத்தில் வைரல் ஆகிவருகிறது. இதை எல்லாம் பார்க்கும் பொழுது நம்முடைய பள்ளி நாட்களுக்கு அழைத்துச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை.

2000 ஆண்டுக்கு முன்பே இதை செய்த தமிழர்கள்: கீழடி 6-ம் கட்ட அகழாய்வில் சிக்கிய நற்செய்தி.!2000 ஆண்டுக்கு முன்பே இதை செய்த தமிழர்கள்: கீழடி 6-ம் கட்ட அகழாய்வில் சிக்கிய நற்செய்தி.!

நாற்காலியில் தூங்கிய படம்

காரா மெக்டொவல் என்ற எழுத்தாளர், ஜூம் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொண்ட தனது மகன் நாற்காலியில் தூங்கிய படத்தைப் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தில் ஆன்லைன் வகுப்பு நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் இவரின் மகன் நாற்காலியில் மல்லாந்து படுத்து விட்டத்தைப் பார்த்து தூங்கிக்கொண்டிருக்கிறான்.

இந்த புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகியுள்ளது. இந்த பதிவை 8000-திற்கும் மேற்பட்டவர்கள் ரீட்வீட் செய்துள்ளனர். சுமார் 50,000 க்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளார். இருப்பினும், இந்த புகைப்படத்தைப் பற்றிய பல கருத்துகள் வலைதளத்தில் பதிவிட்டு வருகிறது.

கமெண்ட்

பல நெட்டிசன்கள் இதை கேளிக்கையாக எடுத்து கமெண்ட் செய்துள்ளனர். 2020 ஆம் ஆண்டுக்கான மனநிலை இது தான் என்று கமெண்ட் செய்துள்ளனர். இன்னும் சிலர் புதிய பள்ளிப்படிப்பைப் பற்றி கேள்வி எழுப்பியுள்ளனர், இதுபோல் பல தரப்பிலிருந்து பல கருத்துக்கள் பதிவ வருகிறது. உங்களுடைய கருது என்ன என்பதை நீங்களும் பதிவிடுங்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
A whole mood: Viral photo shows a kindergarten student asleep during a Zoom class : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X