செவ்வாயில் நாசா கட்டும் வாழ்விடம் இப்படி தான் இருக்கும்!

அதைச் செய்ய, விண்வெளி வீரர்கள் உயிர் வாழ்வதற்கு ஏற்ப ஒரு சரியான வாழ்விடத்தை நாசா ஏற்படுத்தி தர வேண்டும். தற்போது அதற்காக அந்நிறுவனம் சாத்தியமான ஒன்றை கண்டுபிடித்துள்ளது.

|

நாசா நிறுவனம் செவ்வாய் கிரகத்தில் மனிதர்களுக்கான ஒரு காலணியை அமைக்க வேண்டும் என்று மற்ற அனைவரும் சுட்டிக்காட்டியது போலவே விரும்புகிறது.

செவ்வாயில் நாசா கட்டும் வாழ்விடம் இப்படி தான் இருக்கும்!

அதைச் செய்ய, விண்வெளி வீரர்கள் உயிர் வாழ்வதற்கு ஏற்ப ஒரு சரியான வாழ்விடத்தை நாசா ஏற்படுத்தி தர வேண்டும். தற்போது அதற்காக அந்நிறுவனம் சாத்தியமான ஒன்றை கண்டுபிடித்துள்ளது.

நாசா விண்வெளி நிறுவனம் சமீபத்தில் " மார்ஸ் 3டி பிரிண்ட் ஹேபிடேட் சேலன்ஜ்" என்று அழைக்கப்படும் போட்டியை நடத்தியது. அப்போட்டியில் பங்கேற்பவர்கள் செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு இருப்பிட மாதிரியை உருவாக்க வேண்டும். மொத்தமாக 60 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த போட்டியில், கட்டடக்கலை மற்றும் தொழில்நுட்ப வடிவமைப்பு நிறுவனமான ஏஐ ஸ்பேஸ்பேக்டரி, அதன் "மார்ஷா மார்ஸ் ஹேபிடேட்" இருப்பிட மாதிரிக்காக முதல் பரிசை தட்டிச்சென்றது.

போட்டியின் கடைசி கட்டத்தில் அவர்களது 15 அடி உயர முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட இருப்பிட முன்மாதிரி $ 500,000 பரிசை பெற்றுள்ளது.

செவ்வாயில் நாசா கட்டும் வாழ்விடம் இப்படி தான் இருக்கும்!

இப்போட்டியில் இரண்டாவது இடம் பிடித்த பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்திற்கு 200,000 டாலர் பரிசாக வழங்கப்பட்டது. இப்போட்டியின் முக்கிய விதிமுறை என்னவென்றால், மனிதர்களுக்கான இருப்பிடத்தை கட்டமைப்பதற்காக செவ்வாய் கிரகத்திற்கு எந்தவொரு கட்டுமான பொருட்களையும் எடுத்துச் செல்லக்கூடாது. அதாவது முற்றிலும் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் செவ்வாய் கிரகத்தில் கிடைக்கும் மற்ற பொருட்களைப் மட்டுமே பயன்படுத்தவேண்டும்.மேலும் கட்டுமானத்தில் அதிக மனித தலையீடு இல்லாமல் இருக்கும் வகையில் கட்டுமானத்திற்கு பயன்படும் வகையிலான ரோபோக்களையும் அவர்கள் உருவாக்க வேண்டும்.


மார்ஷா இருப்பிட மாதிரி போட்டி நடுவர்களால் மிகவும் விரும்பப்பட்டது. ஏனெனில் இந்த மாதிரியில் செவ்வாயில் கிடைக்கும் இயற்கையான பொருட்களை கொண்டு மக்கும் தன்மையுள்ள மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய கருங்கல் கலவையை திறமையான கையாண்டிருந்தனர். இது நாசாவின் அழுத்தம், புகை, மற்றும் தாக்க சோதனைகள் கடந்து, அனைத்து போட்டியாளர்களின் மாதிரிகளிலேயே மிகவும் நீடித்துநிலைத்த கட்டுமானமாக இது இருந்தது.


இந்த உயரமான கட்டமைப்பில் தேவையான அளவு காற்றிடம், பரவலான ஒளியமைப்பு, மூன்று ஜன்னல்கள், மற்றும் பல அடுக்குகள் கூட இருந்தது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
When Humans Go To Mars, This Is What Their 1st Houses Will Look Like According To NASA : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X