ஏலியன்கள் பூமியை கண்காணிக்கின்றன அடித்துகூறும் ஆதாரத்துடன் இருவர்!

இறுதியாக வேற்றுகிரக வாசிகள் நம்மை கண்டுபிடித்து விட்டார்களா? என்கிற கேள்விக்கு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் உயர் ஆய்வாளர் ஒருவர் "ஆம், இருக்கலாம்" என்று கூறுகிறார்.

|

இறுதியாக வேற்றுகிரக வாசிகள் நம்மை கண்டுபிடித்து விட்டார்களா? என்கிற கேள்விக்கு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் உயர் ஆய்வாளர் ஒருவர் "ஆம், இருக்கலாம்" என்று கூறுகிறார்.

அது மட்டுமில்லாமல், அதற்கு ஆதாரங்களை அள்ளியள்ளி வழங்கும்படியான அடுக்கடுக்கான காரணங்களையும் முன் வைக்கிறார், எல்லாவற்றிக்கும் மேலாக அதை அவர் முழுமையாக நம்புகிறார்.

ஒமுவாமுவா

ஒமுவாமுவா

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ஹார்வர்ட் ஸ்மித்சோனியன் மையம் வெளியிட்ட ஒரு வானியற்பியல் ஆய்வில், ஒமுவாமுவா (Oumuamua) எனும் நீளமான மற்றும் மர்மமான விண்வெளி பொருள் (அல்லது விண்கல்) ஆனது ஏலியன் எனப்படும் வேற்றுகிரக வாசிகளுக்கு சொந்தமானதாக இருக்க வாய்ப்புள்ளது என்கிற திகிலை கிளப்பி உள்ளது. அதாவது, 196,000 மைல் வேகத்தில் பயணிக்கும் அந்த நீளமான இருண்ட-சிவப்பு பொருள் ஆனது "செயற்கையான தோற்றத்தை" கொண்டு உள்ளது என்கிற கருத்தை முன்வைக்கிறது.

இந்த ஆய்வானது ஷெம்யூல் பைலி மற்றும் ஆபிரகாம் லோயி மூலம் முன்மொழிய பட்டுள்ளது. லோயி, ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் வானியல் துறையின் தலைவராக இருக்கிறார். இவர் தான் ஒமுவாமுவா ஆனது ஒரு அயல் கிரகித்து (ஏலியன்) பொருளாக இருக்கும் என்று நம்புகிறார். அதற்கான ஆறு காரணங்களையும் அவர் முன் வைக்கிறார்.

சர்ச்சைக்கு உரிய ஒமுவாமுவா என்பது உண்மையில் என்ன?

சர்ச்சைக்கு உரிய ஒமுவாமுவா என்பது உண்மையில் என்ன?

இதுவரை வெளியான விவரங்களை வைத்து பார்க்கையில் கூகுள் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. 'ஒமுவாமுவா' என்று கூகுளில் டைப் செய்தால், அதன் அதிகாரப்பூர்வ விக்கிபீடியா பக்கம் திறக்கிறது. அதில் இது ஒட்டு 'வால்மீன் வகை' என்ற பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மறுகையில், ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியாளர்களோ, அதை அன்னியப் புலமாக இருக்கலாம் என்று வாதிடுகிறார்கள்.

பெயர் விளக்கம்!

பெயர் விளக்கம்!

'ஒமுவாமுவா' என்பது ஹவாய் மொழியில் "தொலைதூரத்தில் இருந்து வரும் ஒரு தூதுவர்" என்று பொருள்படும், இது சூரிய மண்டலத்தின் வழியாக கடந்துசெல்லப்பட்ட முதல் 'விண்மீன் பொருளை' குறிக்கிறது. இது 1I/2017 U1 என்று முறையாக நியமிக்கப்பட்டிருக்கிறது மற்றும் இதை ஹவாயின் ஹாலகலா ஆய்வகத்தின் பாண் ஸ்டார்ஸ் (Pan-STARRS) தொலைநோக்கி மூலம் ராபர்ட் வெயரிக் என்பவரின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இது விண்மீன் தானா?

இது விண்மீன் தானா?

ஒரு 'விண்மீன் பொருள்' என்பதற்கு மிகவும்விரிவான விளக்கங்கள் மற்றும் வரையறைகள் உள்ளன. சுருக்கமாக கூற வேண்டும் எனில், ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தின் ஈர்ப்பு விசையால் பாதிக்கப்படாத (ஈர்க்கப்படாதா) ஒரு விண்மீனையோ அல்லது துணை நட்சத்திரத்தையோ தான் விண்மீன் என்பார்கள். இதுபோன்ற விண்மீன்கள் அது செல்லும் கோளப்பாதையில் இருக்கும் சில நட்சத்திரங்கள் மற்றும் வால் நட்சத்திரங்கள் கடந்து செல்லும், அப்படி தான் 'ஒமுவாமுவா' பூமியை நெருங்கி வந்தது. சந்தேகம் எங்கு எழுகிறது என்று கேட்டால் - அதன் விசித்திரமான சிகார்-வடிவத்தில் தான். இதற்கு முன் இதுபோன்றதொரு வடிவத்தில் எந்தவொரு விண்மீனும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஒருவேளை 'ஒமுவாமுவா' வேற்றுகிரக பொருளாக இருக்கலாமா?

ஒருவேளை 'ஒமுவாமுவா' வேற்றுகிரக பொருளாக இருக்கலாமா?

இருக்கலாம், இல்லாமலும் போகலாம். இரண்டிற்கும் காரணங்கள் உள்ளன. சூரியனுடன் நெருக்கமான அணுகுமுறையை கொண்டு இருந்தபோதிலும், 'ஒமுவாமுவா' கண்டுபிடிக்கப்பட்டபோது, ​​அது எந்தவிதமான காமெட் டெயில் ( தூசி மற்றும் வாயுக்களின் நீரோட்டங்கள் தடம்) அறிகுறிகளையும் காட்டவில்லை. ஆக இது சூரிய கதிர்வீச்சின் அழுத்தம் காரணமாக பயணிக்கிறது என்பது கண்டு அறியப்பட்டது. இது முதல் சந்தேகம். இதன் தோற்றம் பற்றியும், இது எவ்வளவு தூரம் எத்தனை நட்சத்திரங்களை கடந்து பயணித்து வந்தது (பயணம் செலவு நேரம்) என்பது பற்றியும் எந்த தகவலும் இல்லை. இது இரண்டாவது சந்தேகம். இருந்தாலும் கூட, இது மிக தூரம் பயணித்து வந்துள்ளது அதனால் தான் இந்த 'ஒமுவாமுவா' எனும் வால்மீன் மிகவும் மெலிதாக (விசித்திரமான வடிவத்தில்) இருக்கலாம் என்றும் சில கோட்பாடுகள் கூறுகிறது.

'ஒமுவாமுவா' உண்மையில் ஒரு வால்மீனாக இல்லையென்றால், வேறு எதுவாக இருக்கலாம்?

'ஒமுவாமுவா' உண்மையில் ஒரு வால்மீனாக இல்லையென்றால், வேறு எதுவாக இருக்கலாம்?

"வேற்றுலக நாகரிகத்தால், பூமியின் அருகே வேண்டுமென்றே அனுப்பி வைக்கப்படும் ஒரு முழுமையான செயல்பாட்டு ஆய்வாக கூட இருக்கலாம்," என்று ஆராய்ச்சியாளர்கள் எழுதியுள்ளனர்.மேலும் "இதன் செயற்கை தோற்றத்தை வைத்து பார்க்கும் போது, விண்மீன் குப்பைகளுக்கு நடுவே மிதக்கும் ஒரு மேம்பட்ட தொழில்நுட்ப கருவிகளைக் கொண்ட ஒரு ஸ்பேஸ்ஷிப் போன்றே தோன்றுகிறது" என்றும் எழுதி உள்ளனர். இது உண்மையா அல்லது பொய்யா என்பது, மிகவும் கற்பனைக்கு உரிய கோட்பாடான - ஏலியன் இன்வெக்ஷனின் (அதாவது ஏலியன் படையெடுப்பின்) நிகழும் போது தான் தெரிய வரும்!

Best Mobiles in India

English summary
Why Harvard's Top Astronomer Thinks an Alien Spaceship has Definitely Visited Us : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X