பூமியை அழிக்கும் மனிதர்கள்! விண்வெளியில் முதலீடு செய்யும் உலகின் பணக்கார மனிதர்.!

|

உலகின் மிகப்பெரிய பணக்காரரான அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெப் பெஸோஸ், தனது பணத்தை எப்படி வேண்டுமானாலும் செலவழிக்க முடியும், ஆனால் அதில் பெரும்பான்மையான பகுதி விண்வெளி ஆய்வை நோக்கி செல்கிறது.

மாற்றுத் திட்டம் தேவை

மாற்றுத் திட்டம் தேவை

ஏன்? ஏனெனில் நாம் பூமியை முழுமையாக அழித்த பிறகு, உண்மையில் மாற்றுத் திட்டம் தேவை என்று அவர் நினைக்கிறார்.

"CBS ஈவினிங் நியூஸ்"ல் நடைபெற்ற நேர்காணலில் நோராஹ் ஓ'டோனெல், "ஏன் உங்களது விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜினில் இவ்வளவு அதிகமாக முதலீடு செய்கிறீர்கள்" என பெஸோஸிடம் கேட்டதிற்கு, வெறுமனே "இது முக்கியம் என்று நான் நினைக்கிறேன்." என பதிலளித்தார்.

இயற்கை ஆற்றலின் விளைவு

இயற்கை ஆற்றலின் விளைவு

" இது இந்த கிரகத்திற்கு முக்கியம் என்று நினைக்கிறேன். எதிர்கால தலைமுறைகளின் அனைத்தும் இயற்கை ஆற்றலின் விளைவு என்னும் கொள்கைக்கு இது முக்கியம் என நினைக்கிறேன். நான் ஆழமாக யோசித்துக்கொண்டிருக்கும் விசயத்தில் இதுவும் ஒன்று. மற்றும் இது நான் எனது வாழ்நாள் முழுதும் சிந்தித்துக்கொண்டிருப்பது " என்கிறார் ஜெப் பெசோஸ்.

செவ்வாயில் சுனாமி! 75 மைல் நீளமுள்ள பள்ளத்தாக்கை உருவாக்கியது...செவ்வாயில் சுனாமி! 75 மைல் நீளமுள்ள பள்ளத்தாக்கை உருவாக்கியது...

விண்வெளி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது

விண்வெளி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது

பஷ் ஆல்ட்ரின் மற்றும் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால்பதித்ததை பார்த்தபோது, ​​ஒரு குழந்தையாக விண்வெளிப் பயணம் என்ற யோசனையால் தான் ஈர்க்கப்பட்டதாக பெசோஸ் கூறுகிறார். அவர் அந்த இலக்கை நோக்கி தனது பார்வையை திருப்புவதற்கு முன்பு நேரம் தான் முக்கியமானது. ஆனால் அதைவிட முக்கியமாக அவர் கூறுவது, விண்வெளி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது மனித இனம் உயிர்வாழ்வதற்கு மிக அவசியமானது.

இந்த கிரகம் சிறியதாகவுள்ளது

இந்த கிரகம் சிறியதாகவுள்ளது

" நமது நாகரிகத்தை தொடர வேண்டும் என்றால், மனிதர்களாகிய நாம் விண்வெளிக்கு செல்ல வேண்டும். உயிரினங்களிலேயே மிகப்பெரிய மக்கள்தொகையை கொண்ட இனமாக மனித இனம் மாறியுள்ள நிலையில், ஒப்பீட்டளவில் இந்த கிரகம் சிறியதாகவுள்ளது. காலநிலை மாற்றம், மாசுபாடு மற்றும் கனரக தொழில் போன்றவற்றில் நாம் அதை பார்க்கிறோம். இந்த கிரகத்தை அழிக்கும் செயல்பாடுகளில் நாம் ஈடுபட்டு உள்ளோம். சூரிய மண்டலத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ரோபோடிக் விண்கலங்களை நாம் அனுப்பியுள்ளோம். இது நல்ல விசயம் தான். எனவே நமது கிரகத்தை பாதுகாக்கவேண்டும்" என்கிறார் ஜெப்.

சிறப்பு வாட்ஸ்அப் ஸ்டிக்கர் செய்து அனுப்புவது எப்படி?சிறப்பு வாட்ஸ்அப் ஸ்டிக்கர் செய்து அனுப்புவது எப்படி?

மாசுபடுத்துதல் தொழில்கள்இல்லாமல் இருக்கும்

மாசுபடுத்துதல் தொழில்கள்இல்லாமல் இருக்கும்

இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட பொசோஸ் கூறும் யோசனையின் படி, உற்பத்தி தொழிற்சாலைகளை படிப்படியாக விண்வெளி மற்றும் மற்ற கிரகங்களுக்கு மாற்றவேண்டும். "இறுதியில் அது சிக்கலான விஷயங்களை மிகவும் எளிதாக்குகிறது. நுண்செயலிகள் போன்ற மிகவும் சிக்கலான உற்பத்தி பொருட்கள் எல்லாவற்றையும் விண்வெளியில் தயாரித்து பின்னர் பூமிக்கு மீண்டும் அனுப்ப வேண்டும். அதனால் பூமியில் இப்போது இந்த பொருட்களை தயாரிக்கும் பெரிய தொழிற்சாலைகள் மற்றும் மாசுபடுத்துதல் தொழில்கள்இல்லாமல் இருக்கும்" என்கிறார்.

பூமி குடியிருப்புகளுக்கு மட்டுமே!

பூமி குடியிருப்புகளுக்கு மட்டுமே!

முன்னதாக இந்த யோசனை குறித்து பேசும் போது, ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக வாழ்விடமாக பயன்படுத்தலாம் என்றார். அந்த வழியில் கிரகத்தின் ஒவ்வொரு மக்கள்தொகையும் ஒரு பெரிய சமூகமாக இருக்கலாம். இதை அடைவதற்கு "பல தலைமுறைகள் மற்றும் நூற்றுக்கணக்கான ஆண்டுகள்" ஆகும் என்றும் அவர் அறிந்திருக்கிறார். ஆனால் அதற்கான முதல் படியை இன்றைய விண்வெளி தொழில்நுட்பங்களை உருவாக்குவதன் மூலம் சாத்தியமாக்கலாம் என்று அவர் நம்புகிறார்.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு சென்று மக்களிடம் இன்று ஒரு டிக்கெட் வாங்கி விமானம் மூலம் உலகத்தைச் சுற்றி பறக்க முடியும் என்று கூறினால் அவர்கள் உங்களை பைத்தியம் என்று நினைப்பார்கள்., ஆனால் இது போன்ற மாற்றங்கள் 100 ஆண்டுகளில் அல்லது அதற்கும் குறைவான காலத்தில் நடக்கும் என பெஸோஸ் கூறுகிறார்.

Best Mobiles in India

English summary
Worlds Richest Man Is Investing In Space Tech Because Humans Are Going To Destroy Earth : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X