Home
Social media

10 வழிகளில் உங்களுடைய ஸ்மார்ட்போன் உங்களைக் கொல்லக் கூடும்.! நம்பிக்கை இல்லையா இதை படிங்க.!

நீங்கள் ஆசையாய் பார்த்து ரசித்து வாங்கிய ஸ்மார்ட்போனினால் உங்களை கொல்ல முடியுமா? என்ற இந்த கேள்விக்குப் பதில், ஆம் கொல்ல முடியும் என்பது தான் உண்மையான பதில். ஆய்வாளர்களின் அறிவிப்பின்படி உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் நடமாடும் வெடிகுண்டு என்று தெரிவிக்கின்றனர்.

10 வழிகளில் உங்களுடைய ஸ்மார்ட்போன் உங்களைக் கொல்லக் கூடும்.!

இதற்கான காரணமாக 10 உண்மை சம்பவங்களைக் குறிப்பிட்டிருக்கின்றனர். இவர்கள் குறிப்பிட்டுள்ள காரணங்களைக் கேட்கையில் நம்மில் பலருக்கும் இது போன்ற சம்பவங்கள் நிகழலாம் என்பது தெளிவாகத் தெரிகிறது. 10 வழிகளில் உங்களுடைய ஸ்மார்ட்போன் உங்களைக் கொல்லக் கூடும் என்பதற்கான காரணங்களைப் பார்க்கலாம்.

1. வெடிக்கும் ஸ்மார்ட்போன் பேட்டரி

1. வெடிக்கும் ஸ்மார்ட்போன் பேட்டரி

சீனாவைச் சேர்ந்த நபர் 2009 ஆம் ஆண்டில், அவரின் ஸ்மார்ட்போன் வெடித்து உயிர் இழந்துள்ளார். உங்களின் கையில் உள்ள ஸ்மார்ட்போன் அதிக வெப்பமாகி வெடித்து, உங்களின் உயிரை எடுப்பதற்கு அதிகம் வாய்ப்புள்ளது. கொஞ்சம் உஷாரா இருங்க.

2. சார்ஜிங் இல் இருக்கும் போன்

2. சார்ஜிங் இல் இருக்கும் போன்

மாவ் ஆளின் என்ற 23 வயது பெண், சார்ஜிங் இல் இருந்த ஸ்மார்ட்போனை தனது கைகளால் எடுத்த பொது மின்சாரம் தாக்கி உயிர் இழந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இதற்குச் சாத்தியம் இல்லை என்று அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

3. ஓவர் ஹீட்டிங் ஸ்மார்ட்போன்

3. ஓவர் ஹீட்டிங் ஸ்மார்ட்போன்

நம்மில் பலரும் உறங்கும்போது தலையணை அருகில் போன்களை வைத்துக் கொண்டு தான் உறங்குகின்றோம். அது மாபெரும் தவறு மற்றும் மிகப்பெரிய ஆபத்து என்கின்றனர். டெக்ஸாஸ் நகரத்தைச் சேர்ந்த 13 வயதுக் குழந்தை தான் உறங்கி எழுந்தபோது அவரின் பாதி படுக்கை எரிந்து சாம்பலானது என்பது குறிப்பிடத்தக்கது.

4. கதிர்வீச்சினால் புற்றுநோய்

4. கதிர்வீச்சினால் புற்றுநோய்

மனிதனின் மண்டைக்குள் ஏற்படும் புற்று நோய்களுக்கு இன்றைய காலகட்டத்தில் முக்கிய காரணமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது ஸ்மார்ட்போன்களில் இருந்து வெளிப்படும் அதிகப்படியான கதிர்வீச்சுகள் தான். இவை உங்களின் உயிரைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லக் கூடியது.

5. டெக்ஸ்ட்டிங்

5. டெக்ஸ்ட்டிங்

நம்மில் பலரும் சாலையில் செல்லும் பொழுது கூட நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்பிக்கொண்டே நடந்திருப்போம். சாலையை கடக்கையில், மாடிப்படியில் அல்லது குன்றுகளில் மெசேஜ் செய்துகொண்ட நடந்த பலரின் உயிர்களுக்கு ஸ்மார்ட்போன் எமன் ஆக இருந்திருக்கிறது என்பது தான் உண்மை.

6. தொந்தரவு

6. தொந்தரவு

இது கொஞ்சம் ஓவர் தான் ஆன நடந்திருக்கு, திரையரங்குகளில் படம் பார்க்கும் பொழுது உங்களின் போனகளை சைலென்டில் வைத்துக்கொள்ளுங்கள் என்று எச்சரிக்கின்றனர். ஃபுளோரிடா நகரில் 43 வயது நிறைந்த நபர் தன்னுடன் படம் பார்த்தவரைச் சூட்டுக் கொலை செய்திருக்கிறார், இதற்கான காரணம் என்னவென்றால், படம் பார்க்கும் பொழுது அருகில் அமர்ந்து போனில் பேசி தன்னை தொந்தரவு செய்ததாகக் அவர் குறிப்பிட்டுள்ளார்.

7. செலஃபீ

7. செலஃபீ

உயரமான இடங்கள் மற்றும் ஆபத்தான இடங்களில் செல்ஃபி எடுப்பதினால் உங்களின் உயிர்களுக்கு ஆபத்து இருக்கிறதென்று தெரிவித்துள்ளனர். கவனக்குறைவினால் செலஃபீ எடுக்கும்பொழுது உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

8. சார்ஜ் இல்லாமல்

8. சார்ஜ் இல்லாமல்

முக்கியமான அழைப்பு செய்ய வேண்டிய நேரத்தில் அல்லது கேம் விளையாடும் நேரத்தில் உங்கள் போன் சுவிட்ச் ஆப் ஆகிவிட்டால், உங்கள் மனம் உடைந்து, இரத்த அழுத்தம் அதிகம் ஆகிக் கூட உயிர் இழக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கின்றனர். பல கேமர்களின் உயிரிழப்பிற்கு இது காரணமாக இருந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கிறது.

9. போன் திருட்டு

9. போன் திருட்டு

போன் திருடர்கள், போன்களை திருட முயற்சிக்கும் பொழுது நடந்த சில அசம்பாவிதங்களால் உலகின் பல பகுதிகளில் பல உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன.

10 குளியலறையில் போன் எதற்கு

10 குளியலறையில் போன் எதற்கு

குளியலறையில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நபர் நீங்கள் என்றால், கொஞ்சம் கவனமா இருந்துகொள்ளுங்கள். குளியலறையில் சார்ஜிங் போட்ட போனை ஈரக் கைகளுடன் பயன்படுத்தி உயிர் இழந்தவர்களும் இங்கு உண்டு.

விழிப்புடன் இனி இருங்கள்

விழிப்புடன் இனி இருங்கள்

நாம் நினைத்துக் கூட பார்த்திடாத இது போன்ற காரணங்களினால் ஸ்மார்ட்போன்கள் பலரின் உயிர்களைக் காவு வாங்கியுள்ளது. ஸ்மார்ட்போன்களால் இது போன்ற பிரச்சனைகளில் கூட நாம் சிக்க வாய்ப்புள்ளது என்பதினால், நம்மை நாமே காத்துக்கொள்ள இன்னும் கூடுதல் விழிப்புடன் இனி ஸ்மார்ட்போன்களை பயன்படுத்திக்கொள்வோம்.

Best Mobiles in India

English summary
in 10 ways your smartphone can kill you : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X