சமூக வலைத்தளங்கள் நமக்கு ஏன் தேவை? 10 காரணங்கள்

சமூக வலைத்தளங்கள் நமக்கு ஏன் தேவை? 10 காரணங்கள்

By Siva
|

உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களின் பயன்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. பள்ளி மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை தற்போது ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

சமூக வலைத்தளங்கள் நமக்கு ஏன் தேவை? 10 காரணங்கள்

பெரும்பாலான இண்டர்நெட் பயனாளிகள் தங்களுடைய அதிக நேரத்தை செலவு செய்வது சமூக வலைத்தளங்களில்தான். நண்பர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்க, அவர்களுடைய செயல்பாடுகளை தெரிந்து கொள்ள, புதிய செய்திகளை அறிய, ஓய்வு நேரத்தை கழிக்க என பலரும் பலவிதங்களில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நமக்கு சமூக வலைத்தள கணக்கு ஏன் தேவை என்பது குறித்து தற்போது பார்ப்போம்

மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்த உதவும்:

மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்த உதவும்:

மனிதர்கள் எப்போது ஒரே மாதிரியான மனநிலையில் இருப்பதில்லை. சில சமயம் டென்ஷன், துயரம் போன்ற மோசமான மனநிலையில் இருக்கும்போது ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை ஓப்பன் செய்து அதில் உள்ள ஓரிரு மிமிக்கள், நகைச்சுவை வீடியோக்களை பார்த்தாலே போதும், துன்பமெல்லாம் பறந்து ஓடிவிடும்.

எப்போதும் நண்பர்களுடன் தொடர்பில் இருக்கலாம்:

எப்போதும் நண்பர்களுடன் தொடர்பில் இருக்கலாம்:

எப்போதும் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலக நண்பர்கள் பக்கத்தில் இருக்க முடியாது. பணி நிமித்தம் வெவேறு ஊர்களிலோ, வெவ்வேறு நாட்களிலோ இருக்கலாம். ஆனால் சமூக வலைத்தளத்தின் மூலம் நண்பர்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருந்து அரட்டை அடிப்பதை போன்ற ஒரு உணர்வை பெறலாம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்:

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்:

இப்போது எந்த ஒரு பிரேக்கிங் செய்தியாக இருந்தாலும் முன்னணி இணையதளத்தில் வருவதற்கு முன்பே ஃபேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றில் வந்துவிடும். எனவே 24 மணி நேரமும் செய்திகளை முந்தி தருவது சமூக வலைத்தளங்கள் மட்டுமே

ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க உதவும்

ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க உதவும்

சமூக வலைத்தளங்கள் வெறும் நகைச்சுவை, நட்புக்கு மட்டுமின்றி ஏராளமான புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள, மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்க பெரிதும் உதவுகின்றது. பள்ளி, கல்லூரிகளில் கிடைக்காத பல அரிய விஷயங்கள் யூடியூபில் கிடைக்கின்றது என்பது தான் உண்மை

ஃபேஸ்புக்கில் இதெல்லம் புதுசு! உங்களுக்கு தெரியுமா?ஃபேஸ்புக்கில் இதெல்லம் புதுசு! உங்களுக்கு தெரியுமா?

கருத்துக்களை பகிர்ந்து கொள்ள:

கருத்துக்களை பகிர்ந்து கொள்ள:

ஒரு கருத்தை மற்றவர்களிடம் அதுவும் மில்லியன் கணக்கான நபர்களிடம் பகிர்ந்து கொள்ள இருக்கும் ஒரே தளம் சமூக வலைத்தளம்தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எந்த ஒரு விஷயமும் மிக வேகமாக மற்றவர்களிடம் சென்றடைவதால் நமது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள, விமர்சனம் செய்ய உதவுகிறது.

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவு செய்ய உதவும்

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவு செய்ய உதவும்

நம்முடைய புகைப்படம் மற்றும் வீடியோக்கள் ஒரு சில நிமிடங்களில் நாம் விரும்பும் நபர்களுக்கோ அல்லது சமூகத்திற்கோ செல்ல வேண்டும் எனில் அதற்கு சரியான தளம் சமூக வலைத்தளம் தான்.

குறிப்பாக இன்ஸ்டாகிராம், ஸ்னா;சேட் போன்ற தளங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு புகழ் பெற்றது. நாம் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவர்கள் பெயரை ஹேஷ்டேக் செய்தால் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நமது புகைப்படம் சென்றுவிடும்

நண்பர்களுக்காக:

நண்பர்களுக்காக:

இந்த காலத்திலும் ஒருசிலர் நண்பர்களே இல்லாமல் மன அழுத்தத்துடன் இருப்பதுண்டு. இவர்களுக்கு சமூக வலைத்தளம் ஒரு பெரும் நண்பர்கள் களத்தை உருவாக்கி கொடுக்கும். மேலும் நம்மை பிற நண்பர்கள் பரிந்துரை செய்யும்போது புதுப்புது நட்பு வட்டாரங்கள் கிடைக்கும்

பொதுவான இணைப்புக்கு உதவுகிறது

பொதுவான இணைப்புக்கு உதவுகிறது

சமூக வலைத்தளங்கள் எந்த ஒரு துறையில் இருப்பவரிடமும் தொடர்பு கொள்ள உதவுகிறது. சம்பந்தப்பட்டவரின் அனுமதி பெற்று நமக்கு தேவையான துறையில் அனுபவம் பெற்றவர்களோடு தொடர்பு நமக்கு தேவையான தகவல்களை பெற்று கொள்ள உதவும் ஒரு தளம் தான் சமூக வலைத்தளம். இந்த தளங்கள் தனிப்பட்ட முறையிலும் தொழில் முறையிலும் நமக்கு பெருமளவு உதவுகிறது.

தினசரி நடவடிக்கைகளை தெரிந்து கொள்ளலாம்:

தினசரி நடவடிக்கைகளை தெரிந்து கொள்ளலாம்:

சமூக வலைத்தளம் என்பது நட்புக்கு, செய்திக்கு மட்டுமின்றி பலருடைய தினசரி நடவடிக்கைகளையும் தெரிந்து கொள்ள உதவுகிறது. அவற்றில் இருந்து நல்ல விஷயங்களை எடுத்து கொண்டு நாமும் தொடர்ந்தால் பயன் கிடைக்கும்

சந்தேகங்களுக்கு விடை

சந்தேகங்களுக்கு விடை

கூகுளை அடுத்து நமது சந்தேகங்களை தெளிவு படுத்துவதில் சமூக வலைத்தளத்தை விட்டால் வேறு தளங்களே இல்லை எனலாம். எந்த துறையில் எந்த சந்தேகத்தை நாம் பதிவு செய்தாலும் நொடிப்பொழுதில் நமக்கு தேவையான, பயனுள்ள பதில் கிடைக்கும்

Best Mobiles in India

Read more about:
English summary
A huge amount of people uses social media including Facebook, Twitter, Instagram and much more.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X