Home
Social media

2018-ன் டாப் 10 வைரல் வீடியோக்கள்

இதோ 2018ஆம் ஆண்டில் வைரலாக இணையத்தை கலக்கிய டாப்10 வீடியோக்களின் தொகுப்பு.

மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் இலவச வீடியோ சேவை வழங்கும் யூடியூப், அறிவியல் தொழில்நுட்பம் முதல் கற்பனை கதைகள் வரை பல்வேறு தலைப்புகளில் ஏராளமான வீடியோக்களை வழங்கிவருகிறது.

2018-ன் டாப் 10 வைரல் வீடியோக்கள்

அதுபோலவே, பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற பல்வேறு சமூக வலைதளங்களும் பயனர்களால் உருவாக்கப்படும் தனித்துவம் வாய்ந்த பல்வேறு வீடியோக்களால் நிரம்பி வழிகின்றன. இதோ 2018ஆம் ஆண்டில் வைரலாக இணையத்தை கலக்கிய டாப்10 வீடியோக்களின் தொகுப்பு.

யூடியூப் ரீவைண்ட் 2018

அனைத்து தளங்களிலும் அதிகளவில் டிஸ்லைக் செய்யப்பட்ட யூடியூப் ரீவைண்ட்2018 வீடியோ, இந்த கட்டுரையை எழுதும் போது 14M+ டிஸ்லைக்குகள் பெற்றிருந்தது. ஒவ்வொரு ஆண்டும் யூடியூப் நிறுவனம் ஒரு படைப்பாளிகள் குழுவை வைத்து, அந்த ஆண்டில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு வீடியோவை உருவாக்கும். பல்வேறு காரணங்களுக்காக இந்த 2018ம் ஆண்டின் ரீவைண்ட் வீடியோ பல்வேறு எதிர்மறையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

பீனெட் பட்டர் மூலம் கரியை வைரமாக மாற்றுதல்

கரியை எப்படி வைரமாக அல்லது ஒளி ஊடுருவும் படிகமாக மாற்றுவது என்ற ஆச்சர்யமான வீடியோ பேஸ்புக்கில் வைரலானது. இறுதியில், சில பயனர்கள் இந்த வீடியோ போலியானது என்பதையும், கரியையும், பீனெட் பட்டரையும் வைத்து படிகங்களை உருவாக்க முடியாது எனவும் நிரூபித்தனர்.

லூயிஸ் போன்ஸி -டிஸ்பாஸிடோ டாடி. யான்கி

இந்த வீடியோ உண்மையில் 2017ல் வெளியிடப்பட்டிருந்தாலும், 5.6 பில்லியன் வியூஸ் உடன் யூடியூபில் அதிகம் பார்த்த வீடியோக்களில் ஒன்றாக உள்ளது.

ஸ்கேட்டிங் செய்யும் நாய்

இதை வார்த்தைகளால் விவரிக்கவே இயலாது. காணொளியை பாருங்கள்.

சால்ட் பே(Salt Bae)

நீங்கள் யூடியூப் மற்றும் இதர சமூகவலைதளங்களில் சமையல் மற்றும் உணவு தொடர்பான ஏராளமான வீடியோக்களை பார்ப்பவர் என்றால், நிச்சயம் உங்களுக்கு சால்ட் பே பற்றி தெரிந்திருக்கும். இவர் இறைச்சியுடன் உப்பை கலக்கும் விதம் இணையத்தில் வைரலானது.

அஸ்லாம் அலைக்கும் வாலிக்கும் சலாம்

இந்த சிறிய வீடியோ 16மில்லியன் வியூஸ் உடன் பலரின் கவனத்தை ஈர்த்தது. ஒரு பிரபலமில்லாத யூடியூப் சேனலில் வெளியான வீடியோவிற்கு 16மில்லியன் வியூ என்பது மிகப்பெரிய விசயம்.

மார்வெல் ஸ்டுடியோ அவென்ஞர்ஸ் - அதிகாரப்பூர்வ ட்ரைலர்

74மில்லியன் வியூஸ்-ஐ கடந்து இன்னும் இணையத்தை கலக்கிக்கொண்டிருக்கும் இந்த வீடியோ தான், மார்வெல் சினிமேடிக் யுனிவர்ஸ் வெளியிட்ட 4அவென்சர் திரைப்படங்களில் முதல் டிரைலர் ஆகும்.

இமிநெம் - வெனம்

ரேப் கடவுளான இமிநெம் வெளியிட்ட ரேப் பாடல் இமிநெம் - வெனம். அக்டோபர் 2018ல் வெளியான இது, 187மில்லியன் வியூஸ் கடந்து இணையத்தை கலக்குகிறது.

அரியானா கிராண்ட் -தேங்க்யூ, நெக்ஸ்ட்

நவம்பர் 2018ல் வெளியான இந்த வீடியோ , 50 க்கும் குறைவான நாட்களில் 187மில்லியன் தடவை பார்க்கப்பட்டுள்ளது.

ஐபோன் எக்ஸ் - அன்லாக் - ஆப்பிள்

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்-ல் உள்ள ஃபேஸ் ஐடி வசதியை பிரபலபடுத்த இந்த விளம்பரத்தை ஆப்பிள் வெளியிட்டது. 13மில்லியன் பார்வைகளை கடந்து இன்னும் இணையத்தில் வலம் வந்துகொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
10 viral videos of 2018 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X