செவ்வாய் கிரகத்தில் மிகச்சிறிய ஹெலிகாப்டர் எப்போது பறக்கும்? இயக்குனர் முக்கியத் தகவல்.!

|

கடந்த ஆண்டு அனுப்பப்பட்ட பெர்சவரன்ஸ் ரோவர் ஆனது கடந்த மாதம் வெற்றிகரமாக செவ்வாயில் தரையிறங்கியது. குறிப்பாக செவ்வாய் கிரகத்தில் தரைப்பகுதியில் ஆய்வு செய்து வரும் அந்த பெர்சவரன்ஸ் ரோவர் அங்கு காணப்படும் மலைகள், குன்றுகள், பாறைகள் என அனைத்தையும் மிகவும் தெளிவாக படம்பிடித்து காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாரப்பூர்வ ட்விட்டர்

அண்மையில் செவ்வாய் கிரக்ததில் கேட்கும் சத்தங்களை பதிவு செய்து அனுப்பியுள்ளது பெர்சவரன்ஸ் ரோவர். மேலும் நாசா அமைப்பு தினசரி பெர்சவரன்ஸ் ரோவர் மூலம் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் அதன்மூலம் வரும் தகவல்களை அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்து வருகிறது.

 இன்ஜெனூட்டி

இன்ஜெனூட்டி

குறிப்பாக இந்த பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்துடன் மிகச்சிறிய ரக ஹெலிகாப்டரும் செவ்வாய் கிரகத்தில் தரை இறக்கப்பட்டுள்ளது. மேலும் இன்ஜெனூட்டி என்று அழைகப்படும் இந்த அதிநவீன சிறிய ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு ஆய்வுக்கு பயன்படுத்தப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

ஒருவரின் உண்மை கதை: படிப்பு: 10-வது., ஒருவரின் உண்மை கதை: படிப்பு: 10-வது., "செக்யூரிட்டு டூ டெக் அதிகாரி": வைரலாகும் ஜோஹோ ஊழியர் வாழ்க்கை பயணம்!

ஏப்ரல் 8-ம் தேதிக்குள் பறக்க விடப்படும்

ஏப்ரல் 8-ம் தேதிக்குள் பறக்க விடப்படும்

அதன்படி இந்த அதிநவீன இன்ஜெனூட்டி ஹெலிகாப்டரை வரும் ஏப்ரல் 8-ம் தேதிக்குள் பறக்க விடப்படும் என்று நாசாவின் அறிவியல் இயக்குனர் பாபி பிரவுன் அவர்கள் தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்த திட்டத்தின் மூலம் உலகத்திற்கு வேளியே முதல் முறையாக வேறு கிரகத்தில் ஹெலிகாப்டரை நாசா இயக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே திட்டத்தில் மொத்த குடும்பமும் பயனை அனுபவிக்கலாம்: BSNL ரூ.798 போஸ்ட்பெய்டு திட்டம் vs AIRTEL vs JIO vs Viஒரே திட்டத்தில் மொத்த குடும்பமும் பயனை அனுபவிக்கலாம்: BSNL ரூ.798 போஸ்ட்பெய்டு திட்டம் vs AIRTEL vs JIO vs Vi

இன்ஜெனூட்டி ஹெலிகாப்டரில்

அதேபோல் விமானத்தை கண்டுபிடித்த ரைட் சகோதரர்களின் முதல் விமானத்தின் ஒரு பகுதியை இன்ஜெனூட்டி ஹெலிகாப்டரில் இணைத்து உள்ளனர் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

உடனே முந்துங்கள்: தள்ளுபடினா அது இதுதான்- ரூ.10,000 வரை விலைக்குறைப்பு- ஸ்மார்ட்போன் வாங்க சரியான நேரம்!உடனே முந்துங்கள்: தள்ளுபடினா அது இதுதான்- ரூ.10,000 வரை விலைக்குறைப்பு- ஸ்மார்ட்போன் வாங்க சரியான நேரம்!

ரைட் சகோதரர்களின் சொந்த ஊரான

பின்பு ரைட் சகோதரர்களின் சொந்த ஊரான ஓகியோவின் டேட்டாலில் உள்ள வரலாற்று பூங்காவில் இருந்து அவர்களது முதல் விமானத்தின் கீழ் இருந்து ஒரு சிறிய அளவிலான மெல்லிய துணியை நாசாவின் வேண்டுகோளை ஏற்று நன்கொடை அளிக்கப்பட்டது. இதை செவ்வாய் கிரகத்தில் பறக்க உள்ள ஹெலிகாப்டரில் பொருத்தி உள்ளனர் என்று தகவல் வெளிவந்துள்ளது.

ரியல்மி 8, ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்.!ரியல்மி 8, ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்.!

பெர்சவரன்ஸ் ரோவர்

மேலும் பெர்சவரன்ஸ் ரோவர் தனது பயணத்தின் முதல்கட்ட சோதனை ஓட்டத்தை நிறைவு செய்துள்ளதாக நாசா அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக பூமியைத் தவிர உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவான அம்சங்கள் உள்ள கிரகங்களை விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாகத் தேடிக்கொண்டு இருக்கின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. செவ்வாய் கிரகம் இந்த ஆராய்ச்சியின் முக்கிய கிரகமாக இருந்து வருகிறது.

Image Courtesy: NASA

Best Mobiles in India

English summary
When will the smallest Ingenuity helicopter fly over Mars?: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X