Just In
- 42 min ago
பிளிப்கார்ட்: பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் சியோமி பேண்ட் 3-ஐ.!
- 4 hrs ago
ஜியோ நிறுவனம் அறிவித்துள்ள கேஷ்பேக் சலுகை: பெறுவது எப்படி?
- 5 hrs ago
டிஜிட்டல் இந்தியா: 500 கோடி பே., போன் பே-ன் மொத்த பணப்பரிவர்த்தனை தகவல் வெளியீடு
- 6 hrs ago
நெட்ஃபிலிக்ஸ்: 50% சலுகையுடன் அறிமுகம் செய்துள்ள வருடாந்திர சந்தா இவ்வளவு தானா?
Don't Miss
- Movies
சும்மா கிழிக்க ரெடியா.. தர்பார் டிரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த லைகா!
- Sports
பிளாஷ்பேக் 2019 : உடைந்து போய் அழுத இளம் வீரர்.. ஆப்பு வைத்த ஐபிஎல்!
- News
குடியுரிமை சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. மேற்கு வங்கத்தில் 5 ரயில்கள், 15 பஸ்கள் தீ வைத்து எரிப்பு
- Finance
பிரதமர் மோடி பொய் சத்தியம் பண்ணி விட்டார்.. மன்மோகன் சிங் சாடல்!
- Automobiles
ஆரஞ்ச் நிறத்தில் ராயல் எண்ட்பீல்டு 350எக்ஸ் பிஎஸ்6 மாடல்... அடுத்த ஆண்டு அறிமுகம்
- Lifestyle
நீங்கள் செய்யும் இந்த செயல்கள் சனிபகவானின் கோபத்தை அதிகரிக்கும் தெரியுமா?
- Education
DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்! ஊதியம் ரூ.56 ஆயிரம்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வியாழன் கிரகத்தில் காத்திருக்கும் விபரீதங்கள்.! மனிதர்கள் போனால் என்னவாகும்?
ஒரு புதிய உலகத்தை ஆராய்வதற்கான சிறந்த வழி - அந்த நிலத்தில் தரை இறங்குவது தான். அதனால் தான் மனிதர்கள் நிலவு, வீனஸ், செவ்வாய், சனி, டைட்டன், மற்றும் இன்னும் பல கிரங்களுக்கு விண்கலங்களை அனுப்பியுள்ளனர். அதற்காக ஒட்டு மொத்த சூரிய மண்டலத்தின் "புரிதல்" நம்மிடம் உள்ளது என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். இன்னமும் சில "விசித்திரமான" மற்றும் "ஆச்சரியமான" இடங்கள் நம் சூரிய மண்டலத்தில் இருக்கின்றன தான் - அதில் ஒன்று தான் ஜூப்பிடர் எனும் வியாழன் கிரகம்.

ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்
வியாழன் கிரகமானது பெரும்பாலும் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களால் உருவாகி உள்ளது. எனவே, அதன் நிலத்தில் தரை இறங்குவது என்பது பூமியில் உள்ள ஒரு மேகத்தின் மேல் தரை இறங்குவதற்கு சமம். ஆம், வியாழன் கிரகத்தின் மேல் நாம் கால் பதிக்க அல்லது வீழ்ந்து பார்க்க, அதன் மேல் எந்தவிதமான மேல் ஓடும் கிடையாது. அது வெறும் வளிமண்டலத்தின் நீடித்த நீட்சி மட்டுமே ஆகும்.

மனிதர்கள் குதித்தால் என்னவாகும்?
இந்த இடத்தில் தான் மிகப்பெரிய கேள்வி ஒன்று எழுகிறது. வியாழன் என்பது வளிமண்டலத்தின் நீடித்த நீட்சி தான் என்றால் அதனுள் குதித்து மறுபக்கத்தின் வழியாக வெளியேற முடியுமா? பாதி தூரமாவது செல்ல முடியுமா? இந்த கேள்விக்கான பதிலை ஆராய்வோம் வாருங்கள். வியாழன் கிரகத்தில், மனிதர்கள் குதித்தால் என்னவாகும்?

எந்த விண்கலம் தாக்கு பிடிக்கும்?
முதலில் வியாழன் கிரகத்தில் தரை இறங்க எந்த விண்கலம் உதவும் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். வெளிப்படையாக பேச வேண்டும் என்றால், நாசாவின் ஓரியான் விண்கலத்தை விட அதன் லூனார் லேண்டர் ஒப்பீட்டளவில் மென்மையானது. வியாழன் உட்பட குறிப்பிட்ட வளிமண்டலத்தைக் கொண்டிருக்கும் எந்தவொரு கிரகத்தின் நிலப்பரப்பின் மீது தரை இறங்க நாசாவின் லூனார் லேண்டர் இதுவரை பயன்படுத்தப்பட்டதில்லை. இருப்பினும், எந்தவொரு விண்கலமும் வியாழன் கிரகட்டிகிள் நீண்ட காலத்திற்கு உயிர்வாழ முடியாது என்பதால் லுனார் லேண்டர் தான் ஓரளவிற்ரு நல்ல தேர்வு.

