மொபைல் பேஸ்புக்கில் 100 மில்லியன் பயனாளிகள்!!!

Written By:

சமூக வலைதளங்களில் முன்னனியில் இருக்கும் பேஸ்புக் நிறுவனம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. பேஸ்புக் மொபைல் அப்ளிகேசன் மூலம் மாதத்திற்க்கு 100 மில்லியன் அதாவது 10 கோடி மக்கள் பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர் என்பதே அந்த தகவல்.

இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பேஸ்புக் பிரபலம் ஆவதற்க்கு பேஸ்புக் மொபைல் அப்ளிகேசன் மிகவும் உதவுகிறது என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

"Facebook For Every Phone" அனைத்து மொபைல்களுக்கும் பேஸ்புக் என்ற இந்த அப்ளிகேஷன் மக்கள் எளிதாக மொபைல் மூலம் பேஸ்புக்கை பயன்படுத்த உதவுகிறது.

மொபைல் பேஸ்புக்கில் 100 மில்லியன் பயனாளிகள்!!!

இந்த அப்ளிகேஷன் கிட்டதிட்ட 3,000 வெவ்வேறு மொபைல்களில் பயன்படுத்தலாம் என பேஸ்புக் நிறுவனம் கூறியது.

நியூஸ் பீடு, போட்டோ அப்லோட்ஸ், மெசேஜ் என அடிப்படை அம்சங்களை இந்த அப்ளிகேஷன் சப்போர்ட் செய்கிறது.

2011ல் கலிபோர்னியாவில் பேஸ்புக்கின் வளர்ச்சி அணியுடன் இஸ்ரேல் நிறுவனமான ஸ்னாப்டு இணைந்தது. ஸ்னாப்டு நிறுவனத்தின் தொழில்நுட்பம் மூலமே இந்த அப்ளிகேஷன் தயாரிக்கப்பட்டது. 2011ல் Facebook For Every Phone என வெளியிடப்பட்டது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot