சொதப்பியது திட்டம்.? பூமியோடு மோதப்போகும் டெஸ்லா கார்.? எப்போது.?!

விண்வெளிக்குள் செலுத்தப்பட்ட உடனேயே, டெஸ்லா கார் ஆனது அதன் பயணப்பாதையில் சில புள்ளிகள் அளவிலான மாற்றத்தை கொண்டுள்ளதாகவும், மாறாக அது சூரியனை சுற்றும் உடுகொள் சுற்றுப்பாதையில் நுழைவதாகவும் ட்வீட்.!

|

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ஆன எலான் மஸ்க் மூலம் விண்வெளிக்கு அனுப்பிவைக்கப்பட்ட ஆடம்பர டெஸ்லா ஸ்போர்ட்ஸ் கார் ஆனது, ஒரு வாரத்திற்கு முன்னர் சூரிய சுற்றுப்பாதையை சென்றடைந்தது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் - முதல் மற்றும் வெற்றிகரமான - உலகின் மிக சக்திவாய்ந்த ராக்கெட்டின் வழியாக அனுப்பி வைக்கப்பட்ட சிவப்பு நிற டெஸ்லா கார் ஆனது சூரியனை சுற்றியதொரு நீள்வட்ட சுற்றுப்பாதையில் இருப்பதாகவும், அந்த சுற்றுப்பாதையானது செவ்வாய் கிரகத்துடன் நெருக்கமாக கடந்து செல்லும் பல வாய்ப்புகளை டெஸ்லா காருக்கு வழங்குமென்றும் கூறப்படுகிறது.

பூமியோடு மோதல் நிகழ்த்தும்.?!

பூமியோடு மோதல் நிகழ்த்தும்.?!

ஒருமுறையல்ல, விண்ணில் மிதக்கும் டெஸ்லா காரின் சில மில்லியன் கணக்கான ஆண்டுகால ஆயுட்காலம் வரையிலாக பலமுறை இது நடக்கும் என்று எலான் மஸ்க் குழு நம்பிக்கை தெரிவிக்க மறுகையில் உள்ள சில கனடியன் வானியலாளர்களின் கருத்துப்படி, டெஸ்லா கார் ஆனது பூமிக்கு திரும்புமென்றும், அது பூமியோடு மோதல் நிகழ்த்துமென்றும் கூறியுள்ளனர்.

எலான் மஸ்க் சொல்வது என்ன.?

எலான் மஸ்க் சொல்வது என்ன.?

விண்வெளிக்குள் செலுத்தப்பட்ட உடனேயே, டெஸ்லா கார் ஆனது அதன் பயணப்பாதையில் சில புள்ளிகள் அளவிலான மாற்றத்தை கொண்டுள்ளதாகவும், மாறாக அது சூரியனை சுற்றும் உடுகொள் சுற்றுப்பாதையில் நுழைவதாகவும் ட்வீட் செய்தார்.

பிற வானியலாளர்களின் சொல்வது என்ன.?

பிற வானியலாளர்களின் சொல்வது என்ன.?

எனினும், சில வானியலாளர்களின் கருத்துப்படி எலான் மஸ்க்கின் அசல் திட்டத்துடன் ஒப்பிடும்போது, ​டெஸ்லா ​கார் வேறு பாதையில் செல்கிறது, இருப்பினும்,அது இன்னும் செவ்வாய் பயணத்திற்கு அருகில் தான் உள்ளது.

ஆய்வு செய்யப்பட்ட சாத்திய கூறுகளின் முடிவு என்ன.?

ஆய்வு செய்யப்பட்ட சாத்திய கூறுகளின் முடிவு என்ன.?

இதுபோன்ற கருதுகோள்களை மையமாக கொண்டு டெஸ்லா காரின் சுற்றுப்பாதை பாதையை கணக்கிட்டு, பல வகையான ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் வெளியான ஒரு படிப்பினை அறிக்கையில் - விண்ணில் உலாவும் டெஸ்லா கார் ஆனது ஒருநாள் பூமியோடு மோதல் நிகழ்த்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

எப்போது மோதும்.?

எப்போது மோதும்.?

உடன் அந்த மோதலானது உடனடியாக நடக்காது என்றும் வெளியாக அறிக்கை ஆறுதல் அளிக்கிறது. வருகிற 2091-ஆம் ஆண்டு தான், டெஸ்லா கார் முதல் முறையாக பூமியை கடந்து செல்லுமென்று கணக்கிடப்பட்டுள்ளது. அந்த நிகழ்வின் போது, பூமிக்கும் டெஸ்லா காருக்கும் இடையே உள்ள தூரமானது ஒரு லூனார் தொலைவு (அதாவது சுமார் 384,400 கிமீ) இருக்குமென்றும் கணிக்கப்பட்டுள்ளது.

பூமியின் ஈர்ப்பு விசையால் பாதை மாறுமா.?

பூமியின் ஈர்ப்பு விசையால் பாதை மாறுமா.?

விண்வெளியில் மிதக்கும் கார் ஆனது ஒரு சிறுகோள் போலவே இருப்பதால், 2091-ஆம் ஆண்டு அது பூமியை கடந்து செல்லும் போது, அதன் சுற்றுவட்ட பாதையானது பூமியின் ஈர்ப்பு விசையால் மாற்றியமைக்கலாம். இதன் விளைவாக அடுத்த மில்லிய கணக்கான ஆண்டுகளில் டெஸ்லா கார் ஆனது பூமியோடு மோதல் நிகழ்த்தும்.

வீனஸ் கிரகத்துடன் மோதுமா.?

வீனஸ் கிரகத்துடன் மோதுமா.?

இருப்பினும், வானியற்பியல் வல்லுநர்களின்படி, இந்த மோதல் சம்பவம் நடக்க 6 சதவீத வாய்ப்புகள் மட்டுமே இருப்பதாகவும் கூறியுள்ளனர். இதே மோதல் வீனஸ் கிரகத்துடன் மொத 2.5 சதவிகித வாய்ப்புள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதாவது பூமியோடு மோதல் நிகழ்த்தும் வாய்ப்பை விட குறைவாகவே கொண்டுள்ளதென்று அர்த்தம்.

நம்மில் பலர் அறியாத ரகசியங்கள்.!

நம்மில் பலர் அறியாத ரகசியங்கள்.!

மேலும் ஆராய்ச்சியாளர்களின் கணிப்புப்படி, எலான் மஸ்க் செலுத்திய டெஸ்லா கார் ஆனது சுமார் 20 மில்லியன் ஆண்டுகளுக்கு விண்வெளிக்குள் அதன் பயணத்தை நீடிக்கும் என்றும் கணித்துள்ளனர். மேலும் உலகின் மிகப்பெரிய ராக்கெட் ஆன ஃபால்கோன் ஹெவி மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட டெஸ்லா ரோட்ஸ்ர் ஆனது நம்மில் பலர் அறியாத ரகசியங்களையும் கொண்டுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

டம்மிக்கு

டம்மிக்கு "ஸ்டார்மென்" என்று பெயர்

முதலில் விண்ணிற்குள் செலுத்தபட்ட டெஸ்லா காரின் டிரைவர் செட்டில் அமர்ந்திருக்கும் 'டம்மி' விண்வெளி வீரரை பற்றி உங்களுக்கு தெரியாத ஒரு விடயத்தை காண்போம். அந்த டம்மிக்கு "ஸ்டார்மென்" என்று பெயர். இந்த பெயரானது டேவிட் போவியின் பாடல் ஒன்றிலிருந்து பெறப்பட்ட வார்த்தையாகும்.

Nuclear Weapons : எந்தெந்த நாடுகளிடம் எத்தனை அணுவாயுதங்கள் உள்ளன.? இந்தியாவின் நிலை என்ன.?
பெரிய காருக்குள் ஒரு குட்டி கார் + குட்டி டிரைவர்.!

பெரிய காருக்குள் ஒரு குட்டி கார் + குட்டி டிரைவர்.!

