6 மாத குழந்தை செய்த உலக சாதனை.. 'பே'வென்று ஸ்தம்பித்து பார்த்த நெட்டிசன்ஸ்கள்!

|

அமெரிக்க மாநிலமான உட்டாவில் உள்ள ஆறு மாத குழந்தை ஒன்று வாட்டர் ஸ்கீயிங் சென்று பழைய உலக சாதனையை தற்பொழுது முறியடித்துள்ளது. உலகத்தில் வாட்டர் ஸ்கீயிங் சென்ற இளைய நபர் என்ற பெருமையை தற்பொழுது இந்த குழந்தை பெற்றுள்ளது. 6 மாத குழந்தை வாட்டர் ஸ்கீயிங் செய்யும் வீடியோ ஆன்லைனில் வைரலாகியுள்ளது.

விவாதத்தை உருவாக்கிய 6 மாத குழந்தையின் வைரல் வீடியோ

விவாதத்தை உருவாக்கிய 6 மாத குழந்தையின் வைரல் வீடியோ

சமூக ஊடகங்களில் பரபரப்பான விவாதத்தைத் தொடங்கிய இந்த வீடியோவில், ரிச் ஹம்ப்ரிஸ் வாட்டர் ஸ்கீயிங் செய்யும் காட்சி பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை முதலில் இன்ஸ்டாகிராமில் toddler's parents என்ற பக்கத்தில் குழந்தையின் பெற்றோர்களான கேசி மற்றும் மிண்டி ஹம்பெரிஸ் ஆகியோர் வெளியிட்டனர். அடுத்த சில நிமிடங்களில் இந்த வீடியோ விரைவாக வைரலாக பரவியது என்று கூறப்பட்டுள்ளது.

வாட்டர் ஸ்கீயிங் செய்த குழந்தைக்கு வயது என்ன தெரியுமா?

வாட்டர் ஸ்கீயிங் செய்த குழந்தைக்கு வயது என்ன தெரியுமா?

குழந்தைக்காக அர்ப்பணிக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவில், ஏரியில் ஒரு படகில் வாட்டர் ஸ்கீயிங் போர்டு கட்டப்பட்டுள்ளது. கட்டப்பட்ட வாட்டர் ஸ்கீயிங் போர்டில் பிறந்து 6 மாதம் 4 நாட்கள் ஆனா கைக்குழந்தை இரும்பு காம்பியைப் பிடித்தபடி ஸ்கீயிங் போர்டில் ஆனந்தமாக நின்றுகொண்டிருக்கிறது. குழந்தையின் தந்தை, குழந்தைக்கு அருகில் வேறொரு படகில் இருப்பதாகத் தெரிகிறது.

புதிய உலக சாதனை

புதிய உலக சாதனை

6 மாத குழந்தை லைஃப் ஜாக்கெட் அணிந்து, கால்களைக் ஸ்கியின் போர்டின் பாத் கிரிப்பரில் கால்களை நன்றாக ஊன்றி பாதுகாப்பாக நிற்பதை நம்மால் வீடியோவில் தெளிவாகப் பார்க்கமுடிகிறது. "எனது 6 மாத பிறந்தநாளுக்காக நான் வாட்டர் ஸ்கீயிங் சென்றேன்'' என்ற தலைப்புடன் இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. கூடவே வீடியோவுடன் வெளிப்படையாக இது ஒரு பெரிய விஷயம் என்று #worldrecord என்ற டேக் இத்துடன் டேக் செய்யப்பட்டுள்ளது.

மிரட்டலான சாகச வீடியோ

6 மாத கால குழந்தையின் மிரட்டலான சாகச சாதனையைக் காட்டும் இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் ஆயிரக்கணக்கான பார்வைகளையும் கருத்துகளையும் பெற்றுள்ளது. அதேபோல், இதன் டிவிட்டர் வீடியோ சுமார் 7.6 மில்லியன் பார்வையாளர்களைப் பதிவுசெய்துள்ளது. சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகிய இந்த வீடியோ பதிவிற்கு இரண்டு தரப்பில் கருத்துக்கள் பதிவாகியுள்ளது. சிலர் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர், இன்னும் சிலர் பெற்றோருக்குப் பொறுப்பில்லை என்று திட்டியுள்ளனர்.

முந்தைய உலக சாதனை படைத்த குழந்தையின் வயது இதுதான்

முந்தைய உலக சாதனை படைத்த குழந்தையின் வயது இதுதான்

ஆறு மாதங்கள் மற்றும் நான்கு நாட்களில் இந்த குழந்தை செய்துள்ள சாதனையை பலரும் பாராட்டியுள்ளனர். ஸ்கீயிங் செய்யும் குழந்தை தனது தந்தையுடன் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி ஆபத்தில்லாமல் முந்தைய உலக சாதனையை முறியடித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இளம் வயதில் வாட்டர் ஸ்கீயிங் செய்து சாதனை படைத்த குழந்தை, ஆறு மாதங்கள் மற்றும் 10 நாட்கள் வயதுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
6-Month-Old Becomes Youngest Person To Go Water Skiing Video Is Viral : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X