இந்த ஆண்டுக்கான உலக பத்திரிக்கை புகைப்பட விருதினை பெற்ற அந்த படம் இதுதான்.!
இதனால் இரவு தனித்து விடப்பட்ட சிறுமி பயத்தில் அழுதுகொண்டிருந்தாள். இந்த காட்சியை அந்நாட்டு புகைப்பட நிபுணர் ஜான் மூர் தத்துரூபமாக படம் பிடித்திருந்தார்.
சில புகைப்படங்கள் கருத்துகளையும், சம்பவங்களையும் உடனே சொல்லிவிடும், அதுபோன்ற புகைப்படங்கள் வருவது கடினம் தான். இப்போது உள்ள புகைப்படக் கலைஞர்கள் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் அருமையான புகைப்படங்களை
எடுத்துவிடுகின்றனர்.

அதன்படிஅமெரிக்கா- மெக்ஸிக்கோ எல்லையில் சிறுமி அழுது கொண்டிருப்பது போன்ற புகைப்படம், இந்த ஆண்டுக்கான உலக பத்திரிக்கை புகைப்பட விருதினை( World Press Photo Award ) தட்டிச்சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மெக்ஸிகோவிலிருந்து அமெரிக்க எல்லைக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12ம் தேதி சிலர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் கைதான சான்ட்ரா சஞ்சேஸ் என்ற பெண், மகள் யனீலாவை அங்கேயே விட்டுவிட்டு, கைதிகளுடன் எல்லை படையினர்வாகனத்தில் செல்ல நேர்ந்தது.
இதனால் இரவு தனித்து விடப்பட்ட சிறுமி பயத்தில் அழுதுகொண்டிருந்தாள். இந்த காட்சியை அந்நாட்டு புகைப்பட நிபுணர் ஜான் மூர் தத்துரூபமாக படம் பிடித்திருந்தார்.

அதன்படி 4,738 புகைப்பட நிபுணர்கள் சமர்பித்திருந்த 78,801 படங்களில், யனீலாவின் இந்த புகைப்படம், இந்த ஆண்டுக்கான உலக பத்திரிக்கை புகைப்பட விருதினை வென்றுள்ளது.


Click it and Unblock the Notifications