Home
Scitech

பிரம்மோஸ்-ஐ பார்த்து பாகிஸ்தான் பதறுவது ஏன்.? திகில் கிளப்பும் 6 காரணங்கள்.!

சூப்பர்சோனிக் வேகத்தில் பாயும் இதன் முதல் நிலை பாய்ச்சலானது இரண்டாம் நிலையில் அவ்வேகத்தில் இருந்து பிரிக்கப்படும் திறனை கொண்டது.

By Muthuraj

பிரம்மோஸ் - இந்தியாவின் ஒரு சூப்பர்சோனிக் க்ரூஸ் மிஸைல் மட்டும் அல்ல, அண்டை நாடுகளான பாகிஸ்தான் உட்பட, உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவின் மீது அச்சம் கொள்ளவும், அமைதி காக்கவும் ஒரு பிரதான காரணமாகவும் திகழ்கிறது. அது ஏன் என்று தெரியுமா.?

பிரம்மோஸ்-ஐ பார்த்து பாகிஸ்தான் பதறுவது ஏன்? திகிலான 6 காரணங்கள்.!

காரணம் 01 :
ஏனெனில் பிரம்மோஸ் ஒரு இரண்டு நிலைகள் (டூப்-ஸ்டேஜ்) கொண்ட, திட எரிபொருள் பூஸ்டர் என்ஜீன் கொண்ட ஒரு ஏவுகணையாகும். சூப்பர்சோனிக் வேகத்தில் பாயும் இதன் முதல் நிலை பாய்ச்சலானது இரண்டாம் நிலையில் அவ்வேகத்தில் இருந்து பிரிக்கப்படும் திறனை கொண்டது.

காரணம் 02 :

காரணம் 02 :

சூப்பர்சோனிக் வேகத்தில் சுமார் 290கிமீ என்கிற தாக்குதல் தூரம் (அல்லது விமான வரம்ப) கொண்டுள்ள பிரம்மோஸ் ஆனது உலகின் எந்தவொரு ஆயுத அமைப்பாலும் இடைமறிக்கமுடியாத ஒரு ஏவுகணை ஆகும். முக்கியமாக இதன் ஸ்டீல்த் டெக்னலாஜி வழிகாட்டி மற்றும் மேம்பட்ட உட்பொதிக்கப்பட்ட மென்பொருளானது ஏவுகணையின் தாக்குதல் சக்தியோடு சேர்த்து, எதிரிகளின் பயத்திற்கும் தீனி போடுகிறது.

காரணம் 03 :

காரணம் 03 :

குறைவான ஒளிச்சிதறல் மற்றும் தாக்குதலுக்கான வேகமான முடிவுகளை எடுக்கும் இந்தியாவின் பிரம்மோஸ் ஆனது உலக நாடுகளின் இதர சப்சோனிக் (ஒலி வேகத்தை விடக் குறைந்த) ஏவுகணைகளுடன் ஒப்பிடும் போது பல மடங்கு சிறப்பானதாகும். அதாவது 3 மடங்கு அதிக வேகம், 1.5 முதல் 3 மடங்கு அதிக விமான வரம்பு (தாக்குதல் எல்லை), 3 முதல் 4 மடங்கு அதிக தேடல் வீச்சு, 9 மடங்கு அதிகமான இயக்க நேரம் ஆகியவைகளை கொண்டுள்ளது.

காரணம் 04 :

காரணம் 04 :

இம்மாதிரியான திறன்கள் எல்லாம் போதாது என்று, உலகின் அதிவேகமான சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணையான பிரம்மோஸ்-ன் பூஸ்டர் (திட எரிபொருள்) இனி இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. "இதன் விளைவாக கோடிக்கணக்கான ரூபாய் மிச்சமாகும்" என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காரணம் 05 :

காரணம் 05 :

எல்லாவற்றிற்கும் மேலாக, நேற்று ஒடிசாவின் பாலசோரில் உள்ள ஒருங்கிணைந்த டெஸ்ட் ரேன்ஞ்சிலிருந்து, ஆயுள் நீட்டிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையின் முதல் சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த சோதனையில் து ஏவுகணையின் நீண்ட ஆயுல் மற்றும் செயல்திறன் உறுதி செய்யப்பட்டது.அதன் விளைவாக, பிரம்ரோஸ்-ன் ஆயுள் ஆனது அடுத்த 10 முதல் 15 ஆண்டுகள் வரையிலாக நீடிக்கப்பட்ட்டுள்ளது.

காரணம் 06:

காரணம் 06:

பிரம்மோஸ் ஏவுகணை அதிகபட்சமாக மார்க் 3 வேகத்தை எட்டும். அதாவது ஒலியின் வேகத்தைவிட மூன்று மடங்கு அதிக வேகத்தில் சீறிப்பாயும். கடந்த ஆண்டு ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு ஆட்சியின் (MTCR) முழு நேர உறுப்பினராக நியமனமானதால், சில தொழில்நுட்ப தடைகளை அகற்றிய பின்னரும் கூட, பிரம்மோஸ் ஏவுகணையின் பாய்ச்சல் ஆனது 400 கிமீ மட்டுமே என்று வரையறுக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. இருந்தாலும் கூட 800 கிமீ பாய்ச்சலை கொண்ட பிரம்மோஸ்-ஐ இந்தியா கூடிய விரைவில் உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
போனஸ் தகவல் :

போனஸ் தகவல் :

பிரம்மோஸ் ஏவுகணை ஆனது, இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலேயான ஒரு கூட்டு முயற்சியாகும். அதாவது இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மற்றும் ரஷ்யாவின் ராக்கெட் வடிவமைப்பு பணியகமான என்பிஓ மஷினோஸ்ட்ரோயேணியா ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட ஏவுகணை ஆகும். இந்திய இராணுவம், இந்திய கடற்படை மற்றும் இந்திய விமானப்படை ஆகியவற்றில் முறையாக சேர்க்கப்பட்டுள்ள (தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ள) பிரம்மோஸ் ஏவுகணையின் வேகம், துல்லியம் மற்றும் ஃபயர்பவருக்கு நிகரான ஒரு ஏவுகணை உலகிலேயே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
With its Stealth Technology and guidence system what a BRAHMOS Supersonic Cruise Missile can do. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X