பூமிக்கு இரண்டு சூரியன் இருந்திருந்தால் எப்படி இருக்கும்? மரணித்து இருப்போம்!

அத்தகைய கெப்லர் -16 பி கிரகமானது என்னவாக, எவ்வளவு விசித்திரமாக இருக்கும்? என்பதெல்லாம் இரண்டாம் நிலை கேள்விகள்.

|

"என்ன இரண்டு சூரியன்களா?" என்று ஷாக் ஆகவோ, அல்லது "இதெல்லாம் ஆகுற காரியமா?" என்கிற நக்கலோ வேண்டாம். இது சாத்தியம் தான். அதற்கு உதாரணம் தான் - கெப்லர் -16 பி. ஆம் இந்த விசித்திரமான கிரகமானது, நெருக்கமான இடைவெளியை கொண்ட இரண்டு சூரியனை சுற்றி வருகின்றது.

இரண்டு சூரியன்களும், அதனால் பூமிக்கு ஏற்படும் கோளாறுகளும்!

அத்தகைய கெப்லர் -16 பி கிரகமானது என்னவாக, எவ்வளவு விசித்திரமாக இருக்கும்? என்பதெல்லாம் இரண்டாம் நிலை கேள்விகள். முதல் நிலை கேள்விகள் என்னவென்றால், கெப்லர் -16 பி கிரகத்தின் "விசித்திரமான" சூழ்நிலை பூமிக்கு வந்தால் என்னவாகும்? பூமி என்னவாக மாறும்? அதாவது நாள் ஒன்றிற்கு 24 மணி நேர சுழற்சி என்று வகுக்கப்பட்டு, அதில் 12 மணி நேரம் பகல், 12 மணி நேரம் இரவு என்று பிரிக்கப்பட்டு சுமூகமாக போய் கொண்டிருக்கும் நமது பூலோக வாழ்கைக்குள், கூடுதலாக (இரண்டாவதாக) ஒரு சூரியன் நுழைந்தால் என்னவாகும்?

கேள்விக்கு பதில்!

கேள்விக்கு பதில்!

இந்த கேள்விக்கான பதிலை விளக்குகிறார் - வாஷிங்டன் டி.சி யில் உள்ள கார்னகி இன்ஸ்டிடியூஷன் ஃபார் சயின்ஸ் ஆஃப் அஸ்ட்ரோபிலசிஸ்ட்டை சேர்ந்த ஆலன் பாஸ், இவர் கெப்லர் -16 பி கிரகத்தின் கண்டுபிடிப்புக் குழுவின் உறுப்பினராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பூமிக்கு ஒரு பைனரி நட்சத்திர அமைப்பு (இரண்டு சூரியன்கள்) இருந்தால் என்னவாகும்? என்கிற கேள்விக்கு அவரின் பதில்:

பூமியின் சூழ்நிலை எப்படி இருக்கும்?

பூமியின் சூழ்நிலை எப்படி இருக்கும்?

முதலில், கெப்லர் -16 பி ஒரு "சிறிய உறைபனி" கிரகம் என்று பாஸ் கூறுகிறார். பூமி மற்றும் சூரியனுக்கு இடையே இருக்கும் தூரத்தை விட, கெப்லர் -16 பி கிரகத்தின் இரண்டு நட்சத்திரங்கள் அதனுடன் மிக நெருக்கமாக இருந்தாலும் கூட, அந்த நட்சத்திரங்கள் மிகவும் பிரகாசமானவைகளாக இல்லாத காரணத்தினால், கெப்லர் -16 பி கிரகத்தின் வெப்பநிலை 200 கெல்வின் என்கிற புள்ளியில் அல்லது கிட்டத்தட்ட மைனஸ் 100 பாரன்ஹீட் ஆக இருக்கும். பூமிக்கும் அதே மாதிரியான ஒரு நிலை ஏற்படும் பட்சத்தில் பூமியின் சூழ்நிலை இன்னும் குளிரானதாக இருக்கும் என்கிறார் பாஸ்.

ஆண்டுகாலம் ஆனது 365 நாட்களுக்கு மேல் நீடிக்கும்!

ஆண்டுகாலம் ஆனது 365 நாட்களுக்கு மேல் நீடிக்கும்!

"ஒருவேளை பூமியானது இரண்டு நட்சத்திரங்களை (சூரியனை) சுற்றி வந்தால், பூமியின் ஆண்டுகாலம் ஆனது 365 நாட்களுக்கு மேல் நீடிக்கும், ஆனால் அது மிகக் கூடுதலாக இருக்காது. உதாரணத்திற்கு கெப்லர் கிரகத்தின் இரண்டு நட்சத்திரங்களில் ஒன்று சூரியனின் வெகுஜனத்தில் (எடை) 20 சதவிகிதத்தை கொண்டிருக்க, மற்றொன்று 70 சதவிகிதம் சூரிய வெகுஜனத்தை கொண்டுள்ளது. ஆக நமது சூரியனோடு ஒப்பிடும் போது வெறும் 10% சதவிகிதம் மட்டுமே குறைவாக உள்ளது. இது பூமியின் ஆண்டு காலத்தை சற்றே நீளமானதாக ஆக்கிவிடும். ஏனென்றால் நட்சத்திரங்களின் புவியீர்ப்பு நம்மை உள்நோக்கி இழுக்கும். அதன் விளைவாக குறைவான மையவிலக்கு விசை இருக்கும், அதனால் பூமியின் சுற்றுப்பாதை மெதுவாக இருக்கும், இறுதியில் ஆண்டு காலம் நீடிக்கும்" என்று பாஸ் விளக்கம் அளிக்கிறார்.

பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு!

பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு!

சர்கம்பைனரி கிரங்களையும் மற்றும் அதன் இயற்கையான செயற்கைக்கோள்களையும் எது உருவாக்கம் செய்கிறது என்பதற்கு விளக்கமான காரணம் மற்றும் கோட்பாடுகள் ஒருவருக்கும் தெரியாது. ஆனால் இது சாத்தியம் தான் என்பது மட்டும் உறுதி. மற்றொரு சுவாரசியமான தகவல் என்னவென்றால், சில விஞ்ஞானிகள், நம் சூரியனுக்கு ஒரு நட்சத்திர தோழன் இருந்ததாகவும், அது நெமிசிஸ் என்று அழைக்கப்படுவதாகவும், இது சூரியனின் ஈர்ப்புவிளைவினால் உடைக்கப்பட்டு விட்டதாகவும், பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பால்மண்டலத்தில் உருகி விட்டதாகவும் நம்புகிறார்கள். ஆக நம் சூரிய மண்டலத்தில் இரண்டு சூரியன்கள் இருந்துள்ளதா? வருங்காலம் தான் பதில் கூற வேண்டும்.

Best Mobiles in India

English summary
What Would Earth Be Like with Two Suns: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X