தினமும் கடிகாரம் பார்க்கும் நாம் இதை ஒருமுறையேனும் யோசித்திருப்போமா.?

|

இயற்பியலில் உள்ள பல கதைகளில் ஐசக் நியூட்டனின் கதை மிகவும் சுவாரசியாமானதாகும். 1666-ஆம் ஆண்டு, மிகவும் வேகமாக பரவும் தொற்றுநோய்களில் ஒன்றான புபோனிக் பிளேக் பாதிப்பு காரணமாக ஐசக் நியூட்டன், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறும்படியான கட்டாயம் ஏற்பட்டது.

தினமும் கடிகாரம் பார்க்கும் நாம் இதை ஒருமுறையேனும் யோசித்திருப்போமா.?

அதனையடுத்து லிங்கன்ஷயர் கிராமப்புறத்திற்கு தனது தாயுடன் திரும்பிய ஐசக் நியூட்டன், மிகவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அதிலிருந்து மீளும் நோக்கத்தில் இயற்பியல் சார்ந்த படிப்புகளுக்குள் ஐசக் நியூட்டன் தன்னை மூழ்கடித்துக் கொள்கிறார்.

அதன் விளைவாக "ஒவ்வொரு செயலுக்கும் ஒரு சமமான மற்றும் எதிர்மறை எதிர்வினை உண்டு" உட்பட மூன்று புகழ்பெற்ற மூன்று இயக்க விதிகள் பிறக்கின்றன. ஈர்ப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான ஒரு விளக்கத்தையும் அவர் திட்டமிட்டார்.

நியூட்டனின் மூன்றாம் வீதியில் ஒரு குழப்பம்

நியூட்டனின் மூன்றாம் வீதியில் ஒரு குழப்பம்

ஆப்பிள் ஏன் மரங்களிலிருந்து விழுகின்றன என்பது தொடங்கி ஏன் பூமி சூரியனை சுற்றிவருகிறது என்பது வரையிலாக நியூட்டனின் விதிகள், உலகை விவரிக்கும் வியத்தகு விளக்கங்கள் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் நியூட்டனின் மூன்றாம் வீதியில் ஒரு குழப்பம் இருந்தது. ஒன்று முன்னோக்கி செல்லும் என்றால் அது பின்னோக்கியும் வரும் என்பது அறிவியல் நியதியெனில் - நேரம் ஏன் முன்னோக்கி மட்டுமே செல்கிறது.? ஏன் பின்னோக்கி செல்வதில்லை.??

ஒரே ஒரு ஆதாரம் மட்டுமே

ஒரே ஒரு ஆதாரம் மட்டுமே

கண்களுக்கு புலப்படாத வைரஸ் கிருமிகள் தொடங்கி அளக்க முடியாத இந்த பிரபஞ்சம் வரை - நம்மிடம் ஏகப்பட்ட விடயங்கள் மீதாம புதிர்மிகுந்த கேள்விகள் இருக்கிறது. ஆனால், ஒரே ஒரு ஆதாரம் மட்டுமே நம் வசம் உள்ளது - அது தான் அறிவியல் தொழில்நுட்பம்.

முன்னோக்கியே வழிந்துச்செல்லும் நேரம்

முன்னோக்கியே வழிந்துச்செல்லும் நேரம்

அது ஒன்றை வைத்துக்கொண்டு தான் பல கேள்விகளுக்கும், பழமையான குழப்பங்களுக்கும் என்ன பதில், என்ன விளக்கம் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டியதாக உள்ளது. இருப்பினும் அனுதினமும் வளர்ந்து கொண்டே போகும் அறிவியலால் கூட பிரபஞ்சத்தின் சில பழம்பெரும் புதிர்களுக்கான விடைகளையும், விளக்கத்தையும் அளிக்க இயலவில்லை என்பது தான் நிதர்சனம்.

'அட்லீஸ்ட்' கேள்விகளையாவது தெரிந்து கொள்வோமே!

'அட்லீஸ்ட்' கேள்விகளையாவது தெரிந்து கொள்வோமே!

அதிலொன்று தான் - முன்னோக்கியே வழிந்துச்செல்லும் நேரம். இதுபோன்றே விடைகளே கிடையாத கேள்விகள் பல உள்ளன. சரி, விடைகளும், விளக்கங்களும் தன கிடையாது 'அட்லீஸ்ட்' கேள்விகளையாவது தெரிந்து கொள்வோமே.

நேரம் ஏன் ஒரே திசையில் பாய்கிறது.?

நேரம் ஏன் ஒரே திசையில் பாய்கிறது.?

