Home
Social media

பச்சி ராஜனையே மிஞ்சிய பாட்டி:பறவைகளுக்காக மின்சாரம் இன்றி 79 ஆண்டாக வாழ்கை.!

79 ஆண்டாக வீட்டில் மின்சாரம், செல்போன், மின்னனு சாதனங்களை பயன்படுத்தாமல் வாழ்ந்து வருகின்றார். இதோடு மட்டும் இல்லாமல் தன் வீட்டையும் பறவைகளுக்காகவும் செல்ப்பிராணிகளுக்காவும் அர்ப்பணித்துள்ளார்.

2.0 படத்தில் வரும் பக்ஷி ராஜனை போல 79 ஆண்டுகளாக தனக்காக இல்லாமல் பறவைகளுக்காக வாழ்ந்து வருகின்றார் ஒரு பாட்டி.

அவர் யாரென்று கேட்டால், நீங்களும் ஆச்சரியப்படுவீர்கள். இவரும் பேராசிரியர் (ஓய்வு) தான். இயற்கை, பறவைகள் மீது உள்ள காதலால்

பச்சி ராஜனையே மிஞ்சிய பாட்டி:பறவைகளுக்காக மின்சாரம் இன்றி  வாழ்கை.!

79 ஆண்டாக வீட்டில் மின்சாரம், செல்போன், மின்னனு சாதனங்களை பயன்படுத்தாமல் வாழ்ந்து வருகின்றார். இதோடு மட்டும் இல்லாமல் தன் வீட்டையும் பறவைகளுக்காகவும் செல்ப்பிராணிகளுக்காவும் அர்ப்பணித்துள்ளார்.

இவர் குறித்த விவரங்களை ஆழமாக பார்க்கலாம் வாங்க.

2.0 படக் கதை:

2.0 படக் கதை:

2.0 படத்தில் வரும் கதை சலீம் அலி என்பரின் வாழ்கையை பின் தொடரக் கூடியதாக இருக்கின்றது. சலீம் அலின் வாழ்கையை போலவே 2.0 படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் இயற்கை மற்றும் பறவைகள் மீது உள்ள காதலால் ஒரு பெண் 79 ஆண்டாக மின்சாரம் இல்லாமல் வாழ்ந்துள்ளார் என்றால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கின்றதா? இவரும் தாவரவியல் பிரிவில் டாக்டர் பட்டம் பெற்று பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

 79 வயது பாட்டி இவர்:

79 வயது பாட்டி இவர்:

இவர் புனேவின் புத்வர் பெத் பகுதியில் வசித்து வருகின்றார். இவருக்கு வயது 79. வீட்டை பார்தால் சிறியதாக காட்சியளிக்கின்றது.

சாவித்ரிபாய் முலே பல்கலைக்கழகத்தில் தாவரவியல் பிரிவில் டாக்டர் பட்டும் வாங்கியுள்ளார். பிறகு, புனேவில் கர்பானே கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வும் பெற்றுள்ளார்.

இவரும் ஏழ்மை வாழ்கை:

இவரும் ஏழ்மை வாழ்கை:

சிறுவயது முதலே இவரது குடும்பத்தில் ஏழ்மை தான். கஷ்டப்பட்டு படித்துள்ளார். சிறு வயது முதலே மின்சார இணைப்பு இல்லாமல் வளர்ந்துள்ளார்.

பிறகு மின்சாரம் இவருடைய வீட்டிற்கு வழங்கப்பட்டாலும் இதை இவர் விரும்பியதில்லை. இன்று வரை பயன்படுத்தியதில்லை.

செல்போன் பயன்படுத்த வில்லை:

செல்போன் பயன்படுத்த வில்லை:

இவர் இயற்கை மற்றும் பறவைகள் மீதும் ஆழ்ந்த காதலை கொண்டுள்ளார். இதனால் உணவு உடை இருப்பிடம் தான் முக்கியம் என்று மின்சாரம், செல்போன் உள்ளிட்ட எந்த தொழில்நுட்பதையும் பயன்படுத்தவில்லை.

வீட்டையும் பறவைகளுக்காக அர்பணித்துள்ளார்:

வீட்டையும் பறவைகளுக்காக அர்பணித்துள்ளார்:

இயற்கை மீது காதல் வயப்பட்டதால் தன்னிடம் இருந்த சிறிய வீட்டையும் தனது செல்லப்பிராணிகளுக்கும், பறவைகளுக்கும் சொந்தம் என்று கூறியுள்ளார். இவரை பற்றி பலர் விமர்சித்தாலும் காதில் கூட போட்டுக் கொள்வதில்லை என்று யதார்த்தமாவே பதிலளித்துள்ளார்.

பக்ஷி ராஜனை மிஞ்சினார்:

பக்ஷி ராஜனை மிஞ்சினார்:

புத்தரின் பொன்மொழியான உங்களின் பாதையை நீங்களே தேர்வு செய்து கொள்ளுங்களுள் என்பதற்காக சான்றாக வாழ்ந்து வருகின்றார். இவரை பார்க்கும் போது, பக்ஷி ராஜனையே மிஞ்சி சாதனை படைத்துள்ளார் பேராசிரியரான இந்த பாட்டி ஹேமா ஷனே.

Best Mobiles in India

English summary
a retired professor has no electricity at home for 79 years in pune : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X