சரி தரை இறங்க தயாராகி விட்டோம்: என்னென்னெ ஆபத்துகள் காத்திருக்கின்றன?
முதல் ஆபத்து - வியாழனின் வளிமண்டலத்தில் எந்த ஆக்சிஜனும் இல்லை. எனவே தேவையான அளவு ஆக்சிஜனை கொண்டு செல்ல வேண்டும். அடுத்த பிரச்சனை உறிஞ்சும் வெப்பநிலை. எனவே ஒரு காற்றுச்சீரமைப்பானை (ஏசியை) கொண்டு செல்வதை உறுதி செய்ய வேண்டும்.

பயணத்தில் சந்திக்கும் சிக்கல்கள்!
வியாழன் கிரகத்தின் வளிமண்டலத்தின் மேல் நுழையும்போது, நீங்கள் வியாழனின் ஈர்ப்பு விசைகளின் நீளத்தின் கீழ் மணிக்கு 110,000 மீட்டர் வேகத்தில் பயணம் செய்கிறீர்கள். தயார் ஆகி கொள்ளுங்கள். நீங்கள் மிகவும் வேகமாக வியாழன் கிரகத்தின் அடர்த்தியான வளிமண்டலத்தை அடைவீர்கள். அது சுவற்றில் மோதியது போல் இருக்கும். ஆனாலும் கவலை வேண்டாம், அது உங்கள் பயணத்தை தடுக்க போதுமான சக்தியை கொண்டிருக்காது.

அடுத்த நொடியே!
சுமார் 3 நிமிடங்கள் கழித்து, நீங்கள் 155 மைல்கள் உயரமான மேகத்தின் உச்சியை அடைவீர்கள், அடுத்த நொடியே வியாழனின் கடுமையான சுழற்சியை அனுபவிப்பீர்கள். நமது சூரிய மண்டலத்திலேயே மிகவும் வேகமாக சுழலும் கிரகம் வியாழன் ஆகும். வியாழனில் ஒரு நாள் என்பது வெறும் 9.5 பூமி மணி நேரம் தான். சுமார் 3 நிமிடங்கள் கழித்து, நீங்கள் 155 மைல்கள் ஆழமான மேகத்தின் உச்சியை அடைவீர்கள், அடுத்த நொடியே வியாழனின் கடுமையான சுழற்சியை அனுபவிப்பீர்கள். நமது சூரிய மண்டலத்திலேயே மிகவும் வேகமாக சுழலும் கிரகம் வியாழன் ஆகும். வியாழனில் ஒரு நாள் என்பது வெறும் 9.5 பூமி மணி நேரம் தான். இன்னும் சற்று கீழ் இறங்க பூமியின் மேற்பரப்பில் உள்ள வெப்பத்தை விட கிட்டத்தட்ட 100 மடங்கு அதிகமாக வெப்பத்தை உணர்வீர்கள். அங்கு உங்களால் எதையும் பார்க்க முடியாது. இன்னும் கீழ் இறங்கினால், அதாவது 430 மைல்கள் கீழே இறங்க, அங்கு அழுத்தம் 1,150 மடங்கு அதிகமாக இருக்கும்.

சூரியனின் மேற்பரப்பைவிட சூடானதாக இருக்கும்!
2,500 மைல்கள் கீழே சென்றவுடன், வெப்பநிலை 6,100 º ஃபாரன்ஹீட் ஆகும். இது அண்டத்தில் மிக அதிக உருகுநிலை கொண்ட உலோகமான டங்க்ஸ்டனை உருகுவதற்கு போதுமான வெப்பமாகும். இந்த கட்டத்தை அடைய குறைந்தது 12 மணி நேர வீழ்ச்சியாவது தேவைப்படும், அது பாதி தூரம் கூட கிடையாது. 13,000 மைல்கள் கீழே, நீங்கள் வியாழனின் உள் அடுக்கை அடையலாம். அங்கே நிலவும் அழுத்தமானது பூமியின் மேற்பரப்பை விட 2 மில்லியன் மடங்கு வலுவானது. அந்த வெப்பநிலை சூரியனின் மேற்பரப்பைவிட சூடானதாக இருக்கும். இந்த சூழ்நிலைகள் மிகவும் தீவிரமானவை, அவை உங்களைச் சுற்றி உள்ள ஹைட்ரஜனின் வேதியியலை மாற்றியமைக்கின்றன.

சாத்தியமற்றதாக இருக்கும்!
ஹைட்ரஜன் மூலக்கூறுகள் மிக நெருக்கமாக ஒடுக்கப்பட்டிருக்கின்றன அதனால் அவற்றின் எலக்ட்ரான்கள் இழக்கப்படும், அங்கு உலோக ஹைட்ரஜன் என்று அழைக்கப்படும் அசாதாரணமான பொருள் உருவாக்கும். உலோக ஹைட்ரஜன் மிகவும் பிரதிபலிக்கும் என்பதால் அங்கு நீங்கள் விளக்குகளை பயன்படுத்தி அதைப் பார்க்க முயற்சித்தால், அது சாத்தியமற்றதாக இருக்கும். இந்த இடத்தில் தான் வியாழன் அதன் தள்ளு முள்ளு ஆட்டத்தை ஆரம்பிக்கும். ஈர்ப்பு உள்ளே இழுக்கும் மறுகையில் மிதக்கும் தன்மை உங்களை மேல்நோக்கி தள்ளும். இந்த இடத்தில் நீங்கள் மேலே நோக்கியும் செல்ல முடியாது கீழ்நோக்கியும் செல்ல முடியாது, தப்பிப்பதற்கு எந்த வழியும் இருக்காது - அவ்வளவு தான்!
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
32,990
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790