அடுத்தகட்டம் நோக்கி: மனிதர்களையே உருவாக்கி பேசுங்கள்- சாம்சங்கின் புதிய நியான் ஏஐ தொழில்நுட்பம்!

|

ஆர்டிபிஷியல் இன்டலிஜன்ஸ் (ஏஐ) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்ந்து அடுத்தக்கட்டத்தை நோக்கி முன்னேறிக் கொண்டே வருகிறது. மனிதகுலத்துக்கு இணையாக தோற்றமளிக்கும் மற்றொரு இனம் நம்மை சுற்றி நம்மோடு சகஜமாக வாழ்ந்தால் அது எப்படி இருக்கும்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நினைத்துக் கூட பார்க்கமுடியாத விஷயங்களை சாத்தியமாக்கிக் கொண்டே வருகிறது. எடுத்துக்காட்டாக., பேசுவதை நேரடியாக எழுத்தாக மாற்றும் தொழில்நுட்பம் 99 சதவீதம் பிழையின்றி வர ஆரம்பித்துவிட்டது என்றே கூறலாம்.

ஏஐ தொழில்நுட்பம்

ஏஐ தொழில்நுட்பம் என்பது மனிதர்களால் நம்பமுடியாதவைகளை சாத்தியமாக்குவதாகும். சமீபத்தில் எலான் மஸ்க்கின் நியூரோலிங்க் மனித மூளைக்குள் கணினி சிப்களை பொருத்தும் நடவடிக்கை தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. இந்த கணினி சிப் எலி மீதான சோதனை வெற்றியடைந்ததையடுத்து குரங்கின் மீதான சோதனை நடைபெற்று வருகிறது. கூடிய விரைவில் மனிதகுலம் மீது சோதனைக்கு உட்படுத்தப்படும்.

அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் தொழில்நுட்பம்

உலகம் அடுத்ததடுத்த கட்டத்திற்கு முன்னேறிக் கொண்டே தான் இருக்கிறது. முன்னற்றம் என்பது தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை வைத்தே கணிக்கப்படுகிறது என்றால் அது மிகையல்ல. வளரும் தொழில்நுட்பங்கள் நம்மை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துக் கொண்டு செல்கிறது.

மனிதர்களை போன்ற ரோபோட்கள்

மனிதர்களை போன்ற ரோபோட்கள்

அதேபோல் தற்போது உருவாக்கப் படும் ஏஐ ரோபோட்கள் அனைத்தும் மனிதர்களை விடப் பல மடங்கு புத்திசாலியாகவும், திறமையாகவும் உருவாக்கப்பட்டு வருகின்றது. இதில் சுவாரசியம் மற்றும் நெஞ்சைப் பதறவைக்கும் சில உண்மை என்னவென்றால், இந்த ரோபோட்கள் விரைவாக மனிதர்களின் வாழ்கை முறைகளை ஆராய்ந்து, ஒரு கட்டத்தில் மனிதர்களின் கட்டளைக்கு உட்படாமல் தானாகவே சிந்தித்து முடிவெடுக்கும் எண்ணத்திற்கு செல்லும் என ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.

2015ல் கொரோனாவை கணித்த பில்கேட்ஸ் மீண்டும் எச்சரிக்கை:அடுத்தடுத்து இன்னும் 2 பேரழிவுகள் இருக்கு-என்ன தெரியுமா?2015ல் கொரோனாவை கணித்த பில்கேட்ஸ் மீண்டும் எச்சரிக்கை:அடுத்தடுத்து இன்னும் 2 பேரழிவுகள் இருக்கு-என்ன தெரியுமா?

புதிய ஏஐ தொழில்நுட்பம்

அதேபோல் தற்போது சாம்சங் நிறுவனம் ஒரு புதிய ஏஐ தொழில்நுட்பத்தை கொண்டு வந்துள்ளது. சாம்சங்கின் புதிய திட்ட நியான், ஏஐ மனிதர்களை வெற்றிகரமாக உருவாக்கி அவற்றை உண்மையாகவே உலகிற்கு கொண்டு வருகிறது.

