உலகின் முதல் ஹாலோகிராம் சர்க்கஸ்.! ரசிகர்களை மிரளவிட்ட சர்க்கஸ் நிறுவனம்.!
தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக நமது இயல்பு வாழ்க்கை முதல் நாம் வேலை செய்யும் பல துறைகள் வரை, அனைத்திலும் பல மாற்றங்களைத் தொழில்நுட்பம் மாற்றி வருகின்றது. முக்கியமாக தற்பொழுது நிறுவனங்களுக்கு இடையே நிகழும் போட்டிகளைச் சமாளிக்கத் தொழில்நுட்பங்களின் உதவி அத்தியாவசியம் ஆகிவிட்டது.

சர்க்கஸ்களுக்கு விதிக்கப்பட்ட தடை
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, சர்க்கஸ்களின் விலங்குகளைத் துன்புறுத்தி அவற்றை சர்க்கங்களில் பயன்படுத்தி வருவதாக வந்த புகாரின் பெயரில் அணைத்து சர்க்கஸ்களிலும் குதிரை, யானை, சிங்கம், புலி போன்ற விலங்குகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதனால் சர்க்கஸ் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டது.

ரான்கேலி சர்க்கஸ்
1976 ஆன் ஆண்டில் நிறுவப்பட்ட உலகப் புகழ்பெற்ற ரான்கேலி சர்க்கஸ் நிறுவனம், சர்க்கஸ் துறையில் உலகின் முன்னணி நிறுவனமாக இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. விலங்குகளைப் பயன்படுத்த சர்க்கஸ் நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அத்தொழில் நலிந்து போனது.

டிஜிட்டல் மயமான சர்க்கஸ்
அழிந்து வரும் சர்க்கஸ் துறைக்கு உயிர் கொடுக்கும் விதமாக உலகப் புகழ் பெற்ற ரான்கேலி சர்க்கஸ் நிறுவனம், புதிய முயற்சியைக் கையில் எடுத்து வெற்றி கண்டுள்ளது. தனது சர்க்கஸ் நிகழ்ச்சியை ஹாலோகிராம் கூடாரத்திற்குள் முழுதும் டிஜிட்டல் மயமாக்கி ரசிகர்கள் மிரள வைத்துள்ளது.

"பிக் டாப் டென்ட்"
"பிக் டாப் டென்ட்" எனப்படும் இந்த ஹாலோகிராம் கூடாரத்திற்குள் தான் விலங்குகள் முதல் கோமாளி வரை அனைவரையும் டிஜிட்டல் உருவம் கொடுத்து 360 டிகிரி காட்சி அனுபவத்துடன் சர்க்கஸ் சாகசங்களைச் செய்து காட்டுகிறது.

நுணுக்கமான ஹாலோகிராம் தொழில்நுட்பம்
ஹாலோகிராபிக் முறையைப் பயன்படுத்தி, ஆக்கிரோபாட்டிக் சாகச வீரர்கள், கோமாளிகள், யானைகள், குதிரைகள் மற்றும் சிங்கங்கள் என அனைத்து கதாபாத்திரங்களுக்கும் அதன் ஒரிஜினல் தோற்றம் மற்றும் உயரம் எனப் பல நுணுக்கங்களை 11 ப்ரொஜெக்டர், லேஸர்ஸ் மற்றும் ஹாலோகிராம் லென்ஸ்களை பயன்படுத்தி முழு எச்.டி தரத்தில் ஹாலோகிராம் செய்துள்ளனர்.

மீண்டும் உயிர் பெரும் சர்க்கஸ் துறை
அழிந்து வந்த சர்க்கஸ் துறைக்கு, தொழிலுண்டபத்தின் மூலம் உயிர் கொடுத்து, புது வித அனுபவத்தை ரான்கேலி சர்க்கஸ் நிறுவனம் ரசிகர்களுக்கு வழங்கி மிரளவைத்துள்ளது. இதேமுறையைப் பயன்படுத்தி சர்க்கஸ் துறை மீண்டும் உயிர்பெறும் என்ற நம்பிக்கையுடன் சர்க்கஸ் ரசிகர்களும், சர்க்கஸ் ஊழியர்களும் புத்துணர்ச்சி பெற்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications