நாசாவால் அனுப்பப்பட்ட பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரக்கத்தில் எப்போது தரையிறங்கும்? இது முழு விவரம்.!

|

நாசா அமைப்பு தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திக் கொண்டு தான் வருகிறது என்று கூறவேண்டும். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நாசா அமைப்பின் மூலம் அனுப்பப்பட்ட பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலம் ஆனது வரும் பிப்ரவரி 18-ம் தேதி
தரையிறங்க உள்ளது.

வெற்றிகரமாக தரையிறங்கினால்?

வெற்றிகரமாக தரையிறங்கினால்?

குறிப்பாக இது வெற்றிகரமாக தரையிறங்கினால் உயிர்கள் வாழ வாய்ப்பு இருக்கிறது என்று ஆராயும். அதேபோல் பூமியைத் தவிர உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவான அம்சங்கள் உள்ள கிரகங்களை விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாகத் தேடிக்கொண்டு இருக்கின்றனர்
என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. செவ்வாய் கிரகம் இந்த ஆராய்ச்சியின் முக்கிய கிரகமாக இருந்து வருகிறது.

பெர்சவரன்ஸ் ரோவர்

பெர்சவரன்ஸ் ரோவர்

குறிப்பாக நாசா அமைப்பின் ஜெ.பி.எல் என்ற ஆய்வகத்தால் பெர்சவரன்ஸ் ரோவர் வடிவமைக்கப்பட்டது. இது கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30-ல் புளோரிடாவில் உள்ள கேப் கெனவரல் விமானப்படைத் தளத்தில் இருந்து அட்லஸ் ராக்கெட் மூலம் இந்த செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Samsung Galaxy F62 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.. என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?Samsung Galaxy F62 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.. என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?

7 மாத பயணத்திற்கு பிறகு

7 மாத பயணத்திற்கு பிறகு

சரியாக 7 மாத பயணத்திற்கு பிறகு இந்த விண்கலம் செவ்வாய் கிரக்தை நெருங்கியுள்ளது. அதேபோல் இந்த விண்கலம் பூமியிலிருந்து ரோபோட்டிக் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக செவ்வாய் கிரகத்தின் ஜெசீரோ கிரேட்டர் என்ற 40 கி.மீ அகல பள்ளத்தில் பிப்ரவரி 18-ல் தரையிறங்க இலக்கு நிர்ணயித்துள்ளனர்;.

சுமார் 10 நிமிடம் முன்பு

வெளிவந்த தகவலின் அடிப்படையில் செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தை தொடும் பெர்சவரன்ஸ் ரோவர், அங்கிருந்து தரையை அடைய சுமார் 7 நிமிடங்ககள் எடுத்துக்கொள்ளும் என்றும், பின்பு வளிமண்டலத்தை நெருங்குவதற்கு சுமார் 10 நிமிடம் முன்பு விண்கலத்திலிருந்து ரோவர் விடுவித்துக்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ற்படும் அதிக வெப்பத்தை போக்க ஒரு அசத்தலான

அதேபோல் 13 ஆயிரம் மைல் வேகத்தில் செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்திற்குள் நுழையும். அப்போது உராய்வினால் ஏற்படும் அதிக வெப்பத்தை போக்க ஒரு அசத்தலான வெப்பக் கவசம் அதில் இடம்பெற்றுள்ளது. அதற்கு பின்பு ரோவர் மீண்டும் விண்கலமாக மாறி தன்னைத் தானே வழிநடத்தும்.

Best Mobiles in India

English summary
When will NASA's Perseverance Rover land on Mars?: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X