பி.எஸ்.எல்.வி. சி45: எத்தனை அமெரிக்க செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது என்று தெரியுமா?
சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்திலிருந்து காலை 9.27 மணி அளவில் பி.எஸ்.எல்.வி. சி45 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோ, தனது பி.எஸ்.எல்.வி. சி45 ராக்கெட்டை விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.

சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்திலிருந்து காலை 9.27 மணி அளவில் பி.எஸ்.எல்.வி. சி45 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.

எமிசாட்
எமிசாட் என்ற மின்னணு நுண்ணறிவு செயற்கைக்கோளைப் பூமியின் புவிவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிறுவியுள்ளது. இந்தியாவின், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பாக 436 கிலோ எடை கொண்ட எமிசாட் 749 கிலோ மீட்டர் தொலைவில் பூமியின் புவிவட்டப்பாதையில் நிறுவப்பட்டுள்ளது.

28 செயற்கைக்கோள்
அதனைத் தொடர்ந்து வெளிநாட்டைச் சேர்ந்த 28 செயற்கைக்கோளை பி.எஸ்.எல்.வி. சி45 ராக்கெட் விண்ணில் நிறுவி சாதனைப்படைத்துள்ளது. இந்தியா இதுவரை 297 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி சாதனை படைத்துள்ளது. இன்னும் இரண்டு செயற்கைக்கோள்களை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் ஏவும் என்றும் தெரியவந்துள்ளது.

24 அமெரிக்கா செயற்கைக்கோள்
எமிசாட் செயற்கைக்கோளை விண்ணில் நிறுவியபின், அதனை தொடர்ந்து 24 அமெரிக்கா செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி. சி45 ராக்கெட்டை 504 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோளப்பாதையில் நிறுவியுள்ளது.

29 செயற்கைக்கோல்களை விண்ணில் ஏவி சாதனை
இத்துடன் இரண்டு லிதுவேனியா நாட்டை சேர்ந்த செயற்கைக்கோள்கள் மற்றும் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஒரு செயற்கைக்கோளுடன், சுவிச்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஒரு செயற்கைக்கோள் என மொத்தம் எமிசாட் உடன் 29 செயற்கைக்கோளை ஒரே முயற்சியில் விண்ணில் ஏவி சாதனை படைத்துள்ளது பி.எஸ்.எல்.வி. சி45 ராக்கெட் .

3 வெவ்வேறு சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்
இஸ்ரோவின் முக்கிய மைல்கற்களில் ஒன்று பி.எஸ்.எல்.வி. சி45 ராக்கெட் ஆகும். நமது நாட்டின் சொந்த செயற்கைக்கோள் மட்டுமின்றி பிறநாட்டின் செயற்கைக்கோளையும் விண்ணில் ஏவியுள்ளது. இந்த பி.எஸ்.எல்.வி. சி45 ராக்கெட்டின் தனித்துவம் என்னவென்றால் 3 வெவ்வேறு சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்களை நிறுவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications