Home
Scitech

இது கேட்க ஈசியாக இருக்கலாம்; ஆனால் பின்விளைவுகள் விபரீதமாக இருக்கும்.!

கேட்பதற்கு வேண்டுமானால் மிக சர்வ சாதாரணமாக இருக்கலாம். ஆனால், பூமியின் காந்தப் புலம் பலவீனமாவதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பதை அறிந்தால் இதன் விபரீதம் புரிய வரும்.

சூரிய ஒளியின் கொடூரமான கதிர்வீச்சிலிருந்து, நமது பூமி கிரகத்தை பாதுகாக்கும் பூமியின் காந்தப் புலமானது முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு பலவீனமடைந்துள்ளது என்று, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (ESA) ஸ்வார்ம் செயற்கைக்கோள் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.

இது கேட்க ஈசியாக இருக்கலாம்; ஆனால் பின்விளைவுகள் விபரீதமாக இருக்கும்.!

10 மடங்கு விரைவாக பலவீனமடையும் பூமி கிரகத்தின் காந்த மண்டலத்தில் மிகப்பெரிய பலவீனமான புள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளது. அது பூமியின் மேற்பரப்புக்கு மேலே 370,000 மைல் (600,000 கிலோமீட்டர்) பரப்பளவிற்கு விரிந்துள்ளது. இந்த தகவல் கேட்பதற்கு வேண்டுமானால் மிக சர்வ சாதாரணமாக இருக்கலாம். ஆனால், பூமியின் காந்தப் புலம் பலவீனமாவதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பதை அறிந்தால் இதன் விபரீதம் புரிய வரும்.

அதற்கு முன்னர் எது தெற்கு.? எது வடக்கு.? எது கிழக்கு.? எது மேற்கு.? என்பதை கடைசியாக ஒருமுறை பார்த்து நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்; எப்போது வேண்டுமானாலும் அது தலைகீழாகலாம்; குளறுபடியாகலாம்.

News Source : www.nationalgeographic.com

துருவங்கள் தலைகீழாக மாறும் அபாயம்

துருவங்கள் தலைகீழாக மாறும் அபாயம்

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் மட்டுமின்றி, நாசா நிகழ்த்திய ஆய்வுகளும், உலகின் காந்த புலம் (Magnetic Field) பலவீனம் அடைந்து கொண்டே வருவதை உறுதி செய்துள்ளது. இந்த பலவீனம் மூலம் உலகின் துருவங்கள் (அதாவது வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு ஆகியவைகள்) தலைகீழாக மாறும் அபாயம் உள்ளதாகவும் நாசா எச்சரித்துள்ளது.

மனித இனதிற்கு பேரழிவு

மனித இனதிற்கு பேரழிவு

திசைகள் தலைகீழாக மாறுமா.? அதாவது காம்பஸ்கள் தலைகீழாக செயல்படும், எடுத்துக்காட்டுக்கு காம்பஸ்கள் வடக்கு திசையை காட்டுவதற்கு பதிலாக தெற்கு திசையை காட்டும். மேலும் தலைகீழாக மாறும் துருவங்கள் மனித இனதிற்கு பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும்.

நியண்டர்தால் இனத்தையே அழித்துள்ளது

நியண்டர்தால் இனத்தையே அழித்துள்ளது

குறிப்பிட்ட சில ஆய்வாளர்களின்படி, துருவங்கள் தலைகீழாக மாறிய விபரீதமான சம்பவம் நியாண்டர்தால் காலத்தில் நிகழ்ந்துள்ளது. அதாவது 41,000 ஆண்டுகளுக்கு முன்பு பனியுகத்தில் (Ice Age) நடந்த இந்த இயற்கை நிகழ்வு நியண்டர்தால் இனத்தையே அழித்துள்ளது.

பூமியின் துருவங்கள் புரட்டப்பட்டுள்ளது

பூமியின் துருவங்கள் புரட்டப்பட்டுள்ளது

அதுமட்டுமின்றி சுமார் 780,000 ஆண்டுகளுக்கு முன், காந்தப்புலத்தின் பலவீனம் காரணமாக பூமியின் துருவங்கள் புரட்டப்பட்டுள்ளது என்றும் சில விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

கடந்த 160 வருடங்களாக பலவீனம்

கடந்த 160 வருடங்களாக பலவீனம்

நாசாவின் மேவன் (MAVEN - Mars Atmosphere and Volatile Evolution) விண்கலம் மூலம் உலகின் காந்த புலம் பலவீனமடைந்து உள்ளதற்கான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த ஆதாரங்கள் மூலம், பூமியின் காந்த புலம் கடந்த 160 வருடங்களாக பலவீனம் அடைந்து கொண்டே வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

அடுத்த வரும் 100 ஆண்டுகளாகவும் இருக்கலாம்

அடுத்த வரும் 100 ஆண்டுகளாகவும் இருக்கலாம்

இதன் அடிப்படையில், காந்த புலம் சமப்படுத்துதல் மற்றும் காந்த முனைகள் தலைகீழாக புரட்டப்படும் சம்பவமானது இன்னும் 1000 ஆண்டுகளில் நடக்குமென்றும், அது அடுத்த வரும் 100 ஆண்டுகளாகவும் இருக்கலாம் என்றும் நாசா கணித்துள்ளது. காந்த புலத்தின் பலவீனமானது, பூமியின் திரவ வெளி மையத்தில் உள்ள இரும்பு அணுக்களை மறுசீரமைப்பு செய்யும், அதன் விளைவாக துருவங்கள் மாறும்.

அடுத்த 200 ஆண்டுகளுக்கு

அடுத்த 200 ஆண்டுகளுக்கு

மேலும் சில ஆய்வாளர்களின்படி, உலகத்தின் துருவங்கள் மெல்ல மெல்ல தான் புரட்டப்படுமே இன்றி உடனடியாக, ஒரேயடியாக புரட்டப்பட்டு விடாது. எது எப்படியோ நமது பூமி கிரகத்தின் துருவங்கள் தலைகீழாக மாறிய அடுத்த 200 ஆண்டுகளுக்கு பூமிக்கு காந்த புலமே இருக்காது.

கற்பனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.

கற்பனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.

வளிமண்டலத்தில், சூரிய கதிர்களிடம் இருந்து பூமியை காப்பாற்றுவதே காந்தபுலம் தான், அது பலவீனம் அடைந்தாலே பூமியில் உள்ள உயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுவது உறுதி என்கிற போது, இல்லாமல் போனால் என்னவாகும் என்பதை நீங்களே கற்பனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.

அழிவுமிக்க விபரீதங்களை பூமி சந்திக்கும்.

அழிவுமிக்க விபரீதங்களை பூமி சந்திக்கும்.

சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சு மற்றும் சூரிய வெடிப்பு, சூரிய காற்று மற்றும் சூரிய புயல் ஆகியவைகளை பூமி சந்திக்கும். சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களை நேரடியாக பெறுவதின் மூலம் தோல் புற்றுநோய், ஆற்றல் மற்றும் தொடர்பு இடையூறு தொடங்கி பல அழிவுமிக்க விபரீதங்களை பூமி சந்திக்கும்.

டெர்ராஃபார்மிங்

டெர்ராஃபார்மிங்

இந்த இடத்தில், செவ்வாய் கிரகத்தை நினைவுகூர விரும்புகிறேன். செவ்வாய் கிரகத்தை மனிதர்கள் வாழ தகுந்த ஒரு இடமாக மாற்ற வேண்டும் என்ற என்ணத்தையே டெர்ராஃபார்மிங் (Terraforming) என்பர்.

நம்பிக்கை அதிகரித்தது

நம்பிக்கை அதிகரித்தது

பூமிக்கும் செவ்வாய் கிரகத்திற்க்கும் உள்ள இடைவெளியான 54.6 மில்லியன் கிலோமீட்டர்களை கடந்து செவ்வாயில் நீர் ஆதாரம் இருப்பதை கண்டுப்பிடித்ததின் மூலம் டெர்ராஃபார்மிங் மேல் நம்பிக்கை அதிகரித்தது. தொடர்ச்சியான ஆய்வுகளில் இருந்து, செவ்வாய் கிரகமானது பூமி கிரகம் போன்றே தான் சுற்று சூழலை கொண்டிருந்துள்ளது கண்டறியப்பட்டது.

அடுத்தது பூமியா.?

அடுத்தது பூமியா.?

ஆனால், கொடுமையான சூரிய காற்று மூலம் செவ்வாய் கிரகம் தனது நீர் ஆதாரம் மற்றும் சுற்றுப்புறசூழல் ஆகியவைகளை முற்றிலுமாக இழந்துள்ளது. பூமி கிரகத்திற்கு இருப்பது போன்ற காந்தபுல (Magenetic Field) பாதுகாப்பு செவ்வாய் கிரகத்திற்கு இல்லாத காரணத்தால் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அடுத்தது பூமியாக கூட இருக்கலாம்.?!

Best Mobiles in India

English summary
What Will Happen When the Earth’s Magnetic Field Begins to Reverse. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X