Home
Social media

கைக்காட்டி நிறுத்த அது என்ன வண்டியா., புயலுப்பா: என்னப்பா வித்தையெல்லாம் காட்டுற- வேற லெவல் வீடியோ!

தெற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்துள்ளது. அந்த புயலுக்கு புரவி என பெயரிடப்பட்டது. புரவி புயல் இலங்கையின் திரிகோணமலைக்கு அருகே கரையை கடந்தது.

வங்காள விரிகுடாவில் உருவாகும் புயல்கள்

வங்காள விரிகுடாவில் உருவாகும் புயல்கள்

பொதுவாக வங்காள விரிகுடாவில் உருவாகும் புயல்கள் இலங்கைக்கு அருகில் மையம் கொண்டு இந்தியாவை நோக்கி நகரும். ஆனால் சில வருடங்களுக்கு பிறகு புரவி புயல் இலங்கைக்குள் ஊடுருவி இந்தியாவை நோக்கி நகருகிறது. புயல் ஊடுருவிய இலங்கையில் பெருமளவு வெள்ள சேதம் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டது.

கனமழை முதல் மிதமான மழை

கனமழை முதல் மிதமான மழை

தமிழகத்தை பொருத்தவரை புரவி புயல் கன்னியாகுமரிக்கும் பாம்பனுக்கு இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டது. புரவி புயல் காரணமாக ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை முதல் மிதமான மழை பெய்ததாக அறிவிக்கப்பட்டது.

கொட்டித்தீர்க்கும் மழை

கொட்டித்தீர்க்கும் மழை

மதுரையை பொருத்தவரை புயலினால் பெய்த மழையின் காரணமாக வைகை ஆற்று தரைப்பாலத்துக்கு மேல் வெள்ளம் ஓடியது. இதனால் அந்த பாதை மூடி வைக்கப்பட்டது. திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் மழை கொட்டி தீர்க்கிறது.

கனமழை முதல் அதிகனமழைக்கு வாய்ப்பு

கனமழை முதல் அதிகனமழைக்கு வாய்ப்பு

புரவி புயல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. புரவி புயல் தெற்கு கேரளாவை பகுதியை நோக்கி நகரும் எனவும் இதன்காரணமாக அங்கு உள்மாவட்டங்கள், வடமாவட்டங்களுக்கு கனமழை முதல் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இதற்கிடையில் புயல் காற்று மழையில் ஒருவர் வித்தியாசமாக செயல்புரியும் வீடியோ இணையதளங்களில் செம வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் மழைக்காற்றில் ஒருவர் ஆக்ரோஷமாக நடனமாடுகிறார்.

மழையில் சட்டை பறக்க ஆக்ரோஷமாக நடனம்

மழையில் சட்டை பறக்க ஆக்ரோஷமாக நடனம்

புயல் காத்துலயே பொறி உருண்ட சாப்பிடுவோம், நாங்களாம் சுனாமில ஸ்விம்மிங்க போட்றவங்க சினிமாவில் சில வசனங்கள் இடம்பெற்றிருக்கும். அதற்கேற்ப இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் ஒருவர் புயல் காற்று மழையில் சட்டை பறக்க ஆக்ரோஷமாக நடனமாடுகிறார்.

பதிவில் எந்த பகுதி என உறுதிப்படுத்தவில்லை

இந்த வீடியோவை டுவிட்டர் பதிவிட்ட ஒருவர் சைக்லோன்புரவி என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு இலங்கைக்காரர்கள் நிலை என குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது, இதில் இடம்பெற்றிருக்கும் நபர் யார் என்பது குறித்து தெரியவில்லை. இந்த வீடியோ பெருமளவு வைரலான நிலையில் இது காமெடியாக உள்ளது என ஏணையோர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
A Man Aggressive Dance in Heavy Rain: Video Viral in Social Media
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X