"இந்த" சூரிய ரகசியத்தை முதலில் கண்டுபிடிக்க போவது யார்? களத்தில் குதித்த சீனா!

|

இதுவரையிலாக கண்டுபிடிக்கப்படாத சூரியன் (The Sun) தொடர்பான ஒரு "விண்வெளி ரகசியத்தை" கண்டறியும் நோக்கத்தின் கீழ் சீனா ஒரு காரியத்தை செய்துள்ளது.

அதென்ன காரியம்? சூரிய கிரகணம் தெரியும்! அதென்ன சூரிய ரகசியம்? அதை ஏன் இதுவரை கண்டுபிடிக்கவே முடியவில்லை? இந்த விஷயத்தில், அமெரிக்காவின் நாசா என்ன செய்கிறது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

ஒரு காரணம் இருக்கிறது!

ஒரு காரணம் இருக்கிறது!

சரியாக 1913 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதியன்று, கலிபோர்னியாவின் டெத் வேலியில் 56.7 செல்சியஸ் (134 பாரன்ஹீட்) என்கிற வெப்பநிலை பதிவு செய்யப்பட்டது.

அது தான் இதுவரையிலாக (பூமியில்) பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச வெப்பநிலை ஆகும். இந்த புள்ளிவிவரத்தை இங்கே சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது!

சாம்பல் கூட மிஞ்சாது!

சாம்பல் கூட மிஞ்சாது!

56.7 செல்சியஸ் என்கிற அதிகபட்ச வெப்பநிலை, 500 செல்சியஸ் ஆக மாறினால் எப்படி இருக்கும்? அதுவே 5000 செல்சியஸ் ஆக அதிகரித்தால்? சாம்பல் கூட மிஞ்சாது அல்லவா?

அதுதான் சூரியனின் வெப்பநிலை ஆகும். விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, சூரியனின் வெப்பநிலை சுமார் 5,973°C முதல் 15,000,000°C வரை இருக்கலாம்!

பூமியை நோக்கி!

பூமியை நோக்கி!

கற்பனை கூட செய்து பார்க்க முடியாத, மிகவும் கடுமையான சூழ்நிலைகளை தன்வசம் கொண்டுள்ள சூரியனில்.. சூரிய வெடிப்புகளும், அதன் விளைவால் ஏற்படும் சூரிய புயல்களும் மிகவும் சாதாரணம்!

சூரிய புயல்கள் பெரும்பாலும் சூரிய வெடிப்பின் விளைவாகவே ஏற்படுகின்றன. அது கரோனல் மாஸ் எஜெக்ஷன்ஸ் (Coronal mass ejections) என்று அழைக்கப்படும் பெரும் அளவிலான சூரிய துகள்களை (Solar particles) பூமியை நோக்கி வீசும்!

சூரிய புயல் மனிதர்களை கொல்லுமா?

சூரிய புயல் மனிதர்களை கொல்லுமா?

நாசாவின் கூற்றுப்படி, சூரிய புயல்கள் மனிதர்களை நேரடியாக பாதிக்காது.

ஏனென்றால், மிகவும் தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சுகள் பூமியின் ஓசோன் படலத்தை கடக்காது என்பதால் - தொழில்நுட்ப ரீதியாக - சூரிய புயல்களால் நமக்கு எந்த ஆபத்தும் இருக்காது.

ஆனால்..?

ஆனால்..?

ஆனால் ஒரு சூரிய புயலால் கம்ப்யூட்டர்களை, மின்னணு சாதனங்களை, அவ்வளவு ஏன் விமானங்களை கூட பாதிக்க முடியும் என்று கூறப்படுகிறது அதற்கான சில ஆதாரங்களும் கூட முன்வைக்கப்படுகின்றன.

ஆனால் ஏன் சூரிய வெடிப்புகள் ஏற்படுகின்றன என்பதை விளக்கம் எந்த ஆதாரங்களும் இங்கே இல்லை; அது இந்த நொடி வரை ஒரு ரகசியம் தான். ஒரு மர்மம் தான்!

அந்த ரகசியத்தின் பதிலை தேடும் சீனா!

அந்த ரகசியத்தின் பதிலை தேடும் சீனா!

சீனா, ​​அட்வான்ஸ்டு ஸ்பேஸ் பேஸ்டு சோலார் அப்சர்வேட்டரி (Advanced Space-based Solar Observatory; ASO-S) என்று அழைக்கப்படும் தனது முதல் சோலார் ஆய்வகத்தை (Solar observatory) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி உள்ளது.