சாம்சங் சிஇஎஸ் 2021

சாம்சங் சிஇஎஸ் 2021

சாம்சங் சிஇஎஸ் 2021-ல் தங்கள் திட்டமான நியான் தொழில்நுட்பத்தை காண்பித்ததோடு 3 வணிக தயாரிப்புகளை அறிவித்தது. இது ஒரு திரையின் மூலம் மனிதனை போல் தோற்றமளிக்கிறது மேலும் அதன் பயனர்களின் அன்றாட வேலைகளை மேற்கொள்ள இது உதவுகிறது.இந்த பயன்பாடு சூழ்நிலை கற்றல் மற்றும் தழுவல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டுள்ளது. மேலும் இது அடிப்படையிலான தயாரிப்புகள் மற்றும் வணிக ரீதியாக காணப்படும் சாதாரண நுகர்வோருக்கு கிடைக்கும்.

நியான் ஃபிரேம், நியான் வியூ மற்றும் நியான் ஸ்டுடியோ

நியான் ஃபிரேம், நியான் வியூ மற்றும் நியான் ஸ்டுடியோ

இதன் தயாரிப்புகள் நியான் ஃபிரேம், நியான் வியூ மற்றும் நியான் ஸ்டுடியோ ஆகியவை ஆகும். நியான் ஃபிரேம் தொழில்நுட்பம் குறித்து பார்க்கையில், இதன் பெயர் தெரிவிப்பது போல் நியான் ஃபிரேம் 4கே பேனலுடன் கூடிய பெரிய டிஸ்ப்ளேவுடன் வருகிறது. டிஸ்ப்ளே அசிஸ்டென்ட் ஆகியவையை கொண்டுள்ளது. இதன் பெரிய அளவு டிஸ்ப்ளே உண்மையில் மிகவும் யதார்த்தமாக இருக்கிறது என்றே கூறலாம்.

டிஸ்ப்ளே உயர்தர ஒலி, பாதுகாப்பு அமைப்பு

நியான் ஃபிரேம் மூலம் அசிஸ்டென்டுடன் தொடர்பு கொள்வது மிகவும் நுட்பமானதாக இருக்கும். இந்த தொழில்நுட்பமானது கண்ணாடிக்கு பின்னால் இருக்கும் ஒரு சாதாரண மனிதருடன் பேசுவதை போல் இருக்கிறது. டிஸ்ப்ளே உயர்தர ஒலி, பாதுகாப்பு அமைப்பு, பயோமெட்ரிக் அங்கீகாரம், கட்டண முறைகள் ஆகியவைகளை கொண்டுள்ளது.

நியான் வியூ

நியான் வியூ

நியான் பிரேம் விலை சற்று அதிகமாக இருக்கும் என்று யூகிக்கப்பட்டாலும். சாம்சங் தங்களது பயனர்களுக்கு நியூ வியூ பயன்பாட்டை வழங்குகிறது. இது நபர்களை சாட்போர்டுகளுடன் நபர்களை தொடர்பு கொள்ளவும் உரையாடவும் அனுமதிக்கிறது. இது பயனர்களை நிகழ்நேர வாழ்க்கை பயன்பாட்டை போல் பதில்களை வழங்க சக்திவாய்ந்த வழிமுறைகளையும் செயலாக்கத்தையும் பயன்படுத்துகிறது. மெய்நிகர் தொழில்நுட்பத்தைவிட இது மிகவும் புத்திசாலித்தனமான பயன்பாடாக இருக்கும்.

நியான் ஸ்டுடியோ

சாம்சங் தொழில்முறை படைப்பாளர்களுக்கு நியான் ஸ்டுடியோவை அறிவித்துள்ளது. பயனர்கள் வீடியோக்களை உருவாக்குவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஸ்கிரிப்டுகள், மனநிலைகள், டோன்களை சாப்ட்வேரில் உள்ளிடலாம். அசிஸ்டென்ட் இது அனைத்தையும் படிப்பார்கள். அதேபோல் அசிஸ்டென்ட் பேசும் பாணியின் வேகத்தையும் பயனர்கள் கையாளலாம். அதுமட்டுமின்றி வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்வதற்கும், சேமிப்பதற்கும் இந்த மென்பொருள் அனுமதிக்கிறது.

Best Mobiles in India

English summary
You Can Create AI Humans: Do you Know About Samsung's New Neon Project

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X