நீர்மூழ்கி கப்பலை அழிக்கும் எம்ஹெச் 60 ரோமியோ: பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் அடுத்த ஆப்பு.!

தற்போது, நீர்மூழ்கி கப்பலை அழிக்கும் எம்ஹெச் 60 ரோமியோ கப்பலை இந்தியா வாங்க இருக்கின்றது. இது பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் அடுத்த ஆப்பாக அமைந்துள்ளது.

|

இந்தியா அப்துல் கலாம் கனவு கண்டது போல், உலக வல்லரசு பட்டியலில் வரும் 2020ம் ஆண்டுக்குள் இடம் பெற்று விடும் போல் இருக்கின்றது. இந்நிலையில் இந்தியாவின் அணு ஆயுத வளர்ச்சியும் ஒரு புறம் வளர்ந்து கொண்டு போகின்றது.

உள்நாட்டிலும் அணு ஆயுதங்களைத் தயாரித்து வருகின்றது இந்தியா. அக்னி ஏவுகணைகள் சோதனை முதல் தற்போது அரிஹந்த் நீர்மூழ்கி கப்பல் வரை அனைத்துச் சோதனையிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் அதை ராணுவத்திலும் சேர்த்து பெருமையைக் கொண்டுள்ளது.

இந்திய எம்ஹெச் 60 ரோமியோவால் பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் ஆப்பு.!

இந்நிலையில் ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளையும் ரூ.36000 கோடிக்கு வாங்கி ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் பாகிஸ்தானும், சீனாவும் பதறிப்போயியுள்ளன.

தற்போது, நீர்மூழ்கி கப்பலை அழிக்கும் எம்ஹெச் 60 ரோமியோ கப்பலை இந்தியா வாங்க இருக்கின்றது. இது பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் அடுத்த ஆப்பாக அமைந்துள்ளது.

 நாடுகளின் ராணுவ பட்ஜெட் :

நாடுகளின் ராணுவ பட்ஜெட் :

சர்வதேச தளவாட படிப்புகளுக்கான இன்ஸ்டிடியூட்' என்ற அமைப்பு, உலகளவில் ராணுவ பட்ஜெட் குறித்து ஆண்டுதோறும் ஆய்வு நடத்தி வருகிறது. அந்த அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது:

இந்தியாவுக்கு 5 வது இடம்:

இந்தியாவுக்கு 5 வது இடம்:

கடந்த, 2017 ம் ஆண்டில் உலகளவில் ஒவ்வொரு நாடும் ராணுவ பட்ஜெட்டிற்கு ஒதுக்கிய தொகை அடிப்படையில் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. அந்த நாட்டின் ராணுவ பட்ஜெட் 37.77 லட்சம் கோடி ரூபாய். இந்த விஷயத்தில் முதல் ஐந்து நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் முறையாக இடம் பிடித்துள்ளது. இதுநாள் வரை ஐந்தாவது இடத்தில் இருந்த பிரிட்டனை, இந்தியா பின்னுக்கு தள்ளி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

சீனாவின் ராணுவ பட்ஜெட்:

சீனாவின் ராணுவ பட்ஜெட்:

இந்தியாவின் ராணுவ பட்ஜெட் 3.30 லட்சம் கோடி ரூபாய். பிரிட்டன் ராணுவத்திற்காக, 3.19 லட்சம் கோடி ரூபாயை மட்டும் ஒதுக்கியுள்ளது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் சீனா உள்ளது. அந்த நாட்டின் ராணுவ பட்ஜெட் 9.48 லட்சம் கோடி ரூபாய். இது, இந்தியாவை விட மூன்று மடங்கு அதிகம். இந்த பட்டியலில் 4.83 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கி சவுதி அரேபியா மூன்றாவது இடத்திலும், 3.85 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கி ரஷ்யா நான்காவது இடத்திலும் உள்ளன.

பிரமோஸ் வெற்றி:

பிரமோஸ் வெற்றி:

இந்நிலையில் இந்தியா- ரஷ்யா கூட்டால் பிரமோஸ் ஏவுகணை உருவாக்கப்பட்டது. இது இரண்டு நிலையிகளில் கண்டம் விட்டு கண்டம் தாக்கும் தன்மை கொண்டது. இதை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்து ராணுவத்திலும் சேர்த்துள்ளது. அவ்வபோது இதுகுறித்து கப்பலில் இருந்தும் சோதனை செய்தது வருகின்றது.

அக்னி ஏவுகணை:

அக்னி ஏவுகணை:

சுமார் 12 டன் எடையுள்ள அக்னி-1 ஏவுகணை குறிப்பிட்ட நேரத்தில் 700 கிலோமீட்டர் தூரம் வரை சென்று இலக்கைத் துல்லியமாக தாக்கக் கூடியது. சுமார் 1000 கிலோ எடையை தூக்கிச் செல்லக்கூடிய திறனுடையது.

5 மீட்டர் நீளமுள்ள அக்னி-1 முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது. அக்னி-1 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

எஸ்-400 ஏவுகணை:

எஸ்-400 ஏவுகணை:

ரூ. 36 ஆயிரம் கோடியில் எஸ்-400 ஏவுகணைகள் 5 எண்ணிக்கையில் இந்தியா வாங்குகின்றது. இது எதிரி நாட்டு ஏவுகணைகள், டிரோன், குட்டி விமானங்களை நடுவானிலே தடுத்து அழிக்கும் வல்லமை கொண்டது.

இது 4 வகையில் அழிக்கும் வல்லமை கொண்டுள்ளது. மேலும், ஓரே நேரத்தில் 90 இடங்களில் தாக்குதல் நடத்தும் வல்லமையயை எஸ்-400 ஏவுகணை கொண்டுள்ளது. இதற்காக இந்தியா- ரஷ்யாவிடம் ஒப்பந்தம் செய்துள்ளது.

 6 ஆயிரம் டன் எடையுள்ள அரிஹந்த்:

6 ஆயிரம் டன் எடையுள்ள அரிஹந்த்:

முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்க்கி கப்பல், 6 ஆயிரம் டன் எடை கொண்டது. யுரேனியத்தை எரிபொருளாக கொண்டு இயங்க கூடியது.

ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பல் தெற்காசிய பிராந்தியத்தில் முதன் முறையாக இயக்கப்படுகின்றது. இது எதிரி நாட்டு நீர்மூழ்க்கி கப்பலையும் தாக்கி அழித்து விடும். இதை கண்டும் பாகிஸ்தானும், சீனாவும் பீதியில் உள்ளன.

24 ரோமியோ ஹெலிகாப்டர் வாங்கும் இந்தியா:

24 ரோமியோ ஹெலிகாப்டர் வாங்கும் இந்தியா:

அமெரிக்காவிடம் இருந்து ஏறத்தாழ 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் 24 ரோமியோ ஹெலிகாப்டர்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

இந்தியா தரப்பில் கடிதம்:

இந்தியா தரப்பில் கடிதம்:

இந்தியப் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீனாவை எதிர்கொள்வதற்கு இத்தகையை நவீன ஆயுதங்கள், வசதிகள் கொண்ட ஹெலிகாப்டர் இந்திய கடற்படைக்கு தேவையாக இருப்பதாக கூறப்படுகிறது. 24 எம்ஹெச் 60 ரோமியோ நவீன ஹெலிகாப்டரை உடனடியாக வழங்குமாறு கேட்டு இந்தியா தரப்பில் இருந்து அமெரிக்காவிற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

 மோடி- டிரம்ப் சந்திப்பு:

மோடி- டிரம்ப் சந்திப்பு:

இது தொடர்பான ஒப்பந்தம் இன்னும் சில மாதங்களில் கையெழுத்தாகலாம் என்றும், வரும் 30 ஆம் தேதி அர்ஜெண்டினாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி இந்த ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் ஆப்பு:

சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் ஆப்பு:

எம்ஹெச் 60 ரோமியோ ஹெலிகாப்டரை தனது கட்டுப்பாட்டில் உள்ள தீவுகளையும், தனது நாட்டில் பகுதிகளையும் கண்காணிக்கும். மேலும் கடல் பகுதியில் போருக்கு வந்தாலும், சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இது பெரும் அடியாக இருக்கும். ஊடுறுவல்களையும் அடியோடு அழித்து விடும் இந்தியா.! .

Best Mobiles in India

English summary
why india wants to buy the mh 60 romeo helicopters from the us: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X