ஆம்ஸ்ட்ராங்கின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறதா பர்ஸ்ட்மேன் திரைப்படம்!

எனது முனைவர் பட்டத்திற்கான ஆய்வு "நிலவிற்கு செல்வதற்கான முடிவு'("The Decision to Go to the Moon;") என்ற புத்தகமாக வெளியிடப்பட்டது.

|

சமீபத்தில் வெளியான நீல்ஆம்ஸ்ட்ராங்கின் வாழ்க்கை வரலாற்று படமான 'பர்ஸ்ட்மேன்' பற்றி ஜான் எம். லாக்ஸ்டன் தனது கருத்தை இக்கட்டுரை வாயிலாக தெரிவித்துள்ளார். "தி பெங்குவின் புக் ஆப் அவுட்டர் ஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரேசன் :நாசா அண்ட் தி இன்கிரிடபிள் ஸ்டோரி ஆப் ஹியூமன் ஸ்பேஸ்பிளைட்"-ன் எடிட்டரான இவர், ஜார்ஜ் வாசிங்டன் பல்கலைகழகத்தின் விண்வெளி கொள்கை மையத்தின் நிறுவனர் & ஓய்வுபெற்ற போராசிரியர் மற்றும் "ஜான் எப். கென்னடி அண்ட் தி ரேஸ் டூ தி மூன்" ன் நூலாசிரியர். 'பர்ஸ்ட்மேன்' திரைப்படத்தைப் பற்றிய இவரது விமர்சனங்களை இங்கு காணலாம்.

ஆம்ஸ்ட்ராங்கின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறதா பர்ஸ்ட்மேன் திரைப்படம்!

அப்போலோ 11 திட்டத்துடனான எனது பந்தம் என்பது நீண்ட நெடியது.1960களில் நான் பட்டப்படிப்பு மாணவனாக விண்வெளி கொள்கைகளை படிக்கத்துவங்கினேன்.எனது முனைவர் பட்டத்திற்கான ஆய்வு "நிலவிற்கு செல்வதற்கான முடிவு'("The Decision to Go to the Moon;") என்ற புத்தகமாக வெளியிடப்பட்டது. நிலவுக்கு விண்கலன் அனுப்பும் காலக்கட்டத்தில் இந்த புத்தகம் கிட்டத்தட்ட எழுதிமுடிக்கப்பட்டது.


1969 ஜூலை 16 அன்று காலையில் நான் கென்னடி விண்வெளி மையத்தின் ஆபரேசன்ஸ் அண்ட் செக்அவுட் கட்டிடத்தின் வெளியே நின்றிருந்த போது, ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின் மற்றும் கோலின்ஸ் மூவரும் என்னை கடந்து ஏவுதளத்தை நோக்கி செல்வது 'பர்ஸ்ட்மேன்' திரைப்படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது.

சிலமணி நேரம் கழித்து, பிரபலமான கவுண்ட்டவுன் கடிகாரத்தின் நின்றுகொண்டு, சாட்டர்ன் வி பூஸ்டர் விண்கலம் அவர்கள் மூவரையும் சுமந்துகொண்டு வரலாற்று பயணத்தை துவங்கியதை கண்டு ரசித்தேன். மனிதர்கள் செல்லும் விண்கலத்தை, அதிலும் குறிப்பாக அப்போலா திட்டத்தை பற்றி எழுத, பேச மற்றும் கற்பிக்க எனது வாழ்வின் அரை நூற்றாண்டை செலவழித்தேன். பின்னாளில் நானும் ,ஆம்ஸ்ட்ராங்கும் நாசா ஆலோசனை குழுவில் இருந்தபோது, அவருடன் செலவளித்த நாட்கள் மிகவும் அதிர்ஷ்டமானவை.

ஆம்ஸ்ட்ராங்கின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறதா பர்ஸ்ட்மேன் திரைப்படம்!

குறிப்பாக ஒரு மறக்கமுடியாத இரவு விருந்தின் போது, அப்போலோ விண்கலம் நிலவில் தரையிறங்கிய அனுபவத்தை என்னிடமும், நோபல் பரிசு பெற்ற விண்வெளி இயற்பியலாளர் ஜான் மாதுர் உடனும் பகிர்ந்துகொண்டார் ஆம்ஸ்ட்ராங். அப்போலோ திட்டத்தின் வெற்றிக்கு பலரும் முக்கியமானவர்களாக இருந்தாலும், பஷ் ஆல்ட்ரின் மற்றும் மைக் காலின்ஸ் இருவரும் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள்.

அப்போலோ 11 விண்கலத்தின் குறிப்பிடத்தகுந்த சாதனையை இந்த திரைப்படம் வெளிப்படுத்தும் போது அதை ரசிப்பதில் நான் முதன்மையானவனாக இருந்திருக்கவேண்டும். ஆனால் ஏமாற்றத்துடனும், சற்று வருத்தத்துடன் திரையரங்கை விட்டு வெளியேறினேன். இந்த திட்டத்தில் பங்குபெற்ற நபர்கள் பற்றி திரித்துகூறப்பட்டுள்ளதையும், 1960ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி திட்டத்தின் பங்களிப்பை குறைத்து கூறியதையும் தான் கண்டறிந்தேன்.மூன்று விண்வெளி வீரர்கள் மற்றும் அவர்களின் சாதனைகளை புரிந்துகொள்ளும் வகையில் படத்தின் மையக்கருத்து மற்றும் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் இருந்திருக்கவேண்டும். அவற்றையெல்லாம் விட, படத்தின் முக்கிய கதாப்பாத்திரமான ஆம்ஸ்ட்ராங்கின் நினைவுகளை கெடுக்கும் விதமாக இது உள்ளது.

தொழில்நுட்ப ரீதியாக துல்லியமாக படத்தை கொடுக்க படக்குழு அதிக சிரத்தை எடுத்துள்ளனர். ஆனால் படம் மிகவும் துயரம் மிக்க உணர்வுகளை தரக்கூடியதாக உள்ளதே தவிர ,விண்வெளி வீரர்களின் சாதனைகளை கூற தவறிவிட்டது.

ஆம்ஸ்ட்ராங்கின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறதா பர்ஸ்ட்மேன் திரைப்படம்!

ஆம்ஸ்ட்ராங்கின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து ஜேம்ஸ் ஹேன்சனால் எழுதப்பட்ட புத்தகத்தின் அடிப்படையில் அதே 'பர்ஸ்ட் மேன்' என்ற தலைப்புடன் ரெயன் கோஸ்லிங் நடிப்பில் இத்திரைப்படம் தயாராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Best Mobiles in India

English summary
Which First Man Film Doesn't Depict Real Neil Armstrong Op-Ed: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X