இந்திய சர்ஜிக்கல் தாக்குதலில் 170பாக்.தீவிரவாதிகள் பலி: இத்தாலி பெண் நிருபர் தகவல்.!

|

புல்வாமா தாக்குதலுக்கு பலி தீர்க்கும் விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தான் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது நடத்திய தாக்குதலில் 170 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியசர்ஜிக்கல் தாக்குதலில் 170பாக்.தீவிரவாதிபலி:இத்தாலிநிருபர்கூற்று

இதில் காயமடைந்த ஜெய் இ முகமது தீவிரவாதிகள் சிகிச்சையின் போது, 20 பேர் இறந்ததாகவும், சுமார் 45 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் இத்தாலி செய்தியாளர்கள் புதிய தகவலை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு:

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு:

புல்வாமாவில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் பாகிஸ்தானில் முகாம் அமைத்து தங்கியிருந்தனர். மேலும், இவர்கள் தங்கியிருந்தை மத்திய அரசு செயற்கைகோளுடன் கண்காணித்து வந்தது. தீவிரவாதிகள் முகாம் மீது மிராஜ் 2000 போர் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக முன்பு ஆதாரத்தை வெளியிட்டது.

 பிப்.26ம் தேதி தாக்குதல்:

பிப்.26ம் தேதி தாக்குதல்:

இந்தியா தாக்குதல் நடத்தியது: காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு என்ற தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது. இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த பிப்ரவரி 26ம் தேதி பாகிஸ்தான் பாலகோட்டில் இந்தியா விமாப்படை தாக்குதல் நடத்தியது.

1000 கிலோ வெடி மருந்து:

1000 கிலோ வெடி மருந்து:

இதில் ஆயிரம் கிலோ வெடி மருந்துகளை மிராஜ் 2000 விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 300 தீவிரவாதிகள் பலியானதாக தகவல் வெளியானது. இதை பாகிஸ்தான் மறுத்து வந்தது.

300 செல்போன் ஆக்டிவேட்:

300 செல்போன் ஆக்டிவேட்:

இந்நிலையில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முன் அவர்கள் பயன்படுத்தி வந்த செல்போன்கள் ஆக்வேடில் இருந்துள்ளன.

தொழில்நுட்ப ஆதாரம்:

தொழில்நுட்ப ஆதாரம்:

இந்த தாக்குதல் சம்பவத்தின் போது, ஒவ்வொரு ஆதரமாக வெளியாகி வருகின்றது. இதில், தொழில்நுட்பத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதில் 300 செல்போன் அந்த நேரத்தில் உச்சபட்ச சிக்னல் உடன் ஆக்டிவேட் உடன் இருந்துள்ளது. இது தாக்குதல் நடக்கும் முன்பு வரை.

செல்போன் சிக்னல் கருவிகள்:

செல்போன் சிக்னல் கருவிகள்:

தொலைபேசி சிக்னல்களுக்கான கருவிகளும் தீவிரவாதிகளின் முகாம்களில் இருந்துள்ளது. இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் அவைகள் சீர்குலைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழப்பு நிச்சயம்:

உயிரிழப்பு நிச்சயம்:

இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட நபர்கள் குறித்த குறிப்பான தகவல்கள் இல்லை. எனினும் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது மட்டும் வெளிவாக தெரியவருகின்றது.

விமானப்படை தலைவர் உறுதி:

விமானப்படை தலைவர் உறுதி:

இந்த தாக்குதல் நடத்தப்பட்டது உண்மை. இதில் தீவிரவாதிகளின் முகாம் அடியோடு அழிக்கப்பட்டன. தீவிரவாதிகளை அழிப்பது எங்களின் இலக்கு. ஆனால் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது. இதை அரசு விரைவில் வெளிப்படுத்தும் என்று கூறியிருந்தார்.

ஆற்றில் எரிக்கப்பட்ட சடலம்:

ஆற்றில் எரிக்கப்பட்ட சடலம்:

பாலகோட் தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் சடலங்கள் எரிக்கப்பட்டதாகவும், ஆற்றில் வீசப்பட்டதாகவும் நேரில் பார்த்த ஒருவர் கூறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தடயங்கள் மறைப்பு:

தடயங்கள் மறைப்பு:

பாலகோட்டில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியது. தாக்குதல் நடந்து முடிந்த பின்னர், அந்த இடங்களை, பாகிஸ்தான் அதிகாரிகள், தாக்குதல் எதுவுமே நடக்காதது போல் மாற்ற முயன்றதை நேரில் பார்த்ததாக ஒருவர் கூறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொலைக்காட்சிக்கு பேட்டி:

தொலைக்காட்சிக்கு பேட்டி:

இதில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதை அடுத்து, சிலரது சடலங்களை தீயிட்டு எரித்ததாகவும், ஆற்றில் தூக்கி வீசியதாகவும் நேரில் பார்த்தவர்கள் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளனர்.

170 தீவிரவாதிகள் பலி:

பிரான்கெஸ்கா மாரினோ என்ற செய்தியாளர் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவுகளில், இந்தியா நடத்திய தாக்குதலில் 170 தீவிரவாதிகள் பலியாகியுள்ளனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகள் பெரும்பாலோர் வெடிகுண்டு தயாரிப்பதில் நிபுணர்கள் என்றும் ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள் என்றும் தெரிவித்துள்ளார். இரண்டு பேர் ஆப்கானிஸ்தானில் இருந்து பயிற்சிக்காக வந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

45 பேர் பாகிஸ்தானில் சிகிச்சை:

45 பேர் பாகிஸ்தானில் சிகிச்சை:

மருத்துவமனையில் காயம் அடைந்து சிகிச்சை பெற்றவர்களில் 20 பேர் இறந்திருக்கலாம் என்றும், 45 பேர் பாகிஸ்தானில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
170 JeM terrorists killed in Balakot airstrike-Italian journalist : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X