சீனாவின் இந்த சோலார் ஆய்வகம் ஆனது, அடுத்த 4 - 5 ஆண்டுகளுக்கு சூரியனை ஆய்வு கண்காணிக்க உள்ளது; பிரத்தியேகமான முறையில் சூரிய எரிப்புகளை (Solar Flares) ஆய்வு செய்து, சூரியனில் ஏன் வெடிப்புகள் நிகழ்கின்றன என்பதை புரிந்துகொள்ள வழி வகுக்க உள்ளது!

உச்சக்கட்ட ஆர்வத்தில் விஞ்ஞானிகள்! ஏன்?

உச்சக்கட்ட ஆர்வத்தில் விஞ்ஞானிகள்! ஏன்?

சூரிய ஒளியின் "ரகசியங்களை" வெளிப்படுத்தும் சீனாவின் முதல் சோலார் ஆய்வகத்தின் மீது விஞ்ஞானிகள் பேரார்வத்தில் உள்ளன. ஏனென்றால் ASO-S ஆனது மொத்தம் மூன்று கருவிகளை உள்ளடக்கியது.

01. மேக்னெட்டோகிராஃப் (Magnetograph) - இது சூரியனின் காந்தப்புலத்தை ஆய்வு செய்யும்.

02. எக்ஸ்ரே இமேஜர் (X-ray imager) - இது சூரிய எரிப்பு வெடிப்புகளில் "துரிதப்படுத்தப்பட்ட" எலக்ட்ரான்களால் வெளியிடப்படும் ஹை எனர்ஜி ரேடியேஷனை கவனிக்கும்.

03. கரோனாகிராஃப் (Coronagraph) - இது சூரிய எரிப்பு மற்றும் CME வெடிப்புகளால் உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்மாவை ஆய்வு செய்யும்.

இதற்காக சீனா செய்த செலவு!

இதற்காக சீனா செய்த செலவு!

சூரியனின் ஒரு குறிப்பிட்ட பகுதியை 'ரெக்கார்ட்' செய்வதற்காக சீனா இதற்கு முன்னர் தனிப்பட்ட கருவிகளுடன் செயற்கைக்கோள்களை அனுப்பி உள்ளது தான்.

ஆனால் ASO-S தான், பரந்த அளவிலான கருவிகளைக் கொண்ட சீனாவின் முதல் கண்காணிப்பு நிலையமாகும்.

இதற்காக சீனா செலவு செய்த தொகை எவ்வளவு தெரியுமா? - 126 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

இவ்வளவு பணமும் வீணாய் போக வாய்ப்புள்ளதா?

இவ்வளவு பணமும் வீணாய் போக வாய்ப்புள்ளதா?

வாய்ப்பே இல்லை! ஏனென்றால், நாம் மேற்கண்ட மூன்று கருவிகளும் சேர்ந்து ASO-S க்கு ஒரு தனித்துவமான திறனை அளிக்கின்றனவாம்!

அதன் வழியாக ASO-O ஆய்வகத்தால். சூரிய வெடிப்புகள் தொடங்கும் நடுத்தர கொரோனாவை ஆய்வு செய்ய முடியுமாம். இது முற்றிலும் வேறுபட்ட கோணத்திலான தகவல்களை, உண்மைகளை வெளிப்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

"இந்த விஷயத்தில்" அமெரிக்காவின் நாசா என்ன செய்கிறது?

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவும் கூட தொடர்ச்சியான முறையில், சூரியனை ஆய்வு செய்து வருகிறது.

இதற்காக நாசாவும், ஐரோப்பிய விண்வெளி நிறுவனமும் (ESA) தத்தம் ஆய்வகங்களை (சோலார் ஆர்பிட்டர் மற்றும் சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரி) தனித்தனியாக விண்ணில் செலுத்தி உள்ளன.

அமெரிக்கா vs சீனா!

அமெரிக்கா vs சீனா!

இப்படியாக நாசாவும், சூரியனையும், அது தொடர்பான ரகசியங்களையும் ஆழமாக ஆய்வு செய்து வருகிறது!

சூரியன் தொடர்பான இந்த குறிப்பிட்ட ரகசியத்தை யார் முதலில் கண்டுபிடிக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

Photo Courtesy: NASA, CNA, Wikipedia, NASASpaceFlight.com

Best Mobiles in India

English summary
Why China's First Solar Observatory is Tough Competition to NASA to Solve Mystery of Sun s Eruptions

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X