நிலவில் எடுத்த படங்களில் நட்சத்திரங்கள் ஏன் இல்லை! கதை இதுதான்.!

நேரடி சூரிய ஒளியில் உங்கள் நண்பரை படம் எடுக்க விரும்பினால், நீங்கள் உங்கள் கேமரா அமைப்புகளை இரண்டு வழிகளில் சரிசெய்ய வேண்டும்.

|

ஜூலை 20, 1969 அன்று அப்பல்லோ 11 விண்வெளி வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் அல்ட்ரின் ஆகியோர் ஈகிள் லூனார் மாட்யூலில் இருந்து கீழே இறங்கி (பாவம்! மைக்கேல் காலின்ஸ் -ஐ பின்னுக்கு தள்ளிவிட்டு) சந்திரனில் முதல் காலடியை பதித்தனர். குறைந்தபட்சம் நாம் கேள்விப்பட்ட கதை இதுதான்.

நிலவில் எடுத்த படங்களில் நட்சத்திரங்கள் ஏன் இல்லை!  கதை இதுதான்.!

ஆனாலும் சிலர் இந்த நிலவில் கால்பதித்த நிகழ்வு அனைத்தும் ஒரு விரிவான புரளி என்றும், ஹாலிவுட் ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டது என்றும் நம்புகின்றனர். அவர்களின் ஆதாரங்களான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் எதிலும் வானத்தில் எந்த நட்சத்திரங்களையும் காட்டாதே இந்த கூற்று உண்மை என்பதை நிரூபிக்கிறது என்கின்றனர்.

ஹாலிவுட் தயாரிப்பாளர்கள்

ஹாலிவுட் தயாரிப்பாளர்கள்

ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் ஏன் தங்கள் சதித்திட்டத்தில் எப்படி கவனமில்லாமல் இருக்கிறார்கள்? உண்மையில் இந்த கூற்றுக்கு ஒரு சாதாரண விளக்கம்: நட்சத்திரங்களை படம்பிடிக்க கேமரா அமைப்புகள் சரிசெய்யப்படவில்லை.

நேரடி சூரிய ஒளி

நேரடி சூரிய ஒளி

நேரடி சூரிய ஒளியில் உங்கள் நண்பரை படம் எடுக்க விரும்பினால், நீங்கள் உங்கள் கேமரா அமைப்புகளை இரண்டு வழிகளில் சரிசெய்ய வேண்டும். நீங்கள் அதிக ஒளி விடாமல் தவிர்க்க லென்ஸ் சிறிய ஒளி சேகரிப்பு பகுதியில் வைத்திருக்கும் சிறிய துளை உதவும். இதே காரணத்திற்காக தான் உங்கள் நண்பரின் படம் பிரகாசமான சூரிய ஒளியில் கட்டுப்படுத்தப்படும்.

 கேமரா

கேமரா

கேமரா ஷட்டரை வேகப்படுத்துவதன் மூலம் கேமரா சென்சார் ஒரு சுருக்கமான தருணத்திற்கு மட்டும் ஒளியை அனுமதிக்கும். அதுபோல இரவில் நண்பரின் படத்தை எடுக்க விரும்பினால், நீங்கள் கேமரா ஷட்டரின் வேகத்தை குறைத்து அபர்ட்சர்ஐ விரிவுபடுத்தினால் ஒரு சிறந்த ஷாட்டிற்கு போதுமான ஒளி வெளிச்சம் கிடைக்கும்.

 புகைப்படத்தில் என்ன வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும்

புகைப்படத்தில் என்ன வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும்

ஆனால் உங்கள் நண்பர் இரவுநேரத்தில் ஒளிரும் தன்மை கொண்டவர் என்றால் என்னசெய்வது? அப்போது நீங்கள் உங்கள் புகைப்படத்தில் என்ன வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் வானத்தில் நட்சத்திரங்களை படத்தில் சேர்க்க விரும்பினால், மெதுவாக ஷட்டர் மற்றும் விரிவான அபர்ட்சர் தேவையான ஒளியை அனுமதிக்க, மங்கலாகதவாறு உங்கள் நண்பர் நிற்பதை உறுதி செய்ய வேண்டும். நீங்கள் சிறிய அபர்ட்சர் துளை மற்றும் ஷட்டர் வேகத்தை வைத்து இருந்தால், நீங்கள் உங்கள் நண்பரின் கூர்மையான, ஒளிரும் பிரகாசமான படத்தைப் எடுக்கலாம்.ஆனால் லென்ஸ் போதுமான ஒளி அனுப்பப்படாது என்பதால் வானம் இருளாக இருக்கும்.

அப்பல்லோ விண்வெளி வீரர்கள்

அப்பல்லோ விண்வெளி வீரர்கள்

இதை தான் அப்பல்லோ விண்வெளி வீரர்கள் செய்ய வேண்டியிருந்தது. இரவு நேரம் காரணமாக நிலவில் வானம் கருப்பாக இருந்து , பூமியில் இருப்பதுபோல பகல்நேர ஒளியை சிதறடிப்பதற்கான சூழ்நிலையும் இல்லை. பூமியில் பகல்நேரத்தில் பிரகாசமாக இருப்பது போல நிலவில் சூழ்நிலை இல்லை. நிலவில் அப்பல்லோ புகைப்படங்களில் எடுப்பதற்கான மிக முக்கியமான விஷயம் இது என்பதால் , எனவே அந்த காட்சியை மிகச் சிறப்பாக எடுக்க கேமரா சரி செய்யப்பட்டது.

மங்கலான நட்சத்திரங்களின் காட்சிகள்

இதன் விளைவாக பின்னணியில் ஒப்பீட்டளவில் மங்கலான நட்சத்திரங்களின் காட்சிகள் எந்த புகைப்படத்திலும் பதிவு செய்யவில்லை. எனவே நிலவில் நட்சத்திரக்கள் இல்லாமல் எடுக்கப்பட்ட புகைப்படம் வதந்தி அல்ல, வெறும் கேமரா லென்ஸ் டிரிக் தான்.

Best Mobiles in India

English summary
Why Aren't There Stars in the Moon Landing Photos: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X