Subscribe to Gizbot

"கஷ்டம் தான் ஆனால் நமக்கு வேறு வழி இல்லை" - எலான் மஸ்க் கிளப்பும் பீதி.!

Written By:

உலகின் மிகவும் சக்தி வாய்ந்த ராக்கெட் உருவாக்கம், விண்கலத்தை விண்ணில் செலுத்திவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பும் ரீயூசபிள் ராக்கெட், ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் எச்சரிக்கை என எதிர்காலத்தின் மீதே சிந்தனைகளையும் செயல்களையும் திணிக்கும் எலான் மஸ்க் "கஷ்டம் தான் ஆனால் நமக்கு வேறு நல்ல வழி இல்லை" என்று கூறுகிறார். அது ஏன்.? அவர் எதை குறிப்பிடுகிறார்.?

பூமி உருவான ஆரம்ப காலத்தில், இளம் பூமி கிரகமானது பெருமளவில் விண்கற்கள் தாக்குதல் மோதல்களுக்கு உள்ளானது. உயிர் வாழத்தகுந்த நிலைகள், பரந்த கடல்கள் என பூமி கிரகம் அழகானதாக உருமாற அந்த உமிழும் மோதல்கள் தான் காரணமாகும். இருப்பினும் இன்றுவரையிலாக விண்வெளியில் இருந்து ஆயிரக்கணக்கான பொருட்களை (நுண்ணிய தூசி துகள்கள் வடிவத்தில்) பூமி எதிர்கொண்டு தான் இருக்கிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
நடப்பதும் சாத்தியமே

நடப்பதும் சாத்தியமே

மிக அதிர்ஷ்டவசமாக இந்த நவீன காலத்தில், பூமியின் மேற்பரப்பில் ஒரு பெரிய உடுக்கோள்/ விண்கல்/ குறுங்கோள் மோதல் நிகழ்த்தும் சம்பவம் ஆனது மிக அரிதாக மட்டுமே நடக்கும் வாய்ப்புள்ளது. ஆக, அபப்டியொரு நிகழ்வு நடப்பதும் சாத்தியமே என்பதை நாம் இங்கே உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஒரு எச்சரிக்கை

ஒரு எச்சரிக்கை

சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர் இனம் முடிவுக்கு வர காரணமாக இருந்தது ஒரு மாபெரும் எரிகல் மோதல் தான். அதுமட்டுமின்றி கடந்த 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், ரஷ்யாவின் செல்யபின்ஸ்க் நகரில் விழுந்த விண்கல் ஆனது பூமி கிரகவாசிகள் அனைவருக்குமான ஒரு எச்சரிக்கையாகவே கருதப்படுகிறது.

13,000 மெட்ரிக் டன் எடை

13,000 மெட்ரிக் டன் எடை

அந்த விண்கல் ஒரு மேலோட்டமான கோணத்தில் ஒளியின் வேகத்தை விட 60 முறை அதிக வேகத்தில் பூமிக்குள் நுழைந்தது. நமது வளிமண்டலத்தில் தொடர்பு கொண்டதும் அது வெடித்து பூமியோடு மோதியது. பாறை வடிவத்தில் இருந்த அந்த விண்கல் சுமார் 20 மீட்டர் மற்றும் சில 13,000 மெட்ரிக் டன் எடையும் கொண்டது என மதிப்பிடப்பட்டது.

எதிர்கொள்ள நேர்ந்தால்

எதிர்கொள்ள நேர்ந்தால்

அது பூமிக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தவில்லை என்றாலும் கூட ஆயிரம் பேர் காயம் மற்றும் கிட்டத்தட்ட 20,000 கட்டிடங்கள் அழிப்பு ஆகிய சேதங்களை உண்டாக்க வல்லதாகவே தோன்றியது. இதுபோன்ற பெரிய அளவிலான அச்சுறுத்தலை நாம் எதிர்கொள்ள நேர்ந்தால் என்ன நடக்கும்? அது பூமியோடு மோதல் நிகழ்த்தும் பொருளின் அளவை பொருத்தது என்பது ஒருபக்கமிருக்க ஆனால் மிகவும் குறைந்த நேரத்தில் அது நிகழ்ந்தால் விளைவு மிகவும் மோசமானதாக இருக்கும்.

தவிர்க்க முடியாத ஒன்று

தவிர்க்க முடியாத ஒன்று

மோதல் நிகழ்த்த இருப்பது ஒரு சிறுகோள் என்றால் கூட, தற்போது நம்மிடம் இருக்கும் தொழில்நுட்பம் கொண்டு அதை அழிக்க அல்லது ஆவியாக்கவோ முடியாது என்பது தான் நம் அதிநவீன வளர்ச்சியின் உண்மை நிலைப்பாடு. இதுவரையிலான மனிதகுல ஆய்வுகளையும், திட்டங்களையும் சற்று அனுமானித்து பார்க்கும்போது நாம் ஒரு பெரிய உடுக்கோளை எதிர்கொள்ள வேண்டும் என்பது கிட்டத்தட்ட தவிர்க்க முடியாத ஒன்று என்பது புரிய வரும்.

"பல கிரக இனமாக மாற்றம்"

விண்கல் மோதல் மட்டுமே உலகின் மாபெரும் அச்சுறுத்சல் இல்லை. மனித நாகரிகத்தை முடிவுக்கு கொண்டு வரவல்ல கொடிய நோய்கள், எரிமலை வெடிப்புகள் என, அழிவு நமக்கு பல ரூபங்களில் காத்திருகிறது. இதன் அடிப்படையில் தான் "பல கிரக இனமாக மாற்றம்" (transition into a multi-planet species) பெற வேண்டும் என்ற கோட்பாடு கிளம்பியுள்ளது, அதாவது பூமியை வெளியேறி பிரபஞ்ச வெளியில் குடிபுக வேண்டும்.

மற்றொரு திட்டம்

மற்றொரு திட்டம்

நம்மிடம் மற்றொரு திட்டம் வேண்டும் மற்றொரு பாதுகாப்பு வேண்டும் அதாவது நமக்கு வேறொரு கிரகம் வேண்டும். நிச்சயமாக ஆய்வு மூலம் தான் அது கண்டுபிடிக்கப்பட வேண்டும். அதையும் நாம் இந்த வாழ்க்கையிலேயே செய்து விட வேண்டும் - இந்த ஒரே ஒரு தலைமையான நோக்கத்தை அடிப்படையாக கொண்டுதான் எலான் மஸ்க் சிவப்பு கிரகத்தை (செவ்வாய் கிரகம்) நோக்கி செல்ல விரும்புகிறார்.

மனித இனம் தொடர்ந்து வாழ உறுதி

மனித இனம் தொடர்ந்து வாழ உறுதி

நாம் பூமியின் ஆவண சேமிப்பு தான் மிகவும் மதிப்பு வாய்ந்தது, முக்கியத்துவம் வாய்ந்தது என்று எடுத்துக் கொண்டாலும் கூட, உண்மையில் இறுதியில் ஆவணங்கள் எதுவும் மிஞ்சாது. செவ்வாய் கிரகத்தை அடைதல் ஒன்றுதான் மனித இனம் தொடர்ந்து வாழ உறுதி செய்யும் என்கிறார் எலான்.

அழிவை நோக்கி கொண்டு செல்லும்

அழிவை நோக்கி கொண்டு செல்லும்

அதுமட்டுமின்றி, ஹாலிவுட் திரைப்படங்களில் காட்சிப்படுத்துவது போல ஒரு குறிப்பிட்ட அறிவியலார்களுடன் செவ்வாய் கிரகத்திற்கு எலான் மஸ்க் செல்ல விரும்பவில்லையாம், அவர் சுமார் 1 மில்லியன் மக்களை செவ்வாய்க்கு கொண்டு செல்ல விரும்புகிறார் "ஒன்று பிற கிரகங்களுக்கு செல்ல வேண்டும் அல்லது பூமியில் மனித இனத்தை அழிவை நோக்கி கொண்டு செல்லும் நிலையை எதிர்க்க வேண்டும்" என்று எலான் வெளிப்படையாக எச்சரிக்கிறார்.

எளிய பணியாக இருக்க போவதில்லை

எளிய பணியாக இருக்க போவதில்லை

மேலும் "செவ்வாய் கிரகத்திற்கு மக்களை கொண்டு சேர்க்கும் நாள் வரும் வரையிலாக, நாம் ராக்கெட் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் அபார வளர்ச்சி அடைய வேண்டும்", "நிச்சயமாக செவ்வாய் கிரகத்தை அடைதல் என்பது ஒரு எளிய பணியாக இருக்க போவதில்லை, செவ்வாய் கிரகம் தற்போது அழுக்கு மற்றும் மணல் நிறைந்த ஒரு பாலைவனமாக உள்ளது" என்பதையும் எலான் மஸ்க் ஏற்றுக்கொள்கிறார்.

வேறொரு நல்ல வழி இல்லை

வேறொரு நல்ல வழி இல்லை

உடன் மனித இனத்தை பேரழிவில் இருந்து காப்பாற்ற செவ்வாய் கிரகத்தை அடைய முயற்சி செய்வதை விட நமக்கு வேறொரு நல்ல வழி இல்லை என்பதையும், ஒவ்வொரு ஆண்டும் நமது தொழில்நுட்பத்தை வளர்ச்சி அடைய செய்யவில்லை என்றால் நம்மால் செவ்வாயை அடைய முடியாது என்றும் எலான் மஸ்க் விவரிக்கிறார்.

அனிமேஷன் வீடியோ

சமீபத்தில் எலான் மஸ்க் அவரின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் உலகின் மிக சக்திவாய்ந்த ராக்கெட் அனிமேஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டார், அதில் அவரின் செவ்வாய் கிரக கனவு மிக தெளிவாக உருவாக்கப்படுத்தப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Why Elon Musk focusing more in World s Most Powerful Rockets. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot