சூரியப்புயல் கிளம்புமா.? பூமியை தாக்க எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளும்.?

Written By:

சமீபத்தில் சுமார் 75,000 மைல் அகலத்தில் சூரியனில் ஒரு பெரிய துளை இருப்பதை கண்டுபிடித்ததாக நாசா கூறுகிறது. இந்த துளை ஒரு சக்தி வாய்ந்த சூரிய கிளரொளி (Solar flare) உருவாக்க போதுமானதாக உள்ளது என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

மறுபக்கம், சூரியப்புயல் (Solar Storm) என்று ஒன்றுள்ளது. அப்படியான சூரியப்புயல் என்றால் என்ன.? அந்த சூரிய புயலால் பூமிக்கு ஆபத்துகள் உண்டா.?? அப்படியானால் எம்மாதிரியான ஆபத்துக்களை நாம் சந்திக்க வேண்டியிருக்கும்.? இதற்கு முன் சூரிய புயல் ஏற்பட்டுள்ளதா.?? அது பூமியை தாக்கியுள்ளதா.? போன்ற பல கேள்விகளுக்கு பதில்களை அறிந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் பூமி கிரகவாசிகளாகிய நாம் உள்ளோம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சூரிய கிளரொளிகளை உற்பத்தி செய்வதற்கான ஆற்றல்

சூரிய கிளரொளிகளை உற்பத்தி செய்வதற்கான ஆற்றல்

சூரியனின் காந்த மண்டலத்திற்கும் மற்றும் நட்சத்திரத்தின் மேற்பரப்பில் உள்ள குளிர்ச்சியான பகுதிகளுக்கும் இடையே ஏற்படும் பரஸ்பர சூழல்களின் விளைவாகவே - சன்ஸ்பாட் எனப்படும், இதுபோன்ற சூரிய துளைகள் ஏற்படுகின்றன. தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த குறிப்பிட்ட சூரியனின் துளையானது பூமியை விட பெரியது மற்றும் பூமியில் இருந்தே காட்சிப்படும் அளவுக்கு பெரியதாக இருக்கும் இந்த துளையானது, கதிர்வீச்சு புயல்களை ஏற்படுத்தக்கூடிய சூரிய கிளரொளிகளை உற்பத்தி செய்வதற்கான ஆற்றல் கொண்டுள்ளது.

பூமி தாக்கப்படுவதை வேடிக்கை பார்க்குமா.??

பூமி தாக்கப்படுவதை வேடிக்கை பார்க்குமா.??

பூமியில் அவ்வப்பொழுது நிகழும் புயல், சூறாவெளி போன்றவைகள் எவ்வளவு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை நா அறிவோம், அதை நம்மில் பலர் நேரடியாக அனுபவித்தும் இருப்போம். ஆனால், நாம் யாருமே கனவில் கூட அனுபவிக்க விரும்பாத ஒரு புயல் தான் - சூரியப்புயல். பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஏற்படும் புயலே அப்பகுதியின் கட்டமைப்பு, போக்குவரத்து, மின்சாரம், தொடர்பு ஆகியவற்றை ஒன்றுமில்லாமல் செய்துவிடும் போது, சூரியப்புயல் ஏற்பட்டால் உலகின் கதி என்னவாகும்..? அப்படி ஒரு நிகழ்வு ஏற்பட்டால் இதுவரை உலகம் கண்டுப்பிடித்து வைத்திருக்கும் அதிநவீன தொழில்நுட்பங்கள் என்னென்ன செய்யும்.? நம்மை பாதுகாக்குமா அல்லது பூமி தாக்கப்படுவதை வேடிக்கை பார்க்குமா.??

முதலில் அழிவடைவது.??

முதலில் அழிவடைவது.??

உலகமும் அதன் வாழ் மக்களுமாகிய நாம் பெருமளவு தொழில்நுட்பதையே நம்பி இருக்கிறோம் என்ற நிலையில், விண்வெளி வானிலை (Space weather) சார்ந்த துறையும் அதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறது. அதாவது, விண்வெளி வானிலை தொழில்நுட்பங்களானது ஏற்படப்போகும் மோசமான தாக்குதல்களை நாடாகும் முன்பே அறிந்து கொள்ள உதவுமே தவிர, தடுக்க உதவாது என்பது தான் நிதர்சனம். அப்படியாக "சூரிய புயல் ஒன்று பூமியை தாக்கினால் முதலில் அழிவடைவது - நம் தொழில்நுட்பங்கள் தான். பின் மெல்ல மெல்ல ஒட்டுமொத்த உலகமும் இருளில் மூழ்கும்" என்கிறது விண்வெளி வானிலை கணிப்பு மையம் (Space Weather Prediction Center).

விண்வெளியில் சிதற விடும்

விண்வெளியில் சிதற விடும்

சூரிய புயல் என்பது சூரிய கிளரொளியில் (Solar Flare) இருந்து ஆரம்பிக்கும். சூரிய கிளரொளி என்பது சூரியனில் ஏற்படும் மிகப்பெரிய வெடிப்பாகும். அந்த வெடிப்பின் தாக்கமானது சூரிய ஆற்றல் மற்றும் துகள்களை விண்வெளியில் சிதற விடும். அந்த சிதறலில் எக்ஸ்-ரே கதிர்கள், மின்னூட்டத் துகள்கள் (charged particles), காந்த பிளாஸ்மா (magnetized plasma) ஆகியவைகளும் அடங்கும்.

1,000,000,000 ஹைட்ரஜன் குண்டுகள்

1,000,000,000 ஹைட்ரஜன் குண்டுகள்

சி கிளாஸ் சூரிய கிளரொளி (C Class solar flare) மற்றும் எம் கிளாஸ் (M Class) எனப்படும் இரண்டு வகை சூரிய கிளரொளிகள் பூமிக்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது. ஆனால், எக்ஸ் கிளாஸ் (X Class) சூரிய கிளரொளி ஏற்பட்டால், அது 1,000,000,000 ஹைட்ரஜன் குண்டுகள் ஏற்படுத்தும் பாதிப்பை பூமியில் உண்டாக்கும்.

மிகவும் பலமானது எக்ஸ்-28 என்ற சூரிய கிளரொளி

மிகவும் பலமானது எக்ஸ்-28 என்ற சூரிய கிளரொளி

19-ஆம் நூற்றாண்டிற்கு இடையில் ஏற்பட்ட சூரிய புயலுக்கு பின், உலகை இதுநாள்வரை எந்த சூரிய புயலும் தாக்கவில்லை என்கிற போதிலும் விண்வெளி வானிலையை ஆராயும் விஞ்ஞானிகள் சிலர் மீண்டுமொரு சூரிய புயல் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவே நம்புகின்றனர். இதுவரை அளக்கப்பட்ட சூரிய கிளரொளிகளிலேயே மிகவும் பலமானது எக்ஸ்-28 என்ற சூரிய கிளரொளி ஆகும். அது கடந்த 2003-ஆம் ஆண்டு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சூரிய செயல்பாடுகளில் மாற்றங்கள்

சூரிய செயல்பாடுகளில் மாற்றங்கள்

"பொதுவாக சூரிய வெடிப்பு சம்பவம், சூரிய செயல்பாடுகளில் மாற்றங்களை கொண்டு வருமே தவிர தொழில்நுட்பங்களை பெரிதாக பாதித்து விடாது என்கிறார் நாசா விஞ்ஞானியான ஜோ கூர்மன் (Joe Gurman). மேலும் அவர் சூரிய ரேடியோ கதிர்கள் ஆனது விண்வெளியில் மிதக்கும் செயற்கைகோள்களை மற்றும் அவற்றின் தொடர்புகளை வேண்டுமானால் பெரிய அளவில் பாதிக்கலாம் என்றும் நம்புகிறார்.

ஆபத்தான மின்னூட்டத் துகள்கள்

ஆபத்தான மின்னூட்டத் துகள்கள்

மேலும் வெடிப்பின் பொழுது, சூரியனில் இருந்து வெளிப்படும் மின்னூட்டத் துகள்களானது விண்வெளியில் இருக்கும் மனிதர்களின் ஆரோக்கியத்தை பெரிய அளவில் பாதிக்கும், மறுபக்கம் பூமி கிரக வாசிகள் மீதான தாக்குதல்என்று பார்க்கும் போது, சூரியனில் இருந்து வெளிப்படும் இந்த ஆபத்தான மின்னூட்டத் துகள்கள், பூமியை வந்தடைய 12 மணி நேரம் முதல் பல நாட்கள் வரை எடுத்துக்கொள்ளும் என்பது ஆறுதலான ஒரு விடயமாகும்.

தந்தி அமைப்புகளை 'உடைத்து எரிந்தது'

தந்தி அமைப்புகளை 'உடைத்து எரிந்தது'

இருப்பினும், எப்போது சூரியனின் மேற்பரப்பு வெடித்து ஒரு சக்தி வாய்ந்த ஜியோமேக்னடிக் சூரியப்புயல் (geomagnetic solar storm) உருவாகும் என்பதற்கு எந்த விதமான எச்சரிக்கை உத்திரவாதமும் கிடையாது. 1859-ஆம் ஆண்டு நிகழ்ந்த சூரிய புயலானது, பூமியின் காந்தப்புலத்தை தாக்கி, தந்தி அமைப்புகளை இயக்குபவர்களின் மீது மின்சாரம் பாய்ச்சியது மட்டுமின்றி, அமெரிக்க மற்றும் ஐரோப்பா முழுவதும் உள்ள தந்தி அமைப்புகளை 'உடைத்து எரிந்தது'. இச்சூரியப்புயலே பூமியினைத் தாக்கிய மிகப்பெரிய புவிக்காந்தப்புயல் ஆகும். இதனை ஹரிங்டன் நிகழ்வு என்றும் கூறுவார்கள்.

மீண்டும் இருண்ட காலத்திற்கே

மீண்டும் இருண்ட காலத்திற்கே

பெரிய அளவிலான சூரியப்புயல் தாக்குதல்களானது பூமியின் ஒட்டுமொத்த தொடர்பு சாதனங்களையும் பாதிக்கலாம். அதன் விளைவாக செயற்கைகோள்கள், ஜிபிஎஸ், தொலைபேசிகள், இன்டர்நெட், விமான பயணம் என அனைத்தும் பாதிக்கப்படும். அப்படி நிகழ்ந்தால், அடிப்படையில் நாம் மீண்டும் இருண்ட காலத்திற்கே (Dark Ages) திரும்பி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். சூரிய புயல் பூமியை தாக்கினால், கற்பனைக்கு எட்டாத அளவிலான பெரிய பேரழிவுகளோ அல்லது மனிதர்களுக்கு உடல் ரீதியான பாதிப்புகளோ ஏற்படாது என்றாலும் கூட, பூமி முழுக்க இருக்கும் தொடர்பு கருவிகளுக்கும், தினம் நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களுக்கும் ஏற்படும் பாதிப்பில் இருந்து மீள மாத கணக்கில் தொடங்கி ஆண்டுகள் வரை ஆகலாம்.

பாதிப்பில் இருந்து உலகம் மீள

பாதிப்பில் இருந்து உலகம் மீள

சூரியப்பயல் ஆனது பூமி மீதான தொழில்நுட்ப பாதிப்புகளை மட்டுமின்றி தண்ணீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள் அழிப்பு, சேமிக்கப்பட்ட தரவுகளை அழித்தல், கம்ப்யூட்டர் மெமரிகளை அழித்தல் போன்றவைகளையும் நிகழ்த்தும் வல்லமை கொண்டது. இவ்வகை பாதிப்பில் இருந்து உலகம் மீள ஏற்படும் செலவு மற்றும் நிதி ஏன கண்ணோட்டத்தில் பார்க்கும் போது சுமார் 600 பில்லியன் டாலர்களில் இருந்து 2.6 ட்ரில்லியன் டாலர்கள் வரை ஆகலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Which one is more powerful Our technologies or A Solar storm. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot