Home
Scitech

இந்தியாவில் நிலத்தடிநீரில் பரவலாக காணப்படும் யுரேனியம் : அதிர்ச்சி ரிப்போர்ட்.!

தற்கு இயற்கையே முக்கிய காரணியாக இருந்த போதிலும், நிலத்தடி நீர்மட்டத்தில் சரிவு மற்றும் நைட்ரேட் மாசுபாடு போன்ற மனிதர்களால் ஏற்படுத்தக்கூடிய காரணிகளால் யுரேனியம் அதிகளவில் காணப்படுகிறது.

By Vivek Sivanandam

நியூ டியூக் பல்கலைகழகம் நடத்திய ஆய்வில் இந்தியாவின் 16 மாநிலங்களில் உள்ள நீர்நிலைகளில் கிடைக்கும் நிலத்தடி நீரில் யுரேனியம் அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு இயற்கையே முக்கிய காரணியாக இருந்த போதிலும், நிலத்தடி நீர்மட்டத்தில் சரிவு மற்றும் நைட்ரேட் மாசுபாடு போன்ற மனிதர்களால் ஏற்படுத்தக்கூடிய காரணிகளால் யுரேனியம் அதிகளவில் காணப்படுகிறது.

குடிநீரில் யுரேனியம் இருப்பதால் கிட்னி சார்ந்த பிரச்சனைகள் அதிக அளவில் ஏற்படுவதாக ஏராளமான ஆய்வுகள் நிரூபித்துள்ளன. "ராஜஸ்தான் முழுவதும் உள்ள மூன்றில் ஒரு பங்கு குடிநீர் கிணறுகளை நாங்கள் ஆய்வு செய்த போது, அதிலுள்ள யுரேனியம் அளவு உலக சுகாதார நிறுவனம் மற்றும் அமெரிக்க சுற்றுசூழல் பாதுகாப்பு ஆணையம் கூறியுள்ள பாதுகாப்பான குடிநீர் தரத்தை விட அதிகமாக இருந்தது"என்கிறார் டியூக் நிகோலஸ் பல்கலைகழக நீர் தரம் மற்றும் புவியியல் துறை பேராசிரியர் அவனெர் வெங்கோஸ்.

யுரேனியம்

யுரேனியம்

"ஏற்கனவே நடத்தப்பட்ட நீர் தர ஆய்வுகளை ஆராய்ந்த போது, வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 26மாவட்டங்களிலும், தென் மற்றும் தென்கிழக்கு மாநிலங்களில் உள்ள 9 மாவட்டங்களிலும், யுரேனியம் அளவு குடிநீரில் அதிகமாக உள்ளதை கண்டறிந்தோம்" என மேலும் தொடர்கிறார்.

புதிய ஆய்வு

புதிய ஆய்வு

இந்த புதிய ஆய்வு முடிவுகள் தான்,இந்தியாவில் நிலத்தடிநீரில் யுரேனியம் பரவலாக உள்ளதை வெளிப்படுத்தியுள்ளது. " இந்த ஆய்வு முடிவுகள் இந்தியாவில் தற்போது உள்ள தண்ணீர் தர கண்காணிப்பு அமைப்பை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் மற்றும் அதிக யுரேனியம் உள்ள பகுதிகளில் வாழும் மக்களின் உடல் நலத்தையும் பரிசோதிக்க வேண்டும் என்பதை ஆணித்தரமாக உணர்த்துகிறது "என்கிறார் வென்கோஸ். " மேலும் பயனுள்ள மாற்று தொழில்நுட்பங்களை உருவாக்குதல் மற்றும் தடுப்பு மேலாண்மை நடைமுறைகளையும் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தவேண்டும்"

சுற்றுசூழல் பாதுகாப்பு

சுற்றுசூழல் பாதுகாப்பு

உலக சுகாதார நிறுவனத்தின் படி, ஒரு லிட்டர் குடிநீரில் 30மைக்ரோகிராம் யுரேனியம் இருந்தால் அது பாதுகாப்பான குடிநீர்.இதையே தான் அமெரிக்க சுற்றுசூழல் பாதுகாப்பு அமைப்பின் தரவிதிகளும் கூறுகின்றன. ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக, இந்திய குடிநீர் தர ஆணையம் வைத்துள்ள குடிநீரில் கண்காணிக்கப்பட வேண்டிய சேர்மங்களின் பட்டியலில் யுரேனியம் இல்லை.

 ஆக்ஸிஜன்

ஆக்ஸிஜன்

"இந்த ஆய்வின் படி, நிலத்தடி நீரில் அதிக அளவு யுரேனியம் உள்ளது பல காரணிகளை பொறுத்து உள்ளதாகவே காட்டுகிறது" என்கிறார் இந்த ஆய்வை தலைமையேற்று நடத்திய ராசெல் கோட்டி. தண்ணீர் பாறைகளில் உள்ள யுரேனியத்தின் அளவும் மிகவும் முக்கியமான காரணியாகும். தண்ணீர் பாறைகள் ஒன்றொடு ஒன்று உரசும் போது யுரேனியம் வெளியாகும். தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜன் மற்றும் பைகார்போனேட் போன்ற வேதிப்பொருட்களால் ஏற்படும் வேதிமாற்றத்தால் யுரேனியம் மேலும் அதிகரிக்கிறது.

விவசாயத்திற்காக அதிக அளவு நிலத்தடி நீரை இறைத்தல் போன்ற மனித செயல்பாடுகளாலும் யுரேனியத்தின் அளவு நிலத்தடி நீரில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார். இந்தியாவின் பெரும்பான்மையான நீர் ஆதாரங்கள் , இமயலையில் இருந்து வரும் நீரை கொண்டிருப்பதால், அங்குள்ள யுரேனியம் அதிகமுள்ள பாறைகளில் இருந்தும் யுரேனியம் நீரில் கலக்கிறது.

குடிநீர்

குடிநீர்

"இந்த ஆய்வு முடிவில் கவனிக்க வேண்டிய ஒன்றான , மனித நடவடிக்கைகள் இந்த நிலைமையை மேலும் தீவிரமாக்குகின்றன என்பதில் கவனம் செலுத்தி, இதை கட்டுபடுத்தலாம்" என்கிறார் வெங்கோஸ்.

" யுரேனியத்தால் ஏற்படும் கிட்னி பாதிப்புகளை அடிப்படையாக கொண்டு இந்திய குடிநீர் தர ஆணையம் வைத்துள்ள குடிநீரில் கண்காணிக்கப்பட வேண்டிய சேர்மங்களின் பட்டியலில் யுரேனியத்தை இணைக்க வேண்டும். அதிக பாதிப்புள்ள பகுதிகளை கண்டறிய கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்தியும், புதிய வழிமுறைகளின் மூலம் யுரேனியம் அளவை குறைக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்தும் பல கோடி இந்திய மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை உறுதிசெய்ய வேண்டும்" என்றும் கூறுகிறார் வென்கோஸ்.

Best Mobiles in India

English summary
WIDESPREAD URANIUM CONTAMINATION FOUND IN INDIA'S GROUNDWATER : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X