ஏலியன் விண்கலம் விசயத்தில் திடீர் ஆர்வம் காட்டும் பென்டகன்!

புதிய விதிகளின் கீழ் அவர்கள் பார்க்கும் மர்ம பறக்கும் பொருட்களை கண்காணித்து தெரிவிக்க ஊக்குவிக்கப்படவுள்ளனர்.

|

அமெரிக்க கடற்படை விமானிகள் மற்றும் மாலுமிகள், அடையாளம் காணப்படாத மர்ம பறக்கும் பொருள்களைப் பற்றி இனிமேல் புகாரளிக்கும் போது பைத்தியகாரத்தனமானது என யாரும் கூறமுடியாது. புதிய விதிகளின் கீழ் அவர்கள் பார்க்கும் மர்ம பறக்கும் பொருட்களை கண்காணித்து தெரிவிக்க ஊக்குவிக்கப்படவுள்ளனர்.

ஏலியன் விண்கலம் விசயத்தில் திடீர் ஆர்வம் காட்டும் பென்டகன்!

ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு தான், பென்டகன் மர்ம பறக்கும் பொருட்கள் புலப்படுவதை விசாரணை செய்த மற்றொரு அதிகாரப்பூர்வ அமைப்பை மூடியதாக கூறப்படுகிறது. என்ன மாற்றம் நடந்தது? அமெரிக்க இராணுவம் ஏலியன் விண்கலன்கள் பூமிக்கு வருகின்றன என்ற கூற்றை இறுதியில் ஒப்புக்கொண்டுள்ளதா?அந்த கேள்விக்கான பதில் நிச்சயமாக இல்லை என்பதாகும்.

அசுரன்

அசுரன்

மனிதர்கள் காலங்காலமாக இயற்கையான நிகழ்வுகளை தவறாக புரிந்துகொள்கின்றனர். உதாரணமாக, கடற்பசுக்களை கடற்கன்னிகள் என நினைத்துக்கொள்வது,ஸ்காட்லாந்து கடல் கழிமுகத்தில் உள்ள மிதக்கும் கட்டைகளை அசுரன் என புரிந்துகொள்வது போன்றவற்றை கூறலாம்.

 மர்ம பறக்கும் பொருட்களை நன்றாக புரிந்து கொள்ள முனைகிறது

மர்ம பறக்கும் பொருட்களை நன்றாக புரிந்து கொள்ள முனைகிறது

மிக சமீபத்திய மற்றும் பொருத்தமான எடுத்துக்காட்டு, ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் ஏவுதலால் வானில் ஏற்பட்ட வித்தியாசமான ஒளிரும் கட்டமைப்பு ஆகும். இந்த வகையான சம்பவங்களில் மக்கள் முழுமையற்ற தகவலை தெரிந்துகொள்வது அல்லது பார்ப்பதை தவறாக புரிந்து கொள்வது போன்றவற்றால் தவறான விளக்கங்கள் ஏற்படுகின்றன. பென்டகன் இந்த வகையான குழப்பத்தை தவிர்க்க விரும்புகிறது என்பதால், இப்போது அடையாளம் காண முடியாத மர்ம பறக்கும் பொருட்களை நன்றாக புரிந்து கொள்ள முனைகிறது. இராணுவப் பணியின் போது ​​அமைதியான சமயத்திலோ அல்லது யுத்தத்திலோ, ஒரு விமானி அல்லது சிப்பாய் ஒரு பொருளை அடையாளம் காண முடியாவிட்டால் அது அவர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனை. அது நடுநிலையானாதா, நட்பு அல்லது அச்சுறுத்தலாக இருக்குமா என்பது தெரியாமல் அவர்கள் எப்படி எதிர்வினையாற்றுவார்கள்?

8,000 க்கும் மேலாக உயர்ந்துள்ளன

8,000 க்கும் மேலாக உயர்ந்துள்ளன

அதிர்ஷ்டவசமாக இராணுவம் வானில் நிகழும் விசித்திரமான விஷயங்களை கண்டறிய மேம்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்த முடியும். உலகளாவிய அளவில், மர்ம பறக்கும் பொருட்கள் காணப்படவது ஒரு ஆண்டில் 8,000 க்கும் மேலாக உயர்ந்துள்ளன. இதில் எத்தனை இராணுவ அனுபவங்கள் என தெரியவில்லை. இவற்றில் பெருமாலானவை தீர்க்கமுடியாத மர்மங்களாகவே உள்ளன.

நிகழ்நேரத்தில் அறிந்துகொள்வது சாத்தியமாகும்

நிகழ்நேரத்தில் அறிந்துகொள்வது சாத்தியமாகும்

மர்ம பறக்கும் பொருட்கள் தென்படுவது இராணுவம் அதன் அடையாள செயல்முறைகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகின்றது. குறைந்தபட்சம் எதிர்காலத்தில் தானியங்கு முறைகள் செய்யப்பட்டு இதுபோன்ற சம்பவம் வெளிப்படும்போது நிகழ்நேரத்தில் அறிந்துகொள்வது சாத்தியமாகும்.

போர்க்கப்பல்கள்

போர்க்கப்பல்கள்

இராணுவ வாகனங்கள் , போர்க்கப்பல்கள், விமானங்கள் மற்றும் செயற்கைக்கோள்கள் போன்றவற்றில் சென்சார்கள் பொருத்தப்படவுள்ளன. இது ரேடியோ ரிசீவர், வீடியோ காமிராக்கள் மற்றும் அகச்சிவப்பு இமேஜிங் போன்ற செயலற்ற சாதனங்களில் மட்டுமில்லாமல், ரேடார், சொனார் மற்றும் லிடர் போன்றவற்றிலும் பொருத்தப்படவுள்ளன. இவற்றிற்கெல்லாம் மேலாக வானில் இருந்து செயற்கைகோள்களும் கண்காணிக்கின்றன.

வெப்பநிலை

வெப்பநிலை

மர்ம பறக்கும் பொருட்களின் வரம்பு, வேகம், தலைப்பு, வடிவம், அளவு மற்றும் வெப்பநிலை உள்ளிட்ட தகவல்களை சென்சார்கள்வழங்க முடியும். பல சென்சார்கள் மற்றும் அதிகமான தரவுகளுடன் அவற்றை ஒன்றாக்கி, பயனுள்ளதாக ஏதாவது தகவல்களை பெறமுடியும்.

 செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு

புதிய தொழில்நுட்பங்களனாக செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆட்டோமேசன் போன்றவற்றை பயன்படுத்தி நிகழ்நேர தகவல்களை ஆராய்ந்து மர்மபறக்கும் பொருட்களை பற்றி எளிதில் அறிந்துகொள்ளமுடியும்.

Best Mobiles in India

English summary
Why-Pentagon-interested-UFOs-Former-Air-Force-security-advisor-explains: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X