நாசாவின் சமீபத்திய சந்திர புகைப்படங்கள் போலியாக தோன்றுவது ஏன்..?!

|

போலியான ஒன்றை உண்மையென நம்பி விடுவதை விட, சில தருணங்களில் நிஜம்தனை போலியான ஒன்று என சந்தேகம் கொள்வது தான் மிகப்பெரிய கொடுமை. அப்படியாக சமீபத்தில் அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசா, சந்திரன் பூமியின் சூரிய ஒளி வீசும் பக்கம் கடந்து போன போது வீடியோ பத்தி நிகழ்த்தியது..!

முழுக்க முழுக்க உண்மையான நிகழ்வான இது போலியானது போல் தோன்ற என்ன காரணம் என்பது பற்றிய தொகுப்பே இது..!

கூட்டு முயற்சி :

கூட்டு முயற்சி :

இந்த அற்புதமான விண்வெளி நிகழ்வை நாசாவின் டீப் ஸ்பேஸ் க்ளைமேட் ஆய்வகம் (Deep Space Climate Observatory - DSCOVR) மற்றும் அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (National Oceanic and Atmospheric Administration - NOAA) ஆகிய இரண்டின் கூட்டு முயற்சியில் கைப்பற்றப்பட்ட படங்களின் மூலம் உருவாக்கம் பெற்றுள்ளது.

ஜூலை 5 :

ஜூலை 5 :

சூரிய ஒளி வீசும் பக்கமாக பூமியை சந்திரன் கடக்கும் இந்த நிகழ்வானது கடந்த ஜூலை 5-ஆம் தேதி நிகழ்ந்தது என்பதும், இந்த நிகழ்வு இரண்டாம் முறையாக நடக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

போலி வீடியோ :

போலி வீடியோ :

இந்த நிகழ்வின் வீடியோ பதிவானது பெரும்பாலான போலி வீடியோவைப் போன்றே போலியானது அதுவும் சூப்பர் ஃபேக் (Super Fake) என்றும் தகவல்கள் வெளியாகின, அதற்கான காரணங்களும் சேர்ந்தே வெளியாகியுள்ளன.

மேகங்கள் :

மேகங்கள் :

போலியானது என்பதற்கு பொதுவாக எழுந்த கேள்வி இதுதான் : சுமார் நான்கு மணி நேரம் படிப்படியாக பதிவுசெய்யப்பட்ட இந்த வீடியோவில் ஏன் மேகங்கள் கடந்து செல்வது போல் பதிவாகவில்லை..?

 விளக்கம் :

விளக்கம் :

அதற்கு "அதே நேரத்தில் நிகழும் சிறிய அளவிலான படங்களை பார்த்தால் மேகங்களின் இயக்கத்தில் சிறிய மாற்றங்களை தான் பார்க்க முடியும் உடன் இந்த படங்களை எடுத்த கேமிராவின் பிக்சல்கள் வெறும் 20 கிலோமீட்டர் தூரம்வரை தான் நீளும்" என்ற விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கேள்வி :

கேள்வி :

பின்பு பூமியின் வெளித்தோற்றத்தில் அதன் சுழற்சியானது மிகவும் குறைவாக உள்ளது போல் தெரிகிறது என்ற கேள்வியும் எழுந்தது.

பூமி சுழற்சி :

பூமி சுழற்சி :

அதாவது, பூமியை முழுதாய் சுற்றி முடிக்க நிலவிற்கு 1 மாதம் தேவை பூமிக்கு முழு சுழற்சி நிகழ்த்த 24 மணி நேரம் தேவை. அப்படியிருக்க சந்திர போக்குவரத்து வேகமாக நிகழ மறுபக்கம் பூமி மிக சிறிய அளவிலேயே சுழல்வது போல் தோன்றியது ஆக இதுவொரு போலி என்று சந்தேகிக்கப்பட்டது.

விளக்கம் :

விளக்கம் :

ஆனால் இதுவெறும் காட்சி பிரமை தான். ஏனெனில் இதை பதிவு செய்த விண்வெளி ஓடமானது பூமியைக் காட்டிலும் நிலவின் அருகாமையில் இருந்ததால் நிலவு வேகமாகவும் பூமியின் இயக்கம் மெதுவாகவும் தெரிகிறது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கேள்வி :

கேள்வி :

புவி மற்றும் சந்திரன் படங்களில் நட்சத்திரங்கள் ஏன் பதிவாகவில்லை என்ற இன்னொரு பொதுவான கேள்வியும் எழுந்தது.

விளக்கம் :

விளக்கம் :

நட்சத்திரங்கள் பிரகாசமானவைகள் தான் ஆனால் கேமரா பார்வையில் இருந்து மில்லியன் மைல்கள் தொலைவில் இருக்கும் நட்சத்திரங்களை பதிவாக்க போதுமான வெளிப்பாடு நேரம் (exposure time) கிடையாது ஆக அவைகளை பதிவு செய்ய இயலாது என்ற விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

அப்போலோ 20 ரகசியம் அம்பலம் : நிலவில் கண்டறியப்பட்ட ஏலியன் பெண்.!!


பூமிக்கடியில் 700 கி.மீ ஆழத்தில் 2 பாரிய கட்டமைப்புகள்..!? எப்படி ?

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

புகைப்படங்கள் : நாசா

Best Mobiles in India

English summary
Why NASA’s new photos of the moon look super fake. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X