பேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பி தற்கொலை: 2000 பேர் பார்த்த போதும் ஒருவர் கூட புகாரளிக்கவில்லை.!
இதற்கு முன்பு மேற்கு வங்காளத்தை சேர்ந்த பர்கானாஸ் மாவடத்தில் இருக்கும் 24 பகுதியில் வசிக்கும் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
ஹரியானா மாநிலம் குருகிராம் என்ற பகுதியில் ஒருவர் தற்கொலையை நேரலையாக ஒளிபரப்பி அதை 2000 பேர் பார்த்த போதிலும் ஓருவர் கூட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்பது மிகவும் மன வருத்தத்தை
ஏற்படுத்தியுள்ளது.

ஜடோலி பகுதியில் வசித்த அமித் சவுகான் என்பவர், தமது மனைவி குழந்தைகளோடு வீட்டை விட்டு வெளியேறியதை அடுத்து, மிகவும் மனமுடைந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக இதை முன்கூட்டியே பேஸ்புக்கில் அமித் அறிவித்து,தற்கொலையை நேரலையாக ஒளிபரப்பிய போதும், அதை 2000-க்கும் மேற்பட்டோர் பார்த்தபோதும், ஒருவர் கூட அருகில் வசிப்பவர்களை அழைத்து தடுத்து நிறுத்தச் செய்யவோ, பின்பு
போலீசாருக்கு தவல் கொடுக்கவோ இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் மறுநாள் காலை தகவல் அறிந்த பின் போலீசார் அங்கு வந்துள்ளனர், பின்பு விசாரித்த போது அந்த நபர் மனநலம் சரியில்லதவர் என்றும் கடந்த சில மாதங்களான சிகிச்சை எடுத்து வந்ததாகவும் உறவினர்கள் கூறியிள்ளனர்.

இருந்தபோதிலும் அவரது மரணத்திற்கு யாரும் காரமல்ல என்று உறவினர்களும் புகார் அளிக்க மறுத்தவிட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்பு மேற்கு வங்காளத்தை சேர்ந்த பர்கானாஸ் மாவடத்தில் இருக்கும் 24 பகுதியில் வசிக்கும் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு காரணம் அவரது காதலனுடன் கடும் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது, அப்போது தான் தற்கொலை செய்துவிடுவேன் என்று எனக் காதலனிடம் கூறியுள்ளார், பின்பு பேஸ்புக்கில் லைவ் கொடுத்து தற்கொலை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications