ஹிட்லர் பறக்கும் தட்டு, முதுகெலும்பாய் திகழ்ந்த 'மர்ம' பெண்.!!

By Meganathan
|

ஏப்ரல் 20, 1889, ஆஸ்திரியாவின் ஹங்கேரியில் பிறந்து ஜெர்மனி நாட்டின் தலைவராக உயர்ந்தவர். இவர் ஏப்ரல் 30 ஆம் தேதி 1945 ஆம் ஆண்டுத் தற்கொலை செய்து கொண்டதாக வரலாற்றுப் பதிவுகள் தெரிவித்தாலும், இவரது மரணம் குறித்து இன்றும் மர்மம் நீடிக்கின்றது.

ஹிட்லர் மரணத்தைச் சுற்றி பல்வேறு மர்மங்களில் ஒன்று தான், அவர் பறக்கும் தட்டு மூலம் உலகை விட்டு வெளியேறிவிட்டார். இந்தக் கூற்று குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இல்லை என்றாலும் பல்வேறு சதியாலோசனை கோட்பாட்டாளர்களும் இது உண்மை என்றே தெரிவிக்கின்றனர்.

ஹிட்லர் உண்மையில் பறக்கும் தட்டுப் பயன்படுத்தித் தப்பிச் சென்று இருக்கலாம் என்பதை நிரூபிக்கும் வகையில் சில அதிர்ச்சி தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

மரியா ஆர்க்ஸ்டிச்

மரியா ஆர்க்ஸ்டிச்

ரில்-கெஸல்ஷாஃப்ட் எனும் ரகசிய சமூகத்தின் உறுப்பினரான மரியா ஆர்க்ஸ்டிச் என்ற பெண், ஹிட்லர் பறக்கும் தட்டு உருவாக்கப் பின்புலமாக இருந்தார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ரில்-கெஸல்ஷாஃப்ட்

ரில்-கெஸல்ஷாஃப்ட்

ஜெர்மனியில் இயங்கி வந்த மிகவும் ரகசிய சமூகமாக ரில்-கெஸல்ஷாஃப்ட் இருந்தது. இந்தச் சமூகம் குறித்துப் பல்வேறு சதியாலோசனை கோட்பாடு மற்றும் போலி வரலாற்றுத் தகவல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பு

குறிப்பு

மரியா ஆர்க்ஸ்டிச் வேற்றுகிரகவாசிகளிடம் இருந்து நைட்ஸ் டெம்ப்ளர் என்ற தனக்குத் தெரியாத மொழியின் தகவல்களை நுண்ணுணர்வு மூலம் பெற்று வந்தார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யுஎஃப்ஒ

யுஎஃப்ஒ

வேற்றுகிரகவாசிகள் அனுப்பிய குறிப்புகள் பறக்கும் தட்டு (யுஎஃப்ஒ) கட்டமைப்பு முறைகளைக் கொண்டிருந்ததாகவும் வெளியான தகவல்களில் கூறப்பட்டுள்ளது.

அறிவியல்

அறிவியல்

இரண்டாம் உலகப் போரின் இறுதியில் பறக்கும் தட்டு வடிவமைப்புக் குறித்த தகவல்களை ஹிட்லர் வழங்கியதாக ஜெர்மனி அறிவியல் பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊடகம்

ஊடகம்

மேரி ஆர்ஸ்டிச் ரில்-கெஸல்ஷாஃப்ட் சமூகத்தின் தலைமை பொறுப்பு வகித்ததோடு பறக்கும் தட்டு வடிவமைப்புக்கு தேவையைன குறிப்புகளைப் பெறும் ஊடகமாகவும் செயல்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.

சமூகம்

சமூகம்

ரில்-கெஸல்ஷாஃப்ட் சமூகத்தில் மேரி ஆர்ஸ்டிச் தவிரப் பல்வேறு இளம் பெண்கள் நீண்ட குதிரைவால் போன்று முடி வளர்த்திருந்தனர். அந்தக் காலத்தில் பெண்கள் அவ்வாறு முடி வளர்ப்பது வினோதமாகப் பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆண்டெனா

ஆண்டெனா

வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்பு கொள்ள நீண்ட குதிரைவால் போன்ற தலைமுடி ஆண்டெனா போன்று பயன்பட்டதாக அவர்கள் நம்பினர். ரில் சமூக உறுப்பினர்கள் ரில் என்றும் அழைக்கப்பட்டனர்.

அல்டிபாரன்

அல்டிபாரன்

பூமியில் இருந்து சுமார் 68 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள அல்டிபாரன் நட்சத்திரத்தில் இருந்து குறிப்புகள் பெறப்பட்டதாகவும் இவை அனைத்தும் ரில் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பு

குறிப்பு

மரியா வேற்றுக்கிரகத்தில் இருந்து பெறப்பட்ட தரவுகளை டெம்ப்ளர் மொழியில் மற்றும் பண்டைய மொழியிலும் குறிப்புகளை வைத்திருந்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உதவி

உதவி

பல்வேறு தொல்லியல் ஆய்வாளர்கள் அடங்கிய துல் சமூகத்துடன் தொடர்பு கொண்டிருந்த பான் பாபிலோனிய குழுவினரிடம் உதவிகளைப் பெற்று வந்ததாகவும் தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

சுமேரிய மொழி

சுமேரிய மொழி

மேரி வைத்திருந்த இரண்டாம் அடுக்கு ஆவணங்கள் சுமேரிய மொழியில் குறிப்புகளைக் கொண்டிருந்ததாகவும், சிக்ருன் அவற்றை மொழிமாற்றம் செய்ய உதவியதாகவும் தெரிய வந்துள்ளது.

வேறுபாடு

வேறுபாடு

பல்வேறு கருத்து வேறுபாடுகளின் படி ஜெர்மனி நாட்டில் உண்மையில் ரில்-கெஸல்ஷாஃப்ட் என்ற சமூகம் அமைக்கப்படவில்லை, இது குறித்த கதைகளை லூயிஸ் பாவெல்ஸ் உருவாக்கினார் எனத் தெரிவிக்கின்றன.

உண்மை

உண்மை

கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பலரும் பறக்கும் தட்டுச் சார்ந்த திட்டங்கள் உண்மை தான் என்பதையே வலியுறுத்துகின்றன.

செய்தி

செய்தி

சில ஆண்டுகளுக்கு முன் ஜெர்மன் அறிவியல் பத்திரிகை ஒன்றில் ஹிட்லர் இரண்டாம் உலகப் போரின் போது பறக்கும் தட்டு உருவாக்க நினைத்தார் எனச் செய்தி வெளியானது.

பறக்கும் தட்டு

பறக்கும் தட்டு

ஹிட்லர் உத்தரவின் பேரில் வடிவமைக்கப்பட்ட பறக்கும் தட்டு உண்மையில் பறந்ததால், சுமார் 15 முன்மாதிரி பறக்கும் தட்டுகள் உருவாக்கப்பட்டதாகவும் ஜெர்மன் பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தேம்ஸ் ஆறு

தேம்ஸ் ஆறு

இந்தப் பத்திரிகையில் ஜெர்மன் ராணுவ சின்னம் கொண்ட பறக்கும் தட்டு 1944 ஆம் ஆண்டுத் தேம்ஸ் ஆற்றுப் பகுதியில் பறந்ததை உறுதி செய்யும் சாட்சிகளோடு செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

ஆபத்து

ஆபத்து

1944 ஆம் ஆண்டு அமெரிக்க ரேடார்களில் ஆபத்தை உணர்த்தும் சிக்னல்கள் பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மாயம்

மாயம்

1945 ஆம் ஆண்டு மேரி ஆர்ஸ்டிச் மர்மமான முறையில் மாயமானார். இதோடு துல் சமூகத்தின் நிறுவனர் தற்கொலை செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாசா

நாசா

போர் நிறைவடைந்த பின் பல்வேறு நாஸி ஆய்வாளர்கள் நாசாவில் இணைந்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியின் வளர்ச்சி பணிகளில் ஈட்டுப்பட்டிருந்தனர்.

Best Mobiles in India

English summary
Woman Behind Hitler's Secret Flying Saucers Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X