ஏலியன் விண்கலத்தை பின்தொடர்ந்து சென்ற அமெரிக்க விமானப்படை வீரர்...

அந்த மர்ம விண்கலம் 6 முதல் 8 இன்ச் சுற்றளவில் தூய வெள்ளை நிறத்தில் இருந்ததாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

|

அமெரிக்க அரசின் இரகசிய கோப்புகளில் இருந்து எடுக்கப்பட்டு கீழே விவரிக்கப்பட்டுள்ள சம்பவம், ப்ராஜெக்ட் ப்ளு புக் எனும் வரலாற்று தொடருக்கு உத்வேகத்தை அளித்துள்ளது.1950களில் அமெரிக்க விமானப்படைக்காக மர்ம பறக்கும் பொருட்கள் குறித்து விசாரித்த கேப்டன் எட்வர்ட் ஜே.ரப்பெல்ட், இதுவரை தென்பட்ட மர்ம பறக்கும் பொருட்களிலேயே கோர்மன் டாக்பைட் தான் பாரம்பரியமிக்கதாக உள்ளதாக குறிப்பிடுகிறார்.

ஏலியன் விண்கலத்தை பின்தொடர்ந்து சென்ற அமெரிக்க விமானப்படை வீரர்...

வானில் நடைபெற்ற விவரிக்க இயலாத இந்த சம்பவம், நார்த் டகோடாவில் உள்ள பார்கோவிற்கு மேலே அதிக உயரத்தில் வானில், இரண்டாம் உலகப்போரில் பங்குபெற்ற விமானப்படை வீரரான ஜார்ஜ் எப்.கோர்மன் சென்ற விமானமும் மற்றும் மர்ம வெள்ளை உருண்டையான பறக்கும் பொருளும் சுமார் 27 நிமிடங்கள் மோதிக்கொண்டன. 1948 அக்டோபர் 1ல் உள்ளூர் பத்திரிக்கைகளிடம் இது தொடர்பாக கருத்து தெரிவித்த கோர்மன் "இது போன்ற ஒன்றை இதுவரை பார்த்ததே இல்லை. வேறுயாராவது இது பற்றி என்னிடம் கூறியிருந்தால் அவர் பைத்தியம் என நினைத்திருப்பேன் " என்கிறார்.

 ப்ராஜெக்ட் ப்ளூ

ப்ராஜெக்ட் ப்ளூ

1947 முதல் 1969 வரை ப்ராஜெக்ட் ப்ளூ புக்கை செயல்படுத்திய கேப்டன் ரப்பெல்ட்டின் நோக்கம், தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் மர்ம பறக்கும் பொருட்களை கண்டறிவது மற்றும் அவை தொடர்பான தகவல்களை அறிவியல் பூர்வமாக ஆராய்வதாகும்.

ஆதாரங்கள்

ஆதாரங்கள்

தற்போது வெளியாகியுள்ள ப்ராஜெக்ட் ப்ளு புக்கின் இரகசிய ஆவணங்களில் எது கோர்மன் டாக்பைட்டை தனித்துவமாக்கியது எனில், அது இந்த சம்பவத்தின்நீளம் மட்டுமில்லாமல் பூமி மற்றும் வானிலிருந்து பல்வேறு ஆதாரங்கள் இதை பதிவுசெய்துள்ளன.

பார்கோ

பார்கோ

இந்த சம்பவம் நடைபெற்ற சமயத்தில், 25வயதான விமானப்படை வீரரான கோர்மன் இரண்டாவது லெப்டினன்டாக நார்த் டகோடா தேசிய விமான படையில் பணியாற்றிவந்தார்.

அனைத்து விமானிகளும் பார்கோ ஏர்போர்ட்டில் தரையிறங்கிய நிலையில், அந்த மாலை நேரத்தில் மேகமூட்டமில்லாத இரவை வானில் கழிக்க கோர்மன் மட்டும் பி51ல் பறந்துகொண்டிருந்தார். ஒளியால் நிரம்பியிருந்த கால்பந்து மைதானத்தை சுற்றி வந்த பிறகு இரவு 9 மணியளவில் தரையிறங்க முயன்ற போது, கட்டுப்பாட்டு அறையில் இருந்து மற்றொரு விமானம் தரையிறங்கவுள்ள கூறப்பட்டது. அதை தனக்கு கீழே 500 அடியில் அவரால் காண முடிந்தது. அவருக்கு வலதுபுறம் மற்றொரு விண்கலம் கடந்துசென்றது. ஆனால் கட்டுப்பாட்டு அறை ரேடாரில் ஒரு விமானம் இருப்பதாகவே கூறப்பட்டது.

கோர்மன்

கோர்மன்

அந்த மர்ம பறக்கும் பொருளை அருகிலிருந்து பார்க்க முடிவெடுத்த கோர்மன் தனது விமானத்தை செலுத்தினார். அந்த மர்ம விண்கலம் 6 முதல் 8 இன்ச் சுற்றளவில் தூய வெள்ளை நிறத்தில் இருந்ததாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

7000 அடியில்

7000 அடியில்

அந்த மர்ம விண்கலத்தை பின்தொடர முடிவெடுத்த கோர்மன், வீணாக அதை பிடிக்கவும் முயற்ச்சித்தார். இறுதியில் சுமார் 7000 அடியில் அதன் பின்னே கோர்மன் சென்ற நிலையில் திடீரென அந்த மர்ம விண்கலம் திரும்பி நேராக பி51ஐ நோக்கி வந்தது. கிட்டத்தட்ட இரண்டும் மோதிவிடும் நிலையில், சுமார் 500 அடி தொலைவில் டைவ் செய்து தனது திசையில் பயணித்தை தொடர்ந்தார். சுமார் 27 நிமிடங்கள் நீடித்த இந்த சம்பவத்திற்கு பிறகு கோர்மன் அந்த மர்ம பொருளை மீண்டும் காணமுடியாமல் தரையிறங்கினார் என்கிறார் அந்த இரகசிய ஆவணம்.

Best Mobiles in India

English summary
When a U.S. Fighter Pilot Got into a Dogfight with a UFO: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X