ராட்சத பட்டத்தின் வாலில் சிக்கி பறந்த 3வயது சிறுமி.! பின்பு நடந்தது என்ன? வைரல் வீடியோ.!

|

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டம் விட்டு விளையாடுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் பட்டம் விடும் போட்டியின்போது பறக்க விடப்பட்ட ராட்சத பட்டத்துடன், அதை வேடிக்கை பார்த்துகொண்டிருந்த 3வயது சிறுமியும் பட்டத்துடன் வானில் பறந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்சமயம் வைரலாகி வருகிறது.

 பல நாடுகளில் பட்டம் விடும் திருவிழா

அதாவது பல நாடுகளில் பட்டம் விடும் திருவிழா நடைபெறுவது வழக்கம் தான், நமது நாட்டிலும் கூட வட மாநிலங்களில் அதிக பட்டம் விடும் திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

தைவான் நாட்டிலும் வழக்கம்போல

அதேபோல் தைவான் நாட்டிலும் வழக்கம்போல பட்டம் விடும் திருவிழா ஆனது மிகுந்த விமர்சையாக நடைபெற்றது,குறிப்பாக வடக்கு தைவானின் ஹ்சிஞ்சுவில் நடைபெற்ற காத்தாடி,திருவிழாவில் ஏராளமான ராட்சத பட்டங்கள் பறக்க விடப்பட்டது.

Xiaomi: பெருமிதமாக 3000 Mi ஸ்டோர்களை இந்தியாவில் களமிறக்கிய நிறுவனம்!

விடும் திருவிழாவை

அந்தசமயம் பட்டம் விடும் திருவிழாவை பெற்றோருடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த 3வயது சிறுமி ஒரு ராட்சத பட்டத்தின் வாலில் சிக்கி. அந்த ராட்சத பட்டத்துடன் சேர்ந்து பறந்தாள்.

100 அடி தூரத்துக்கு அந்த பட்டம் பறந்த

சரியாக 100 அடி தூரத்துக்கு அந்த பட்டம் பறந்த நிலையில், அதனுடன் சேர்ந்து குழந்தையும் பறந்த அதிர்ச்சி சம்பவம் பார்வையாளர்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே பட்டத்தை இறக்கி குழந்தையை காப்பற்ற முயற்சி

மேற்கொள்ளப்பட்டது.

டெக்னோ ஸ்பார்க் கோ 2020 நாளை அறிமுகம்: எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் அம்சங்கள்!

100 அடி தூரத்துக்கு தூக்கி வீசியபின்

மேலும் 100 அடி தூரத்துக்கு தூக்கி வீசியபின் பட்டத்தின் வால் தரையை நோக்கி வந்தது, அப்போது சிறுமியை காப்பாற்றுவதற்காக காத்திருந்த மக்கள் சிறுமியை பிடித்துக்கொண்டனர். எனினும், சிறுமிக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

30நாட்களுக்கு இலவச சேவையை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ.! மகிழ்ச்சி.!

பின்பு இந்த சம்பவத்தால் இந்த திருவிழாவும் நிறுத்திக்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது, இருந்தபோதிலும் 3 வயது சிறுமி ஒருவர் சிக்கியதை அடுத்து, பட்டத்துடன் சேர்ந்து வானில் சுழற்றியடிக்கப்பட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி பதைபதைப்புக்குள்ளாகியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
3-year-old gets entangled in kite strings, lifted into air during Taiwan festival: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X