Subscribe to Gizbot

கிரகணங்கள் தெரியும், 28 நாட்களுக்குள் பூமியை அழிக்கும் இரத்த நிலா தெரியுமா.?

Written By:

நேற்று (திங்கட்கிழமை) இரவு 10:55 மணியளவில் சந்திர கிரகணம் ஆரம்பமாகி இரண்டு மணி நேரம் நீடித்தது மழைக்கால மேகங்கள் காரணமாக, இந்த சந்திர கரகணம் இந்தியாவின் வட பகுதிகளிலும், குறிப்பாக டெல்லியிலும் மிகவும் தெளிவாக தெரியவில்லை.

28 நாட்களுக்குள் பூமியை அழிக்கும் இரத்த நிலா தெரியுமா.?

இருப்பினும், இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இதுவாகும். வருகிற ஆகஸ்ட் 21 ஆம் தேதி - 1918-ஆம் ஆண்டுக்கு பின் ஒரு கரையில் இருந்து மறுகரை வரை நிழலால் ஆக்கிரமிப்பு செய்யும் - உலகின் மிக அழகான சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இந்த தசாப்தத்தின் மிகப்பெரிய வானியல் நிகழ்ச்சிகளில் ஒன்றான இதற்கு உலகின் மூலைமுடுக்கெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தங்களை தயார்ப்படுத்தி வருகின்றன.

சரி சந்திர - சூரிய கிரகணங்கள் எல்லாம் வழக்கமான ஒன்றுதானே. விண்வெளியில் வேறேதாவது புதுமையாக நிகழ்ந்துள்ளதா.? குறிப்பாக திகிலூட்டும் வண்ணம் அமைந்துள்ளதா.?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
இரத்த நிலா

இரத்த நிலா

இயற்கை கொஞ்சம் வித்தியாசமாக, அல்லது கொஞ்சம் விசித்திரமாக நடந்து கொண்டால் கூட, உடனே "உலகம் அழிய ஆரம்பித்து விட்டது" என்று குரல்கள் ஓங்கும், மறுபக்கம் "அறிவியல் என்று ஒன்று இருக்கிறது, அதை முதலில் நம்புங்கள். அது பொய் சொல்லாது" என்ற குரல்களும் ஓங்கும். அப்படியான இருவகை குரல்களையும் எழுப்பிய விண்வெளியில் விசித்திரமான நிகழ்வுதான் - இரத்த நிலா.

நம்பிக்கைகளும், பீதிகளும்

நம்பிக்கைகளும், பீதிகளும்

கடந்த ஆண்டு (செப்டம்பர் 27 மற்றும் 28, 2015) உலகின் பல்வேறு இடங்களில் தோன்றிய இரத்த நிலா பற்றிய பல்வேறு நம்பிக்கைகளும், பீதிகளும் உள்ளன. ரத்த நிலா - என்பது முழு சந்திர கிரகணத்தின் போது வெள்ளை நிலா முழுமையாக செம்பு கலந்த சிவப்பு நிறத்தில் உருமாறி விடும் என்பதாகும். அதாவது, உதயமாகும் அதிகாலை சூரியனைப் போல நிலா காட்சியளிக்கும்.

எண்ட் டைம் பிலிவர்ஸ்

எண்ட் டைம் பிலிவர்ஸ்

நிலாவில் ஏற்படும் இந்த சிவப்பு நிறத்திற்கு காரணம் உலகின் முறிவடையும் சூரியஒளி தான் காரணம் என்கிறார்கள் வான்வெளி ஆராய்ச்சியாளர்கள். ஆனால் மறுபக்கம்,ரத்த நிலா என்பது உலக அழிவின் ஆரம்பம் என்கிறார்கள் 'எண்ட் டைம் பிலிவர்ஸ்' (End-times believers) அதாவது உலகம் அழியும் என்று நம்புபவர்கள்.

28 நாட்களுக்குள் உலகம் அழியும்

28 நாட்களுக்குள் உலகம் அழியும்

அதனை தொடர்ந்து ரத்த நிலா தோன்றுதல் மூலம் உலகில் பயங்கரமான நில நடுக்கங்கள் ஏற்பட இருக்கிறது என்றும் சிலர் அறிவித்துள்ளனர். இதற்குகூடுதல் பலம் சேர்க்கும் வண்ணம் ரத்த நிலா தோன்றிய 28 நாட்களுக்குள் உலகம் அழியும் என்ற வதந்தியும் இன்டர்நெட்டில் தீயாய் பரவியது.

இயேசு பிறப்பு நடக்க போவதற்கான 'சமிக்ஞை'

இயேசு பிறப்பு நடக்க போவதற்கான 'சமிக்ஞை'

எல்லாவற்றிற்கும் மேலாக, அமெரிக்காவை சேர்ந்த பெரும் கிருஸ்துவ அமைப்பை சேர்ந்த இருவர், பைபிள் அடிப்படையில் இரத்த நிலா என்பது இரண்டாம் இயேசு பிறப்பு நடக்க போவதற்கான 'சமிக்ஞை' (Siganl) என்று பரப்புரை செய்தனர். மறுகையில், அறிவியலாளர்களும் விண்வெளி இயற்பியலாளர்களும் மேற்க்கூறப்பட்டுள்ள அத்துணை கருத்துகளுக்கும், "இரத்த நிலா ஒரு இயற்கையான நிகழ்வு தான்" என்று கூறி மறுப்பும் தெரிவுத்தனர்.

சூப்பர்மூன்

சூப்பர்மூன்

இரத்த நிலா தோன்றுதல் என்பது முதல் முறை ஒன்றுமில்லை, 1900-களில் மொத்தம் 5 முறை இரத்த நிலா தோன்றி உள்ளது என்கிறது நாசா. அதாவது, 1910, 1928, 1946, 1964 மற்றும் 1982-ஆம் ஆண்டுகளில் இரத்த நிலா தோன்றி உள்ளதாம். ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், பிற ரத்த நிலாக்களுடன் ஒப்பிடும் போது 2015-ஆம் ஆண்டு தோன்றிய இரத்த நிலா, சற்று அரிதான ஒன்றாகும், அதனால் தான் அது 'சூப்பர்மூன்' (Supermoon) என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படுகிறது.

மொத்தம் 62 முறை

மொத்தம் 62 முறை

நான்காம் இரத்த நிலாவானது அழிக்குமென்று கூறியவர்களுக்கு இது இயற்கையான ஒரு நிகழ்வாகும் முதலாம் நூற்றாண்டில் இருந்து இது வரை மொத்தம் 62 முறை இரத்த நிலா வெளிப்பட்டுள்ளது என்று கூறி அனைத்திற்கும் விண்வெளி ஆய்வாளர்கள் முற்றுப்புள்ளி வைத்தனர்.

பைபிள் மூலம் கிடைக்கப்பெற்ற பெயர்

பைபிள் மூலம் கிடைக்கப்பெற்ற பெயர்

மேலும் சூரிய கிரகணத்தை போல் அல்லாது, இந்த இரத்த நிலாவை காண எந்த விதமான சிறப்பு கண்ணாடிகளும், கண்களுக்கான பாதுகாப்புகளும் அவசியமுில்லை, வெறும் கண்களாலேயே இதை பார்க்க முடியும். இரத்த நிலா என்ற பெயர், பைபிள் மூலம் கிடைக்கப்பெற்ற பெயர் என்ற கருத்துக்கள் நிலவினாலும் அறிவியலாளர்கள் 'இரத்த நிலா' என்பதை ஒரு அறிவியல் பெயராக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

இரத்த நிலாவை குற்ற சொல்ல ஒரு கூட்டம்

இரத்த நிலாவை குற்ற சொல்ல ஒரு கூட்டம்

'லுனார் டெட்ரட்' என்ற இதேபோன்ற நிகழ்வானது வரும் 2032-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் தேதி அன்று தொடங்கும் என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். அப்போதும் உலகம் அழியும், பூகம்பம் கிளம்பும் என்று இரத்த நிலாவை குற்ற சொல்ல ஒரு கூட்டம் வரும் என்பதில் சந்தேகமில்லை.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
When telescopes beats each and every blood moon prophecy, Science won. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot