லேசரில் இயங்கும் பூச்சி போன்ற வடிவமைப்பை கொண்ட ' ரோபோ ப்ளை'.!

ரோபோட்டுகளை வடிவமைக்க விலங்களுக்கு உள்ள அற்புதமான திறமைகள் ஊக்கமாக அமைகின்றன.

|

இந்த புதிய வகை பறக்கும் ரோபோட், அளவில் சிறியதாகவும் மிகவும் எடைக்குறைவாகவும் இருக்கிறது. இந்த ரோபோவின் எடை பல்குத்தும் குச்சியின் எடையே இருக்கும். மேலும் இது விரல் மீது வைக்கும் அளவே இருக்கும். இதனுடைய சிறிய இறகுகளும் இணைப்பில்லா விமானங்களை போல செயல்படக்கூடியது மற்றும் லேசரை வைத்து செயல்படுபவை.


இதன் வடிவமைப்பு மிகச்சிறிய பறக்கும் ரோபோட்(diminutive airborne bots) வகைகளிலேயேமிகவும் மேம்பட்ட ஒன்றாகும். பொதுவாக இவை அளவில் சிறியதாக இருப்பதால், பறப்பதற்கு தேவையான ஆற்றலை வழங்க மின்வசதி தருவது மிக கடினம். எனவே தொலைதூர பேட்டரியை கொண்டே பறக்கவைக்க முடியும் என்கின்றனர் இந்த புதிய ரோபோட்டை வடிவமைத்த பொறியாளர்கள்.

எடை குறைந்த சர்க்யூட்

எடை குறைந்த சர்க்யூட்

பூச்சிகளை மாதிரியாக கொண்டு இந்த 'ரோபோ ப்ளை' வடிவமைக்கப்பட்டாலும், பெயரளவில் மட்டுமே பூச்சி இருக்கிறது. மற்றபடி இது பறப்பதற்கு உதவ இரண்டு மிகநுண்ணிய, கண்ணுக்கு புலப்படக் கூடிய சிறகுகள் உள்ளன.ஆனால் முந்தைய ரோபோட்களை போல இல்லாமல், ரோபோ ப்ளையை பிடித்து நிறுத்த எந்த ஸ்டிரிங்களும் இல்லை. ஆனால் இதில் லேசர் ஒளியை தேவையான மின்னாற்றலாக மாற்ற மிகவும் மெல்லிசான எடை குறைந்த சர்க்யூட் ஒன்று உள்ளது.

ஆஸ்திரேலியாவில்

ஆஸ்திரேலியாவில்

இந்த ரோபோ ப்ளையை உருவாக்கியவர்கள் தங்களின் கண்டுபிடிப்பை, மே13 ல் ஆஸ்திரேலியாவில் நடந்த சர்வதேச ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேசன் மாநாட்டில் அறிமுகப்படுத்தினர்.ரோபோட்டுகளை வடிவமைக்க விலங்களுக்கு உள்ள அற்புதமான திறமைகள் ஊக்கமாக அமைகின்றன. திமிங்கலத்தை போல நீந்த, ஜெல்லி மீன்களை போல அங்கும் இங்கும் திரிய, குழந்தைகளை போல குதிக்க, மனிதர்களை போல ஓட வடிவமைக்க ஊக்கமளிக்கின்றன. இந்த ரோபோ ப்ளை-க்கு முன்பு கண்டறியப்பட்ட ரோபோ ஃபீ என்ற ரோபோ பூச்சி பறத்தல், தரையிறங்கல், திரிதல் போன்ற தனது திறமைகளை வெளிப்படுத்தியது.

மைக்ரோ கன்ட்ரோலர்

மைக்ரோ கன்ட்ரோலர்

ஆனால் ரோபோ ப்ளை உடைய பவர் சப்ளை, கண்ட்ரோலர் அதற்கு கடிவாளமாக அமைகின்றன. மிகவும் இலகுவாக பறக்கக்கூடிய இந்த ரோபோ ப்ளை, அதனுள்ளே உள்ள போட்டோவால்டாய்க் செல், லேசர் கதிர்களில் இருந்து ஆற்றலை உருவாக்குகின்றன. இது உற்பத்தி செய்யும் 7 வோல்ட் மின்சாரத்தை, அதன் சர்க்யூட் 240வோல்ட் ஆக மாற்றுவதன் மூலம் இதனால் பறக்க முடிகிறது.அதேநேரம் , ரோபோப்ளையில் உள்ள மைக்ரோ கன்ட்ரோலர், அதன் மூளையாக செயல்பட்டு, இறக்கைகளுக்கே மின்துடிப்புகளை அனுப்பி அதை பறக்கவைக்கிறது.

சர்க்யூட்

சர்க்யூட்

இந்த செல் ஆற்றலை சேமித்து வைக்காது என்பதால், சர்க்யூட் எப்போதும் லேசர் வரம்பில் இருந்தால் மட்டுமே ரோபோட் பறப்தற்கான மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும். அதை விட்டு நகர்ந்தால், ரோபோப்ளையின் இயக்கம் நின்றுவிடும். எதிர்காலத்தில் இந்த ரோபோ ப்ளைகளை மேலும் மேம்படுத்த வேண்டும் என்றால், பூச்சிகளின் மற்றொரு திறமையான மோப்பம் பிடிப்பதை இந்த ரோபோக்களுக்கு தரலாம் என்கிறார் வாஷிங்க்டன் பல்கலைகழக போராசிரியர் சாயர் புல்லர்.

வாயு கசிவை கண்டறியும்

வாயு கசிவை கண்டறியும்

" முக்கியமாக மீத்தேன் வாயு கசிவை கண்டறியும் திறனுடைய ரோபோ ப்ளைகளை உருவாக்க வேண்டும்" என்கிறார். இதன் மூலம் கட்டிடங்களில் வாயு குழாய்களில் உள்ள கசிவுகளை பறந்து சென்று கண்டறிவதால், இது போன்ற பிரச்சனைகளை எளிதில் கண்டுபிடித்து தீர்வுகாண முடியும். இதனால் பசுமைஇல்ல வாயுக்கள் வெளியேற்றத்தை தடுக்கலாம் என கூறுகிறார்.

Best Mobiles in India

English summary
Wireless 'RoboFly' Looks Like an Insect, Gets Its Power from Lasers : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X