நிகழப்போகும் பேராபத்து; ஆட்டம் காணும் பூமி கிரகம்! பின்னணி என்ன?
சரி இந்த கட்டுரைக்கும் பூமியின் வயதிற்கும் என்ன தொடர்பு? என்று கேட்டால், தொடர்பு இருக்கிறது.
உங்களின் வயது என்ன என்று கேட்டால்? சிலரிடம் இருந்து பதில் வரும், சிலருக்கோ கோபம் வரும். ஆனால் இதே கேள்வியை பூமியிடம் கேட்டால், பதிலும் வராது, கோபமும் வராது. ஏனெனில், மனித இனத்துடன் போராடி - போராடி, பூமிக்கு அலுத்து வெறுத்து போய் விட்டது.

சரி இந்த கட்டுரைக்கும் பூமியின் வயதிற்கும் என்ன தொடர்பு? என்று கேட்டால், தொடர்பு இருக்கிறது. இந்த கட்டுரைக்குள் போகும் முன் நாம் மிதிக்கும் அல்லது நம்மை தாங்கும் இந்த பூமிக்கு வயதாகி விட்டது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

பூமியின் வரலாறு!
சோகமும் சுவாரசியமும் என்னவென்றால் நாம் வாழும் இந்த பூமியின் துல்லியமான வயது யாருக்குமே தெரியாது. சோலார் நெபுலாவில் ஆரம்பித்து தற்போது மையம் கொண்டு இருக்கும் சூரிய குடும்பம் வரையிலாக பூமியின் வரலாறு ஆனது சுமார் 4 பில்லியன் ஆண்டுகள் அதாவது 4,567,000,000 ஆண்டுகள் வரை நீள்கிறது. மேற்கூறியது போல் இது வரையறுக்கப்பட்டுள்ள தரவு ஆகும், துல்லியமான தரவு அல்ல. சரி இப்போது கட்டுரைக்குள் செல்வோம்

மனிதர்களுக்கு நற்செய்தியாக இருக்காது!
சரி திசைமானியை பார்த்து உள்ளீர்களா? அது வடக்கு மற்றும் தென் துருவத்தை காட்டும் இரண்டு கூர்களை கொண்டு இருக்கும். ஒரு காலத்தில், அதாவது நூறாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், நமது கிரகத்தில் நான்கு, ஆறு, மற்றும் எட்டு துருவங்கள் ஒரே நேரத்தில் இருந்தன என்று சான்றுகள் கூறுகின்றன. அது எப்படி சாத்தியம் ஆனது, கடந்த காலங்களில் நிகழ்ந்த காந்த துருவ சுழற்சி தான் அதற்கு காரணம். அது மீண்டும் நிகழும் பட்சத்தில், அது பூமிக்கு ஒரு சிக்கலையும் தராது, ஆனால் மனிதர்களுக்கு நற்செய்தியாக இருக்காது.

எட்டு துருவங்கள்
ஒருவேளை நீங்கள் நினைக்கலாம், இரண்டு துருவங்களுக்கு பதிலாக எட்டு துருவங்கள் இருப்பது நல்ல விடயம் தானே? அதனால் என்னவாகி விட போகிறது? உண்மை என்னவென்றால், எட்டு அல்ல ஆறு துருவங்கள் உருவாகினால் கூட காந்த புலங்கள் ஒன்றுக்கொன்று முரட்டு தனமாக மோதி கொள்ளும். இந்த (குழப்பம்) மோதல் ஆனது, பூமியின் பாதுகாப்பு காந்தப்புலத்தை சுமார் 90 சதவிகிதம் வரை வலுவிழக்கச் செய்யலாம்.

பூமியின் பாதுகாப்பு காந்தப்புலம் வலுவிழந்தால் என்னவாகு
தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சிலிருந்து நம்மை பாதுகாப்பதே - பூமியின் காந்தப்புலம் தான். தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சுகள் ஆனது செல்களை சேதப்படுத்தும், புற்றுநோயை ஏற்படுத்தும், மற்றும் வறுத்தெடுக்கும் மின்னணு சுற்றுகள் மற்றும் மின் கட்டங்கள் ஆகியவற்றையும் கொண்டிருக்கும். சில ஆய்வாளர்களின் கருத்தின் படி, பூமியின் பலவீனமான காந்தப்புலம் ஆனது, அதிக அளவிலான கதிர்வீச்சின் பலனாக விமான பயணங்களை ஆபத்தானதாக மாற்றும்.

விண்வெளியிலும் சில "கூத்துகள்" நடக்கும்
விமான பயணங்களை மட்டுமின்றி இண்டர்னெல் காம்பஸ்களை (காலம் காலமாக பழக்கப்பட்ட திசை கண்டறியும் திறன்)பயன்படுத்தும் விலங்குகளையும் பயணிக்க விடாமல் குழப்பும். ஒரு கட்டத்தில் பூமி ஒரு தீவிரமான கிரகமாக மாறி, வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான சில இடங்களை கிரகத்தில் உருவாக்கும். பூமியின் மேற்பரப்பு மட்டும் அல்ல, விண்வெளியிலும் சில "கூத்துகள்" நடக்கும். இன்னும் சொல்லப்போனால், நாடாகும் என்பதை விட விண்வெளியில் என்னென்ன நடக்கும் என்பதை நம்மால் உறுதியாக கூற முடியும்.

அப்படி என்ன நடக்கும்?
செயற்கைக்கோள்கள், விண்வெளி நிலையங்கள் மற்றும் அதில் உள்ள குழுவினருக்கான விண்வெளிப் பணிகள் சாத்தியம் ஆவதற்கு நமக்கு கூடுதலான பாதுகாப்புகள் தேவைப்படும். குறிப்பிட்ட பாதுகாப்புகளை நாம் உறுதி செய்யவில்லை என்றால், இன்டென்ஸ் காஸ்மிக் மற்றும் சூரிய கதிர்வீச்சு ஆனது விண்வெளி வீரர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான ஆபத்தை அதிகரிக்கும்.

இதெல்லாம் சாத்தியமா? ஆதாரம் இருக்கிறதா?
இருக்கிறது. சவுத் அட்லாண்டிக் அனாமலி என்று அழைக்கப்படும் பகுதியின் ஆழத்தில் காந்த புலத்தின் ஒரு பகுதி ஆனது ஏற்கனவே திசை திரும்பி உள்ளது. கடந்த 1840 ஆம் ஆண்டு முதல் இப்பகுதி துல்லியமாக பலவீனமடைந்து வருவதற்கு இந்த "புரட்டல்" தான் காரணம் என்றும் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இதன் விளைவாக, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப் மற்றும் பிற செயற்கைக்கோள்கள் -இந்த பகுதியை கடக்கும் போது - பெரும்பாலும் தங்கள் மின்னணுவியல் மின்னாற்றலை இழக்கின்றன என்கிறது ஆய்வுகள்.

விளிம்பில் இருக்கிறோம்!
மேற்குறிப்பிட்டுள்ள அனாமலி (முரண்பாடு) ஆனது கடந்த சில தசாப்தங்களாக வல்லுனர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதிர்ச்சி என்னவெனில் ஆரம்பத்தில் இருந்த அளவை காட்டிலும் தற்போதைய அளவு வளர்ச்சி அடைந்து உள்ளது. சமீபத்தைய புள்ளிவிவரங்களின் படி, பூமியின் மேற்பரப்பில் ஐந்தில் ஒரு பங்கை (அதாவது 20.3%) இந்த பாதிப்பு ஆட்கொண்டு உள்ளதாம். ஆக நாம் ஒரு துருவ புரட்டலுக்கான விளிம்பில் இருக்கிறோம் என்றே வைத்து கொள்ளலாம்.

பூமிக்கு வயதாகி விட்டதல்லவா?!
நம்மால் ஒரு துருவ புரட்டலை நிறுத்த முடியாது, ஆனால் குறைந்தபட்சம் நிகழும் சேதங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம். அவ்வளவுதான் எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானால் நடக்கலாம், பூமிக்கு வயதாகி விட்டதல்லவா?!


Click it and Unblock the Notifications