கூடுதலாக, காரின் டாஷ்போர்டில் டெஸ்லா காரை சித்தரிக்கும் ஒரு சிறிய சிவப்பு மாடல் கார் பொருத்தப்பட்டுள்ளது. இன்னும் சுவாரசியம் என்னவெனில் அந்த குட்டி காருக்குள் ஒரு குட்டி டம்மி கார் டிரைவர் இருப்பார். அதாவது ஒரு மெட்டா ஜோக் போல.!

பயப்பட வேண்டாம்.!

பயப்பட வேண்டாம்.!

நீங்கள் இன்னும் கழுகுக் கண்கள் கொண்டு பார்த்தால், காரின் டாஷ்போர்ட்டில் ஒரு சுவரொட்டையும் மஸ்க் இணைத்துள்ளதை காண்பீர்கள். அதுவொரு எளிமையான வாசகமகும் - "டோன்ட் பேனிக்" (Don't Panic) அதாவது பயப்பட வேண்டாம் என்று பொருள். "டோன்ட் பேனிக்" (Don't Panic) என்கிற வாசகம் புகழ்பெற்ற எழுத்தாளர் டக்ளஸ் ஆடம்ஸ்-ன் நகைச்சுவை அறிவியல் புனைகதையான 'தி ஹட்ச்ஹிக்கர்ஸ் கைட் டூ தி கேலக்ஸி'யின் பிரதான கதாபாத்திரம் எப்போதுமே பயன்படுத்தும் ஒரு வாசகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த மர்ம பொருள் என்ன.?

அந்த மர்ம பொருள் என்ன.?

டெஸ்லா காருடன் இணைத்து விண்ணிற்கு அனுப்பட்ட மர்ம பொருள் ஒன்றும் உள்ளது. அது என்னவென்று தெரியுமா.?அது ஒரு டிஜிட்டல் "புத்தகமாகும்". ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் அதன் காரவின் க்ளோவ் கம்பார்ட்மெண்டில் சிறிய ஆப்டிகல் டிஸ்க்கையும் வைத்திருந்துள்ளது. அந்த டிஸ்க்குகள் ஐசக் அசிமோவின் 'ஃபவுண்டேஷன்' தொடரின் முழுமையான பகுதியும் என்கோட்ட் செய்யப்பட்டுள்ளது.

கற்பனையான கலைக்களஞ்சியம்

கற்பனையான கலைக்களஞ்சியம்

20 ஆம் நூற்றாண்டை சேர்ந்த எழுத்தாளர் மற்றும் பேராசிரியர் ஆன அசிமோவ், அவரது விஞ்ஞான புனைகதை படைப்புகள், குறிப்பாக ஒரு விண்மீன்-பரவிய நாகரிகம் மூலம் திரட்டப்பட்ட அனைத்து அறிவையும் கொண்ட ஒரு கற்பனையான கலைக்களஞ்சியமான 'என்சைக்ளோபீடியா கேலக்டிகா' மிகவும் போற்றப்படுமொரு படைப்பாகும்.

அதுவொரு

அதுவொரு "ஆர்க்" ஆகும்.!

உடனே அதுவொரு ஆப்டிகல் டிஸ்க் மட்டும்தான் என்று நினைத்துவிட வேண்டாம். அதுவொரு "ஆர்க்" ஆகும். அதாவது குவார்ட்ஸ் சிலிக்கா கண்ணாடியில் பெண்டெக்டிகோட் லேசர் கொண்டு 20 நானோமீட்டர் அளவில் எழுதப்பட்டிருக்கும் ஒரு ஆர்க் ஆகும்.

இது ஏலியன்களுக்கான தூதா.?

இது ஏலியன்களுக்கான தூதா.?

தொழில்நுட்ப வழியில் கூறவேண்டுமெனில் இது 360 டிபி அளவிலான தத்துவார்த்த திறனைக் கொண்டுள்ளது. மேலும் 14 பில்லியனுக்கும் அதிகமான ஆண்டுகள் வரை இதனுள் இருக்கும் தரவு சிதைக்கப்படாமல் பாதுகாக்கப்படும். இது ஏலியன்களுக்கான தூதா.? என்று கேட்டால், அதற்கு பதில் கிடையாது.

Best Mobiles in India

English summary
Will Elon Musk's sports car collide with Earth? Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X