Home
Scitech

மனித உயிர்களை பணயம் வைக்கும் இஸ்ரோவின் ககன்யான் திட்டம்; கிழித்து தொங்கவிட்ட சின்ஹா!

பிரதமர் நரேந்திர மோடி தனது ஐந்தாவது சுதந்திர தின உரையில் "இந்திய மூவர்ண கொடியை விண்வெளிக்கு எடுத்து செல்லும்" திட்டம் ஒன்றை அறிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது ஐந்தாவது சுதந்திர தின உரையில் "இந்திய மூவர்ண கொடியை விண்வெளிக்கு எடுத்து செல்லும்" திட்டம் ஒன்றை அறிவித்தார். அந்த திட்டமானது விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய நான்காவது நாடு என்கிற பெருமையை இந்தியாவிற்கு வழங்கும் என்றும் அறிவித்தார். ஆம் இதற்கு முன் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி உள்ளது.

மனித உயிர்களை பணயம் வைக்கும் இஸ்ரோவின் ககன்யான் திட்டம்.!

அந்த அறிவிப்பிற்கு பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, அதன் 'ககன்யான்' திட்டத்தை அறிவித்தது. இது இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பணியாகும். 16 நிமிடங்களில் என்கிற மதிப்பிடப்பட்ட காலப்பகுதியில் விண்வெளிக்குச் செல்லும் மூன்று விண்வெளி வீரர்கள், அங்கு ஒரு வாரம் தங்கி கழிக்க உள்ளார்கள்.

அனுஜ் சின்ஹா

அனுஜ் சின்ஹா

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொடர்பியலின் தேசிய சங்கத்தின் மூத்த பொறியியலாளரும், தலைவருமான அனுஜ் சின்ஹா, 'விஞ்ஞானிகள் சந்திப்பு' கூட்டத்தில் பேசியபோது, ​​இந்த பணியின் சாத்தியக்கூறு குறித்து கேள்விகளை எழுப்பினார்.

 சுமார் 10,000 கோடி ரூபாய் திட்டம்

சுமார் 10,000 கோடி ரூபாய் திட்டம்

அனுஜ் சின்ஹாவின் படி, இந்த திட்டத்திற்கு சுமார் 10,000 கோடி ரூபாய் திட்டம் செலவு செய்யப்பட உள்ளது. அதனால் இது முழுக்க முழுக்க "கௌரவம் மற்றும் திறமையை கட்டியெழுப்பும் ஒரு திட்டம்" தானே தவிர எந்தவொரு உடனடி நோக்கம், உள்நோக்கம் அல்லது தேவையையும் கொண்டிருக்கவில்லை என்கிறார்.

மனிதர்களை அனுப்பவேண்டிய தேவை இல்லை

மனிதர்களை அனுப்பவேண்டிய தேவை இல்லை

இயந்திரம் மூலம் எளிதில் செய்யக்கூடிய வேலைகளுக்கும், இடத்திற்கும் மனிதர்களை அனுப்பவேண்டிய தேவை இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பிய ஆகா வேண்டிய உடனடி தேவை இல்லை, மனிதத்ர்களை அனுப்பி தான் ஆராய வேண்டும் என்கிற உள்நோக்கம் இல்லை, முக்கியமாக இது நிச்சயமாக வரையறுக்கப்பட்ட ஒரு நோக்கம் இல்லை, இந்த நிலைப்பாட்டில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதன் மூலம் மனித உயிர்களை ஆபத்திற்குள்ளாக்குவது தான் மிச்சம் என்றும் அவர் கூறியுள்ளார்.

சீனா

சீனா

இந்த இடத்தில் சீனாவின் சமீபத்திய நிலவு பயணத்தையும் சின்ஹா குறிப்பிடுகிறார். "ஏற்கனவே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ள சீனா கூட அதன் சேன்ஜி 4 விண்கலத்தை தான் நிலவின் இருந்த பகுதியில் தரை இறக்கி உள்ளது, மனிதர்களை அல்ல" என்கிறார்.

முதலிடம் வகிக்க வேண்டும்

முதலிடம் வகிக்க வேண்டும்

ஒவ்வொரு நாடும் தங்கள் விண்வெளி வீரர்களை விண்வெளிக்குள் அனுப்பி வைப்பதில் முதலிடம் வகிக்க வேண்டும் என்பதையும், அதன் மூலமாக அவர்கள் தங்கள் "பங்குகளை" பெற முடியும் என்பதை தான் புரிந்து கொள்வதாக கூறிய சின்ஹா, ஒவ்வொரு நாடும் தங்கள் இடைவெளியை ஒரு விண்வெளிப் பொருளில் விட்டுவிட விரும்புகிறது என்றும், உலக நாடுகள் விண்வெளி பயணத்தை ஒரு கௌரவப் பிரச்சினையாகவும் மற்றும் திறன் வளர்த்தலாகவும் எடுத்து கொள்கின்றனர் குற்றம் சாட்டினார்.

"கண்மூடித்தனமாக" நிகழ்த்தப்படும் விண்வெளி வளர்ச்சி

இந்த உலகம் வாழ தகுதி அற்ற ஒரு இடமாக ,மாறும் காலத்தை மனதிற் வைத்துக்கொண்டு "கண்மூடித்தனமாக" நிகழ்த்தப்படும் விண்வெளி வளர்ச்சிகளை மட்டுமே சின்ஹா குற்றம் சாட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக அவர் ஒரு பிரதான கேள்வியை எழுப்புகிறார், "இயந்திரம் மூலம் நாம் செய்ய விரும்பும் வேலை செய்ய முடியும் என்றால், ஏன் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப வேண்டும்" என்கிறார். ஒருவேளை மனித தலையீடுகளால் மட்டுமே செய்ய கூடிய காரியம் என்றால், ஏழு நாட்கள் வரை விண்வெளி வீரர்களை விண்வெளிக்குள் தங்க வைப்பது நியாமாக இருக்கும் என்றும் சின்ஹா கூறியுள்ளார்.

ககன்யான்

ககன்யான்

வருகிற 2022 ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட உள்ள ககன்யான் திட்டத்தை வைத்து முன்னேற வேண்டும் என்று அரசாங்கத்தின் முடிவு செய்து உள்ளது, தேவைப்படும் பட்சத்தில் இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சின்ஹா ஒரு வினவலுக்கு பதிலளித்தார்.

2003 ஆம் ஆண்டு பிப்ரவரி 01

2003 ஆம் ஆண்டு பிப்ரவரி 01

இத்தகைய திட்டங்கள் சம்பந்தப்பட்ட அபாயங்களை எடுத்துக்கூறும் முனைப்பின் கீழ், கடந்த 2003 ஆம் ஆண்டு பிப்ரவரி 01 ஆம் தேதி நிகழ்ந்த ஸ்பேஸ் ஷட்டில் கொலம்பியாவின் விபத்தையும், கல்பனா காலப்பன சாவ்லாவின் மரணத்தையும் சின்ஹா ​​முன்வைத்தார். நம் கையில் கால இயந்திரம் இல்லை என்பதால், வெறுமனே திறனை வளர்பதற்கும், கௌரவத்திற்காகவும் மனித உயிர்களோடு விளையாட வேண்டாம் என்று அவர் தனது உரையை முடிவு செய்தார்.

Best Mobiles in India

English summary
Gaganyaan Project While India Prepares To Send Humans Into Space, Veteran Scientist Questions Its Feasibility: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X