நேரம் என்பது குறிப்பிட்ட ஒரு வழியில் தான் இருக்க வேண்டுமென பரிந்துரைக்கும் இயற்பியல் விதிகள் எதுவும் இல்லை. ஆக, எதிர்காலம் மற்றும் கடத்த காலம் ஆகிய இரண்டிற்குமான நேரத்தில் எந்த விதமான வித்தியாசமும் இல்லை.

அனுமான கேள்வி

அனுமான கேள்வி

இந்நிலைப்பாட்டில் கடந்த காலத்தை நினைவுகூர முடியும் நம்மால் ஏன் வருங்காலத்தை நினைவு கொள்ள முடியவில்லை என்கிற அனுமான கேள்வி எழுகிறது. டைம் டிராவல் எனப்படும் காலப்பயணம் என்பது என்றாவது ஒருநாள் சாத்தியப்பட்டால் மட்டுமே, இந்த கேள்விக்கு பதில் கிடைக்கும். அதுவரை நேரமென்பது முன்னோக்கி மட்டுமே நம்மை செலுத்தும் ஒரு மர்மம் தான்.

ஈர்ப்பு என்பதற்குள் அப்படி என்னதான் இருக்கிறது.?

ஈர்ப்பு என்பதற்குள் அப்படி என்னதான் இருக்கிறது.?

ஈர்ப்பு என்பது ஒரு சக்தி என்பதும், அது ஈர்க்கும் வேலையொன்றை செய்கிறது என்பதும் உறுதி. இந்த ஈர்ப்பினால் தான் நாம் பூமியோடு பிணைப்பில் உள்ளோம். அதெல்லாம் சரி - இந்த ஈர்ப்பு எப்படி உருவாகிறது ? ஏன் அது எப்போதுமே ஒரு எதிர் சக்தியாக மாறியதில்லை.? என்பதற்கு எவ்வகை புரிதலும் இல்லை. ஒருவேளை, இதன் மீதான தெளிவை பெற குவாண்டம் ஈர்ப்பு கோட்பாடு (Quantum field theory) நமக்கு உதவலாம்.

பொருளில்லா நிலை - பொருளுள்ள நிலை.!

பொருளில்லா நிலை - பொருளுள்ள நிலை.!

இதுவரை நாம் பெட்ரா புரிதலை வைத்து பார்க்கும்போது பொருள் (matter) மற்றும் பொருளில்லா நிலை (anti-matter) ஆகிய இரண்டும் எதிர் எதிராக இருக்க வேண்டும் அதே போல சரிக்கு சமமாக இருக்க வேண்டும். குறிப்பாக, ஒன்று மற்றொன்றை நிர்மூலமாக்க வேண்டும். ஆனால் நம் அண்டத்தில், ஆன்ட்டி-மேட்டர்களை விட மேட்டர்கள் தான் அதிகமாக உள்ளது. அதெப்படி என்ற கேள்வி மட்டும் தான் நம்மிடம் உள்ளதே தவிர ஒரு தீர்வுமில்லை.

வாழ்வின் ஆதாரமெது.?

வாழ்வின் ஆதாரமெது.?

உயிர் வாழ்க்கையானது, இந்த பூமியில் கிரகத்தில் தான் உருவாகின என்பது உறுதி. ஆனால், எப்படி உருவானது என்பது தான் இங்கே கேள்வி. மூலக்கூறுகள், அமினோ அமிலங்கள் என எல்லோரிடமும் ஒரு கோட்பாடு உள்ளது, ஆனால் நிச்சயமான பதில் யாரிடமும் இல்லை.

அலசி பார்த்தாகிற்று ஆனால்..

அலசி பார்த்தாகிற்று ஆனால்..

92 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவு தான் காணக்கூடிய நமது அண்டத்தின் எல்லையாகும். முடிந்த வரை விண்வெளியை அலசி பார்த்தும் கூட நம்மை போன்றே உள்ள பிற உயிரினங்கள் எங்கே இருகிறர்கள் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை என்பது இதே கோட்டில் எழும் மற்றொரு கேள்வியாகும்.

தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு எவ்வாறு வேலை செய்கிறது.?

தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு எவ்வாறு வேலை செய்கிறது.?

தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு கோட்பாடு என்பது பூமியின் மேலோடு அமைப்பையும், அதன் தொடர்புடைய அடிப்படை கவசத்தின் மீது மெதுவாக நகரும் திடமான லித்தோஸ்பெரிக் தகடுகள் போன்ற பல நிகழ்வுகளையும் விளக்கும் ஒரு கோட்பாடு என்பதுவரை எல்லாம் தெளிவாக இருக்கிறது ஆனால், அந்த தகடுகள் நகர்வதற்கு எது காரணம், எது பின்புலம் என்பதில் தீர்க்கமான புரிதல் கிடையாது.

Best Mobiles in India

English summary
Why does time always run forwards and never backwards. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X