இடைப்பட்ட ஆண்டுகளில் 3 தலைவர்கள் இறப்பு: தமிழக மக்களின் மனநிலை?

இந்திய விஞ்ஞானியும், குடியரசுத்தலைவருமானவர் அப்துல்காலம். ராமேஸ்வரத்தில் பிறந்தவர். இந்தியாவின் 11-வது குடியரசுத்தலைவராகவும் இருந்தார். 1998ம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்கு வகித்தார

|

தமிழகத்தில் இருந்து குடியரசு தலைவராக இருந்த அப்துல்காலம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மற்றொரு முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் அடுத்தடுத்து ஆண்டுகளில் இறந்தால், தமிழகமே சோகமாய் மாறியுள்ளது.

தமிழக மக்களின் மனநிலை?

மேலும் அவர்களின் மனநிலை என்ன கேட்கும் அளவுக்கு சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

அப்துல் காலம்:

அப்துல் காலம்:

இந்திய விஞ்ஞானியும், குடியரசுத்தலைவருமானவர் அப்துல்காலம். ராமேஸ்வரத்தில் பிறந்தவர். இந்தியாவின் 11-வது குடியரசுத்தலைவராகவும் இருந்தார். 1998ம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்கு வகித்தார். இஸ்ரோ நிறுவனத்தில் பல்வேறு பணிகளையும் திறம்பட செய்து முடித்தார்.

குடியரசு தலைவர் பணி நிறைவுக்கு பின்னர் மாணவர்களை கனவு காணுங்கள் என்று ஊக்கப்படுத்தி வந்தார். மேலும் 2020ம் ஆண்டுக்குள் இந்தியாவை வல்லரசு நாடாக்க வேண்டும் என்று குறிக்கோளுடன் செயல்பட்டார். மாற்றுதிறனாளிகளுக்கும் உதவும் வகையில் கண்டுபிடிப்புகளை கொடுத்தார்.

மேகாலயா ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணர்களிடம் பேசிய போது, மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். அப்போது அவருக்கு வயது 83. இந்த சம்பவம் 2015ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி இறந்தார்.
விஞ்ஞானி, குடியரசு தலைவர், சிறந்த பேச்சாளர், தமிழ் மீது ஆர்வம் என பன்முகத் தன்மை கொண்டு அப்துல் கலாம் விளங்கினார். பொது வாழ்விலும் தூய்மையை கடைபிடித்தவர்.

ஜெயலலிதா:

ஜெயலலிதா:

ஜெயலலிதா இவர் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் பிறந்தாலும், இவர்களின் பூர்வீகம் தமிழ்நாடு. சென்னையில் பள்ளி ஒன்றியில் படிக்கும் போது, சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம் என 120க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

எம்ஜிஆர் உடன் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். எம்ஜிஆர் அதிமுக என்ற கட்சியை தொடங்கி முதல்வராக வலம் வந்தார். பிறகு ஜெயலலிதாவும் அந்த கட்சியில் இணைந்தார். அப்போது அவருக்கு கொள்ளை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பிறகு எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு, அதிமுக கட்சிசார்பில் போட்டியிட்டு முதல்வராக பதிவி ஏற்றுக் கொண்டார். மேலும் கட்சியில் பொதுச்செயலாளராகவும் இருந்தார்.

தமிழகத்தில் 5 முறை முதல்வராக பதவி வகித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட 6 மொழிகளில் புலமை பெற்றுள்ளார். இவரும் முதல்வராக பணியில் இருந்த போது, பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில், யாருக்கும் அஞ்சாமல் பணிகளை திறம்பட செய்து முடித்தார்.
இவருக்கு தமிழக மக்கள் மீதும் அளவு கடந்த அன்பு இருந்ததால், இவரை அனைவரும் புரட்சி தலைவி அம்மா என்று அழைத்து வந்தனர். பல்வேறு வளர்ச்சி பணிகளையும் திட்டங்களையும் செயல்படுத்தி காட்டினார். கட்சியையும் ஆட்சியையும் திறம்பட வழி நடித்தி மக்களுக்க நலத்திட்ட உதவிகளையும் வழங்கியவர். எதையும் சாதிக்கும் மனோநிலை கொண்டவர் ஜெயலலிதா.

உடல் நலக்குறைவு காரணமாக 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். பிறகு 75 நாட்களுக்கு பிறகு டிசம்பர் 5ம் தேதி இறந்தார்.

கருணாநிதி:

கருணாநிதி:

திருவாரூரில் பிறந்தாலும், சிறிய வயது முதல் தமிழ் மீது பற்று கொண்டவர். பிறகு 14 வயது நீதிக் கட்சி மீது பற்றுக் கொண்ட அவர் அரசியல் போராட்ட களத்தில் குதித்தார். பிறகு பெரியாரின் திராவிட கழகத்தில் மாணவரணியில் முக்கிய பொறுப்பு வகித்தார். அண்ணாவில் தொடங்கிய திமுக கட்சியில் இணைந்து செயல்பட்டார். அப்போதும் கதை, திரைக்கதை, வசனம் என தனது படைப்புகளை எழுதி வந்தார். மேலும் பத்திரிக்கையாளராகவும் செயல்பட்டார்.
அண்ணாவின் மறைவுக்கு பிறகு திமுக கட்சியின் தலைவரானார் கருணாநிதி. தமிழ்நாட்டில் ஐந்து முறை முதல்வராக இருந்தார்.

பல்வேறு வளர்ச்சி பணிகளையும் சமுதாயத்தில் சமுதாயத்தில் நிலவி வந்த ஏற்ற தாழ்வுகளை களைய வழிவகுத்தார். கட்சியையும், ஆட்சியையும், சமூகத்தையும், பத்திரிக்கையாளன், கதை, திரைக்கதை, சமூக சிந்தனை, தமிழ் மீது பற்று என பன்முகத் தன்மை கொண்டு விளங்கினார். சிறு வயது முதல் இறப்பு வரையும் பல்வேறு போராட்டங்களை கண்டவர்.

2018ம் ஆண்டு 27ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு சிகிச்சை பலன் இன்றி ஆகஸ்ட் 7ம் தேதி இறந்தார்.

இடைபட்ட காலத்தில் மறைவு:

இடைபட்ட காலத்தில் மறைவு:


தமிழகத்தில் முக்கியமாக இருந்த அப்துல்காலம், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் 2015, 2016, 2018 என்று இடைப்பட்ட ஆண்டுகளில் மறைந்து இருப்பது இந்திய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களை போல அடுத்த தலைமுறையில் பெரும் தலைவர்கள் யாரும் இல்லை என்று கூறலாம். தற்போது இந்த செய்திகள் இணையத்தில் வெளியாகி தமிழக மக்களின் மன நிலையை உலுக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
tamilnadu loses leaders quickly abdul kalam jayalalitha and karunanidhi: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X