தெரியுமா ? ஃபேஸ்புக்க்கு 'மாற்றான' 7 சமூக வலைதளங்கள் உள்ளன..!
அம்மாவிற்கும், அப்பாவிற்கும், ஏன் தாத்தா - பாட்டிக்கும் கூட ஒரு ஃபேஸ்புக் அக்கவுண்ட் தொடங்கலாம் என்பது தான் நம்மில் பலரின் ஆசையாகும், பல நாள் திட்டமாகும் - அது தான் நிதர்சனமும் கூட.
அந்த அளவிலாக ஃபேஸ்புக் என்பது ஒரு சமூக வலைதளம் என்பதை தாண்டி இயங்கி கொண்டிருக்கிறது. அப்படியான ஃபேஸ்புக்கிற்கு 'மாற்றான' அதே சமயம் முற்றிலும் வித்தியாசமான 7 பிற சமூகவலைதளங்கள் உள்ளன என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.? சரி இன்று தெரிந்து கொள்வோம்..!

01. நெட் ஆப் (Net.app) :
இது ஒரு விளம்பரம் இல்லா சமூக வலைதளம் ஆகும்.

02. பீ மை ஐஸ் (BeMyEyes) :
இது ஒரு இலவச மற்றும் ஐ போன் சோசியல் மீடியா ஆப் ஆனது பார்வை இல்லாதவர்களுக்கு உதவும் நோக்கத்தில் உருவாக்கபட்டுள்ளது.

03. டீவியன் ஆர்ட் (DeviantArt) :
இது ஒரு ஆன்லைன் கலை சார்ந்த மக்கள் நிறைந்த சமூகம் ஆகும்.

04. டாக்ஸிமிட்டி (Doximity) :
இது கிட்டத்தட்ட 70,000 அமெரிக்க மருத்துவர்களின் டைராக்டரி ஆகும்.

05. நெக்ஸ்ட் டோர் (Next door) :
அக்கம் பக்கத்தில் உள்ள நண்பர்களுடன் இணைந்தே இருக்க உதவும் ப்ரைவேட் சோசியல் நெட்வர்க்..!

06. ராலிபாயிண்ட் (Rally Point) :
ராணுவத்தில் பணியாற்றும் வீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்காக உருவாக்கப்பட்ட சமூக வலைதளம்..!

07. அன்டாப்டு (Untapped) :
மது சார்ந்த ஹோட்டல்கள், பார் மற்றும் பப் போன்றவைகள் சார்ந்த விமர்சனங்களை செய்யும் ஒரு தளம்.

மேலும் படிக்க :

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications








